Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #false

நீர்கொழும்பு சிறைச்சாலை பெண் கைதி குறித்து பரவும் உருக்கமான கதை முற்றிலும் கற்பனையானது

Factual
Factual

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண் கைதி காதலனால் சிறை சென்ற மருத்துவப் பீட மாணவி என சமூக ஊடகங்களில் பரவும் உருக்கமான கதை முற்றிலும் கற்பனையானது என 'factseeker ' உறுதிப்படுத்துகின்றது.

by Anonymous |

ஜூலை 14, 2026

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த ஜூலை 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் கைதிகளுக்கிடையே மோதல் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன. இது தொடர்பான காணொளிகளும் புகைப்படங்களும் அண்மை நாட்களாக சமூக வலைதளங்களில் பெருமளவில் பகிரப்பட்டு வருகின்றன. குறிப்பாக, இச்சம்பவத்தின் போது சில பெண் கைதிகள் சிறைச்சாலையின் கூரை மீது ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த காணொளி இணையவாசிகள் மத்தியில் பலத்த பேசுபொருளாகியிருந்தது.

இந்தக் காணொளி வைரலாகி வந்த அதேநேரம், கூரையின் மேல் நின்றிருந்த பெண் கைதிகளில் ஒருவரது புகைப்படம் சமூக ஊடகங்களில் தனித்து பகிரப்படத் தொடங்கியது.

அந்தப் பெண் மருத்துவப் பீடத்திற்குத் (Medical Faculty) தெரிவானவர் என்றும், தனது காதலன் செய்த குற்றத்திற்காக அவர் சிறை செல்ல நேரிட்டது என்றும் கூறி, ஒரு உருக்கமான கதையுடன் கூடிய பதிவுகள் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் பேஸ்புக் (Facebook) மற்றும் இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கங்களில் காட்டுத்தீயாகப் பரவின.

பொதுமக்களின் கவனத்தை ஈர்த்த இந்த உணர்ச்சிமயமான கதையை, சில பிரதான ஊடகங்களும் உண்மைத்தன்மையை ஆராயாமல் செய்தியாகப் பிரசுரித்திருந்தன. அண்மை

நாட்களாக சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய இப்பதிவின் உண்மைத்தன்மை என்னவென்று கண்டறியுமாறு  FactSeeker இற்கு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, இது குறித்த புலனாய்வை FactSeeker முன்னெடுத்தது.

சமூக வலைதளங்களில் பகிரப்படும் பதிவுகளின் சான்றுகள்:
சிங்கள மொழிப் பதிவுகள்:

  • facebook Reel: Link to Viral Video

  • Facebook Profile Post: Link to Viral Story

  • Travel Group Post: Link to Shared Post

  • Public Page Post: Link to News Post

  • Community Group Post: Link to Shared Story

தமிழ் மொழிப் பதிவுகள்:

  • Tamil Page Post 1: Link to Translated Story

  • Tamil Page Post 2: Link to Shared Post

  • Tamil Video Reel: Link to Viral Tamil Reel

இன்ஸ்டாகிராம் பதிவு:

Instagram Post: Link to Image/Text Post

FactSeeker நடத்திய உண்மைச் சரிபார்ப்பு:

1. “புலனாய்வு ஊடகவியலாளர்” பற்றிய பின்னணி

வைரலாகப் பரவி வரும் இக்கதைகள் அனைத்திலும், இத்தகவலை எழுதியவர் நளிந்த தனரஞ்சன் (Nalinda Danaranjan) என்ற “புலனாய்வு ஊடகவியலாளர்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், வெவ்வேறு பதிவுகளில் அந்தப் பெண்ணின் பெயர் வெவ்வேறாக மாற்றப்பட்டிருந்ததையும் அவதானிக்க முடிந்தது.

எனவே, பிரதான ஊடகங்களில் பணியாற்றும் புலனாய்வு ஊடகவியலாளர்கள் எவரேனும் இந்த பெயரில் உள்ளனரா என்று FactSeeker ஆராய்ந்தது. ஆனால், இலங்கையின் செய்தித் துறையில் நளிந்த தனரஞ்சன் என்ற பெயரில் எந்தவொரு புலனாய்வு ஊடகவியலாளரும் பணியாற்றுவதற்கான எவ்வித ஆதாரமும் கிடைக்கவில்லை.

2. மூலப் பதிவை (Original Source) கண்டறிதல்
தொடர்ந்து இக்கதையின் பின்னணியை ஆராய்ந்தபோது, இப் பெயரில் இரண்டு பேஸ்புக் கணக்குகள் இயங்குவதை ஃபேக்ட்சீக்கர் கண்டறிந்தது. அவை: “Clicked By Naalinda” மற்றும் “Naalinda Danaranjan” ஆகும்.

இதில் “Clicked By Naalinda” என்ற பக்கம் ஒரு புகைப்படக் கலைஞரின் பக்கமாகும். அதில் மாடல்களின் (Models) புகைப்படங்கள் மட்டுமே காணப்பட்டன. எனினும், அவரது தனிப்பட்ட கணக்கான “Naalinda Danaranjan” (https://www.facebook.com/naalindadanaranjan) என்ற பக்கத்திலேயே குறித்த பெண் கைதி பற்றிய அந்த உருக்கமான கதை முதன்முதலில் எழுதப்பட்டிருந்தமை உறுதியானது.

மிக முக்கியமாகமிக முக்கியமாக, குறித்த நபர் தனது முகப்புத்தகப் பதிவில் தன்னை ஒரு “புலனாய்வு ஊடகவியலாளர்” (Investigative Journalist) என போலியாக அடையாளப்படுத்தியுள்ளார். சமூகத்தை ஏமாற்றி, தனது கற்பனைக் கதையை உண்மை என நம்ப வைப்பதற்காகவே அவர் இத்தகைய முற்றிலும் பொய்யான ஒரு அடையாளத்தைப் பயன்படுத்தியுள்ளார் என்பது எமது விசாரணையில் தெளிவாகின்றது.

3. கதையை எழுதியவரின் நேரடி வாக்குமூலம்

நளிந்த தனரஞ்சனை factseeker தொடர்புகொண்டு வினவியபோது ” தான் விநோதமாக இதனை கற்பனையில் எழுதியதாகவும், தனது facebook பக்கத்தின் பின்தொடர்பாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் இவ்வாறு செய்ததாக அவர் குறிப்பிட்டார். இதேபோன்று சுயாதீன உண்மைச் சரிபார்ப்பு நிறுவனமான ‘Fact Crescendo’  நளிந்த தனரஞ்சனைத் தொலைபேசி ஊடாகத் தொடர்புகொண்டு வினவியிருந்தது.

இதன்போது பதிலளித்த நளிந்த தனரஞ்சன், “அந்தப் பெண் கைதி தொடர்பாக நான் பதிவிட்ட கதை முற்றிலும் எனது சொந்தக் கற்பனையாகும். புகைப்படத்தில் இருக்கும் அந்தப் பெண்ணைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது” எனத் தெளிவாக ஒப்புக்கொண்டுள்ளார் என குறிப்பிட்டுள்ளது.

இதன்மூலம், வெறும் கற்பனையாக எழுதப்பட்ட ஒரு கதையையே நெட்டிசன்கள் உண்மையான சம்பவம் என நம்பிப் பகிர்ந்து வந்துள்ளனர் என்பது மூல எழுத்தாளரின் வாக்குமூலத்தின் மூலமே உறுதியாகியுள்ளது.

4. சிறைச்சாலைகள் ஆணைக்குழுவின் விளக்கம்
மேலும், இத்தகவலை உத்தியோகபூர்வ மட்டத்தில் உறுதிப்படுத்தும் நோக்கில், சிறைச்சாலைகள் திணைக்களத்தின் தற்காலிக ஊடகப் பேச்சாளர் கஜநாயக்கவிடம் factseeker  வினவியது. சமூக வலைதளங்களில் வைரலாகும் அந்தப் பெண் கைதியின் கல்விப் பின்னணி அல்லது தனிப்பட்ட வரலாறு குறித்து சிறைச்சாலைகள் ஆணைக்குழுவிடம் எந்தவொரு தரவோ அல்லது தகவலோ இல்லை என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

முடிவு: முற்றிலும் பொய் (FALSE)
நீர்கொழும்பு சிறைச்சாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண் கைதி, காதலனால் சிறை சென்ற மருத்துவப் பீட மாணவி எனக் கூறப்படும் கதை முற்றிலும் பொய்யானது ஆகும். இக்கதையை உருவாக்கியவரே இது ஒரு கற்பனைக் கதை என்று ஒப்புக்கொண்டுள்ள போதிலும், மூலத்தை ஆராயாமல் பிரதான ஊடகங்களும் சமூக வலைதளப் பயனாளர்களும் இதனை உண்மை என நம்பிச் செய்தியாக்கியுள்ளனர்.

சமூக வலைதளங்களில் ஒரு சிலர் தங்களின் கற்பனைக்கு ஏற்ப உருவாக்கும் போலிச் செய்திகளையும் கதைகளையும், நெட்டிசன்கள் தீர விசாரிக்காமல் பகிர்வது சமூகத்தை எவ்வாறு தவறாக வழிநடத்துகிறது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சிறந்த உதாரணமாகும். எனவே, எந்தவொரு உணர்ச்சிபூர்வமான தகவலையும் சமூக ஊடகங்களில் பகிரும் முன்னர், அதன் உண்மைத்தன்மையைச் சிந்திக்க வேண்டும் எனப் பயனாளர்களை factseeker  வலியுறுத்துகிறது.

Latest updates

#AI generated

வெனிசுலா நிலநடுக்கத்தின் உண்மைத் தன்மையைச் சிதைக்கும் AI மற்றும் பழைய வீடியோக்களின் பின்னணி

ஜூன் 30, 2026

#AI generated

இந்தியா A – இலங்கை A அணிகளுக்கு இடையே மோதல் எனப் பரவும் வீடியோ போலியானது

ஜூன் 17, 2026

#AI generated

18 கொண்டை ஊசி வளைவுகள் பகுதியில் பேருந்து மீது பாறை விழுந்து 8 பேர் பலி என பரவும் தகவல் முற்றிலும் பொய்யானது

ஜூன் 15, 2026

#AI generated

‘ராட்சத ஆலங்கட்டி மழை’ பகிரப்படும் வீடியோ போலியானது: AI மூலம் உருவாக்கப்பட்ட கற்பனை

மே 28, 2026

Related Content

புதிதாக நியமிக்கப்பட்ட ரத்துகல ஆதிவாசித் தலைவர் பல்கலைக்கழக மாணவர் என்ற செய்தி முற்றிலும் தவறானது

மே 14, 2026

இந்தோனேசிய வெள்ளம் எனப் பகிரப்படும் AI காணொளி

பிப்ரவரி 13, 2026

சனூஸ் எம்.பெரோஸ் அவர்கள் 2022 இல் காலமானார் : இன்றென பகிரப்படும் தவறான செய்திகள்

பிப்ரவரி 3, 2026

நடிகர் ரஜித ஹிரான் கெஸ்பேவ தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்படவில்லை

பிப்ரவரி 1, 2026

வைரளாக பகிரப்படும் ஜனாதிபதியின் AI புகைப்படம்

ஜனவரி 26, 2026

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2026 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection