Warning: Trying to access array offset on value of type bool in /home/u197248563/domains/factseeker.lk/public_html/wp-content/plugins/wp-custom-taxonomy-image/wp-custom-taxonomy-image.php on line 15

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the base_theme domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. மேலும் விவரங்களுக்கு வர்ட்ப்ரஸ்ஸில் வழு நீக்கல் -ஐப் பார்க்கவும் (இந்த செய்தி 6.7.0-ஆம் பதிப்பூரில் சேர்க்கப்பட்டது.) in /home/u197248563/domains/factseeker.lk/public_html/wp-includes/functions.php on line 6170
டிஜிட்டல் யுகத்தின் ஏமாற்று வேலைகள்: மத்திய கிழக்கு போர் குறித்த பொய் செய்திகளின் உண்மை பின்னணி – Factseeker Tamil டிஜிட்டல் யுகத்தின் ஏமாற்று வேலைகள்: மத்திய கிழக்கு போர் குறித்த பொய் செய்திகளின் உண்மை பின்னணி – Factseeker Tamil
Notice: Function WP_Scripts::localize was called incorrectly. The $l10n parameter must be an array. To pass arbitrary data to scripts, use the wp_add_inline_script() function instead. மேலும் விவரங்களுக்கு வர்ட்ப்ரஸ்ஸில் வழு நீக்கல் -ஐப் பார்க்கவும் (இந்த செய்தி 5.7.0-ஆம் பதிப்பூரில் சேர்க்கப்பட்டது.) in /home/u197248563/domains/factseeker.lk/public_html/wp-includes/functions.php on line 6170
Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #AI generated
  • #FAKE

டிஜிட்டல் யுகத்தின் ஏமாற்று வேலைகள்: மத்திய கிழக்கு போர் குறித்த பொய் செய்திகளின் உண்மை பின்னணி

False
False

2026 மத்திய கிழக்கு போரை FactSeeker உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. உண்மை மேலோங்குவதை உறுதி செய்ய, சமூக வலைதளங்களில் வைரலாகும் பொய் செய்திகளையும், திட்டமிட்டுப் பரப்பப்படும் செயற்கை நுண்ணறிவு (AI) ஏமாற்று வேலைகளையும் factseeker தொடர்ந்து முறியடித்து வருகின்றது.

by Anonymous |

மார்ச் 30, 2026

ஆக்கம்: ஆர். யசிஹரன் | FactSeeker

 மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் குறித்து, டிஜிட்டல் களமும் போர்முனைக்கு இணையான ஆபத்துக்கள் நிறைந்தது என்பதை நிரூபித்துள்ளது. உண்மையை விட வதந்திகள் வேகமாகப் பரவி வரும் சூழலில், பயத்தையும் பிரிவினையையும் தூண்டும் வகையில் திட்டமிட்டுப் பரப்பப்படும் பொய்களை FactSeeker தொடர்ந்து முறியடித்து வருகிறது.

1. ஏமனில் நடந்த பழைய மோதல்

தவறான தகவல்: “SilencedSirs” என்ற எக்ஸ் (X) கணக்கில் பகிரப்பட்ட காணொளியில், ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேலிய வீரர்களை “பறவைகளை வேட்டையாடுவது போல்” தாக்குவதாகக் கூறப்பட்டது. https://x.com/AlymnyAlsq81595/status/2034917992954200424

உண்மைத் தரவுகள்: இந்த காணொளியை ஆய்வு செய்தபோது, இது 2024 ஏப்ரல் 3 அன்று சமூக வலைதளங்களில் பதிவேற்றப்பட்டது எனத் தெரியவந்தது. இது உண்மையில் ஏமன் நாட்டின் கர்ஷ் முனையில் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும் தெற்கு இடைக்கால கவுன்சிலுக்கும் இடையே நடந்த மோதலாகும். இதற்கும் தற்போதைய போருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

2. ரஷ்ய இராணுவ விபத்து ஹிஸ்புல்லா தாக்குதலாக சித்தரிப்பு

தவறான தகவல்: “GBX_Press” என்ற கணக்கில் பதிவிடப்பட்ட காணொளி, ஹிஸ்புல்லா நடத்திய தாக்குதலில் ஏராளமான இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டதாக பகிரப்படுகின்றது.   https://x.com/GBX_Press/status/2038359176519565721

உண்மைத் தரவுகள்: இது இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சமூக வலைதளங்களில் பகிரப்படும் காணொளியாகும். இது 2024 ஏப்ரல் 26 அன்று ரஷ்யா-உக்ரைன் போரின் போது ரஷ்ய வீரர்கள் தற்செயலாக ஒரு கண்ணிவெடியை மிதித்தபோது ஏற்பட்ட விபத்தாகும். பழைய போர்க்களக் காட்சிகளைப் பயன்படுத்தித் தற்போதைய மோதலில் ராணுவ வெற்றிகளைப் போலியாகச் சித்தரிக்க இந்த உத்தி பயன்படுத்தப்படுகிறது.

News Link :https://www.dailystar.co.uk/news/world-news/russian-soldiers-trying-destroy-mine-32679421

3. டெக்சாஸ் காகங்கள் டெல் அவிவ் நகரின் தீய நிமித்தமாக சித்தரிப்பு

தவறான தகவல்: “FalconUpdatesHQ” கணக்கில் பகிரப்பட்ட வீடியோவில், டெல் அவிவ் நகரில் ஆயிரக்கணக்கான காகங்கள் சூழ்ந்துள்ளதாகவும், இது ஒரு பெரும் அழிவின் அறிகுறி என்றும் கூறப்பட்டது. https://x.com/FalconUpdatesHQ/status/2036725475150803176

உண்மைத் தரவுகள்: இந்த வீடியோவிற்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இது 2024 ஆம் ஆண்டு அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஒரு வாகன நிறுத்தத்தில் காகங்கள் சூழ்ந்திருந்தபோது எடுக்கப்பட்ட சாதாரண இயற்கை நிகழ்வாகும். மக்களிடையே தேவையற்ற பயத்தை உருவாக்க இத்தகைய பழைய வீடியோக்கள் தற்போது பயன்படுத்தப்படுகின்றன.

Link : https://www.reddit.com/r/TheRandomest/comments/1del79d/ill_be_sure_to_stay_away_from_texas/?share_id=70ysofbJ5mfPbjc-9ZolX&utm_content=1&utm_medium=ios_app&utm_name=ioscss&utm_source=share&utm_term=1

4. ஹாங்காங் அடுக்குமாடி தீ விபத்து டெல் அவிவ் குண்டுவெடிப்பு எனப் பொய்ப் பரப்புரை

தவறான தகவல்: “AlymnyAlsq81595” என்ற கணக்கு, வானளாவிய கட்டிடங்கள் தீப்பற்றி எரியும் காட்சியைப் பகிர்ந்து, “டெல் அவிவ் நகரில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்புகள்” என பகிரப்படுகின்றது.  https://x.com/AlymnyAlsq81595/status/2033656687576379656

உண்மைத் தரவுகள்: இந்த காணொளி உண்மையில் 2025 டிசம்பர் 4 அன்று ஹாங்கொங் நகரில் உள்ள 35 அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தின் காட்சியாகும். ஒரு சிவில் விபத்தை போர்ச் செய்தியாக மாற்றி, மக்களிடையே பீதியை கிளப்ப இத்தகைய பழைய காட்சிகள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன.

Link : https://www.bhaskarenglish.in/international/news/4-dead-hong-kong-fire-20-photos-279-injured-fire-spread-through-bamboo-scaffolding-eight-35-story-buildings-136522170.html

5. செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட போலிப் படம்

தவறான தகவல்: “அயதுல்லா அலிரேசா அராபி” என்ற பெயரிலான கணக்கு, இஸ்ரேலிய குடியிருப்புகளில் பெரும் வெடிப்பு ஏற்படுவது போன்ற ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து இது உண்மையா என வினவியிருந்தது.  https://x.com/Realarafi/status/2033085013735198854

உண்மைத் தரவுகள்: FactSeeker இந்த படத்தை ஆய்வு செய்தபோது, இதில் வாகனங்கள் மற்றும் கட்டிடங்களின் வடிவங்கள் சிதைந்தும், ஒன்றுடன் ஒன்று கலந்தும் (AI Hallucinations) காணப்படுவதை உறுதி செய்தது. இது டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்ட ஒரு போலி பிம்பமாகும்.

முடிவு: உண்மைக்கான போராட்டம்

2026-ஆம் ஆண்டு மத்திய கிழக்கு போர் உலகளாவிய தலைப்புச் செய்திகளில் தொடர்ந்து இடம்பெற்று வரும் நிலையில், டிஜிட்டல் தளம் தவறான தகவல்களைப் பரப்பும் கூடாரமாக மாறியுள்ளது. இத்தகைய பொய்ப் பரப்புரைகளுக்கு மத்தியில் உண்மையை வெளிக்கொண்டு வருவதில் FactSeeker உறுதியாக உள்ளது. பிக்சல்களாலும் (pixels) பிரச்சாரங்களாலும் தூண்டப்படும் ஒரு போரில், ஒரு குடிமகன் பெற்றிருக்கக்கூடிய மிகச்சிறந்த ஆயுதம் ‘விழிப்புணர்வு’ மட்டுமே. பகிர்வதற்கு முன் எப்போதும் சரிபார்க்கவும், ஏனெனில் டிஜிட்டல் யுகத்தில், உண்மை உங்கள் கைகளிலேயே உள்ளது.

[Sassy_Social_Share]

Latest updates

#AI generated

‘ராட்சத ஆலங்கட்டி மழை’ பகிரப்படும் வீடியோ போலியானது: AI மூலம் உருவாக்கப்பட்ட கற்பனை

மே 28, 2026

#FAKE

வடமாகாணத்தில் வெசாக் கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதாக பகிரப்படும் போலிச்செய்தி

மே 27, 2026

#explainer

” எல் நினோ” 2026: வதந்திகளும்- உண்மைப் பின்னணியும்

மே 24, 2026

#false

புதிதாக நியமிக்கப்பட்ட ரத்துகல ஆதிவாசித் தலைவர் பல்கலைக்கழக மாணவர் என்ற செய்தி முற்றிலும் தவறானது

மே 14, 2026

Related Content

‘ராட்சத ஆலங்கட்டி மழை’ பகிரப்படும் வீடியோ போலியானது: AI மூலம் உருவாக்கப்பட்ட கற்பனை

மே 28, 2026

வடமாகாணத்தில் வெசாக் கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதாக பகிரப்படும் போலிச்செய்தி

மே 27, 2026

இலங்கை மத்திய வங்கி புதிய 10,000 ரூபாய் பணத்தாள் வெளியிட்டுள்ளதா?

மே 10, 2026

அமெரிக்க தூதரகம் தொடர்பான ‘பொக்ஸ் நியூஸ்’ இன் லோகோவுடன் பகிரப்படும் போலியான செய்தி

மார்ச் 24, 2026

ஈரானிய கடற்படைக் கப்பல் தாக்கப்பட்டமை குறித்து இந்திய ராணுவத் தளபதி கூறியதாக பரவும் போலி வீடியோ

மார்ச் 11, 2026

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2026 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection