Warning: Trying to access array offset on value of type bool in /home/u197248563/domains/factseeker.lk/public_html/wp-content/plugins/wp-custom-taxonomy-image/wp-custom-taxonomy-image.php on line 15

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the base_theme domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. மேலும் விவரங்களுக்கு வர்ட்ப்ரஸ்ஸில் வழு நீக்கல் -ஐப் பார்க்கவும் (இந்த செய்தி 6.7.0-ஆம் பதிப்பூரில் சேர்க்கப்பட்டது.) in /home/u197248563/domains/factseeker.lk/public_html/wp-includes/functions.php on line 6170
புதிதாக நியமிக்கப்பட்ட ரத்துகல ஆதிவாசித் தலைவர் பல்கலைக்கழக மாணவர் என்ற செய்தி முற்றிலும் தவறானது – Factseeker Tamil புதிதாக நியமிக்கப்பட்ட ரத்துகல ஆதிவாசித் தலைவர் பல்கலைக்கழக மாணவர் என்ற செய்தி முற்றிலும் தவறானது – Factseeker Tamil
Notice: Function WP_Scripts::localize was called incorrectly. The $l10n parameter must be an array. To pass arbitrary data to scripts, use the wp_add_inline_script() function instead. மேலும் விவரங்களுக்கு வர்ட்ப்ரஸ்ஸில் வழு நீக்கல் -ஐப் பார்க்கவும் (இந்த செய்தி 5.7.0-ஆம் பதிப்பூரில் சேர்க்கப்பட்டது.) in /home/u197248563/domains/factseeker.lk/public_html/wp-includes/functions.php on line 6170
Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #false

புதிதாக நியமிக்கப்பட்ட ரத்துகல ஆதிவாசித் தலைவர் பல்கலைக்கழக மாணவர் என்ற செய்தி முற்றிலும் தவறானது

False
False

புதிதாக நியமிக்கப்பட்ட ரத்துகல ஆதிவாசித் தலைவர் ஒரு பல்கலைக்கழக மாணவர் எனக் கூறி பரவும் செய்திகள் முற்றிலும் தவறானவை என FactSeeker உறுதிப்படுத்துகிறது

by Anonymous |

மே 14, 2026

ரதுகல ஆதிவாசித் தலைவர் தானிகல மகா பண்டாரலாகே சுதா வன்னியலாத்தோவின் (Sudha Wannila Aththo) திடீர் மரணத்தைத் தொடர்ந்து, புதிய தலைவராக பல்கலைக்கழக மாணவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களிலும், சில பிரதான ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியிருந்தன. இச்செய்தி குறித்து பரவலான விமர்சனங்களும் விவாதங்களும் எழுந்ததை அடுத்து, FactSeeker இது குறித்து ஆராய்ந்து பார்த்தது.

கடந்த 11ஆம் திகதி, ‘தினமின’ நாளிதழின் முதல் பக்கத்தில், “ரதுகலவின் புதிய ஆதிவாசித் தலைவர் ஒரு பல்கலைக்கழக மாணவர்” என்ற தலைப்பில் செய்தி வெளியாகி இருந்ததுடன், அது அவர்களின் இணையதளத்திலும் பதிவேற்றப்பட்டிருந்தது. அதேவேளை, ‘அத தெரண’ (Ada Derana) செய்தி இணையதளத்தின் உத்தியோகபூர்வ செய்தி அட்டையை (News Alert Template) போலி முறையில் வடிவமைத்து, “ரதுகல சபரகமுவ பல்கலைக்கழக மாணவரை புதிய பழங்குடித் தலைவராக நியமித்தது” என்ற போலிப் பதிவொன்றும் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டதை அவதானிக்க முடிந்தது.

விசாரணை மற்றும் உண்மைத்தன்மை:
இது குறித்து ரதுகல ஆதிவாசி அபிவிருத்திச் சங்கத்தின் கடிதத் தலைப்பில் வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ செய்திக்குறிப்பு ஒன்றும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. அதில், மறைந்த முன்னாள் தலைவர் தனிகல மகா பண்டாரலாகே சுதா வன்னியலாத்தோவின் மூத்த மகனான தானிகல மகா பண்டாரலாகே நிஷாந்த குமாரவே ரதுகல ஆதிவாசிகளின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டிருந்தது. மேலும், சில ஊடகங்கள் அவரது பெயர் ‘நிபுண’ என்றும், அவர் ஒரு பல்கலைக்கழக மாணவர் என்றும் வெளியிட்ட செய்திகள் முற்றிலும் பொய்யானவை எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக, ரதுகல ஆதிவாசி அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் டி.எம்.டி. திஸாநாயக்கவை FactSeeker தொடர்பு கொண்டு வினவியபோது, அவரும் இத்தகவலை உறுதிப்படுத்தினார். புதிய தலைவர் பல்கலைக்கழக மாணவர் அல்லர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மறுபுறம், ரதுகல ஆதிவாசிகளின் புதிய தலைவர் ஒரு பல்கலைக்கழக மாணவர் என கடந்த 11ஆம் திகதி தாம் வெளியிட்ட செய்தி தவறானது என ‘தினமின’ நாளிதழ் மறுநாளான செவ்வாய்க்கிழமை (12ஆம் திகதி) திருத்தச் செய்தி வெளியிட்டிருந்தது.

அத்துடன், “ரத்துகல சபரகமுவ மாணவரை புதிய பழங்குடித் தலைவராக நியமித்தது” என்ற தலைப்பில் அத தெரன செய்தி இணையதளத்தில் வெளியிடப்பட்ட பதிவு, அந்த இணையதளத்தின் வடிவத்திற்கு ஏற்ப தயாரிக்கப்பட்ட ஒரு போலிச் செய்தி என்பது மேலதிக ஆய்வில் தெரியவந்துள்ளது.

முடிவு:
எனவே, ரதுகல பழங்குடி இனத்தின் புதிய தலைவர் ஒரு பல்கலைக்கழக மாணவர் என ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் வெளியான செய்திகள் முற்றிலும் பொய்யானவை என்பதை FactSeeker உறுதிப்படுத்துகிறது.

Latest updates

#AI generated

‘ராட்சத ஆலங்கட்டி மழை’ பகிரப்படும் வீடியோ போலியானது: AI மூலம் உருவாக்கப்பட்ட கற்பனை

மே 28, 2026

#FAKE

வடமாகாணத்தில் வெசாக் கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதாக பகிரப்படும் போலிச்செய்தி

மே 27, 2026

#explainer

” எல் நினோ” 2026: வதந்திகளும்- உண்மைப் பின்னணியும்

மே 24, 2026

#AI generated

இலங்கை மத்திய வங்கி புதிய 10,000 ரூபாய் பணத்தாள் வெளியிட்டுள்ளதா?

மே 10, 2026

Related Content

இந்தோனேசிய வெள்ளம் எனப் பகிரப்படும் AI காணொளி

பிப்ரவரி 13, 2026

சனூஸ் எம்.பெரோஸ் அவர்கள் 2022 இல் காலமானார் : இன்றென பகிரப்படும் தவறான செய்திகள்

பிப்ரவரி 3, 2026

நடிகர் ரஜித ஹிரான் கெஸ்பேவ தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்படவில்லை

பிப்ரவரி 1, 2026

வைரளாக பகிரப்படும் ஜனாதிபதியின் AI புகைப்படம்

ஜனவரி 26, 2026

மௌபிமவின் பக்க வடிவமைப்பில் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தொடர்பில் போலிச்செய்தி

ஜனவரி 12, 2026

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2026 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection