Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு

Daraz இன் குலுக்கல் சீட்டிழுப்பு என பகிரப்படும் விளம்பரம் போலியானது

False
False

குறிப்பிட்ட நபர்கள் மற்றும் குழுக்கள் தங்களது அமைப்பின் பிரதிநிதிகள் போல் நடித்து மோசடியில் ஈடுபடுவது அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் Daraz நிறுவனம் குறிப்பிட்டுள்ளது

by Anonymous |

செப்டம்பர் 9, 2023

நபிகள் நாயகத்தின் பிறந்தநாளையொட்டி(மீலாதுன் நபி), பிரபல இணைய வர்த்தக நிறுவனமான Daraz இன் குலுக்கல் சீட்டிழுப்பு குறித்த விளம்பரமொன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

மக்களை தவறாக வழிநடத்தும் இதுபோன்ற சீட்டிழுப்புகள் சமூக ஊடகங்களில் தொடர்ச்சியாக பகிரப்படுவதால், இதன் உண்மைத்தன்மை குறித்து Factseeker ஆராய்ந்து பார்த்தது.

இதன்போது, Daraz இன் வாடிக்கையாளர் சேவைத் துறையை தொடர்புகொண்டு வினவியபோது, ​​Daraz இன் அதிகாரப்பூர்வ வலைதளத்தைத் தவிர Facebook, WhatsApp, Instagram, Twitter, Telegram போன்ற சமூக வலைதளங்களில் தங்களது விளம்பரங்களை விளம்பரப்படுத்துவதில்லை எனத் தெரிவித்தனர்.

மேலும், இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ள  , குறிப்பிட்ட நபர்கள் மற்றும் குழுக்கள் தங்களது அமைப்பின் பிரதிநிதிகள் போல் நடித்து மோசடியில் ஈடுபடுவது அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

நிறுவனமானது விற்பனையாளர்கள், சேவை பெறுனர், பணியாளர்கள் மற்றும் பரந்த சமூகத்தை அதன் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக மட்டுமே கையாள்கிறது என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போலி நபர்கள் அல்லது குழுக்கள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் இருப்பின், இலங்கை பொலிசாருக்கு மற்றும் இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழுவிற்கு (CERT) தெரிவிக்குமாறு Daraz நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

அதன்படி, Darazஇன் குலுக்கல் சீட்டிழுப்பு குறித்து சமூக வலைதளங்களில் பகிரப்படும் விளம்பரம் போலியான விளம்பரம் என்பதை Factseeker உறுதிப்படுத்துகிறது.

Latest updates

#AI generated

வெனிசுலா நிலநடுக்கத்தின் உண்மைத் தன்மையைச் சிதைக்கும் AI மற்றும் பழைய வீடியோக்களின் பின்னணி

ஜூன் 30, 2026

#AI generated

இந்தியா A – இலங்கை A அணிகளுக்கு இடையே மோதல் எனப் பரவும் வீடியோ போலியானது

ஜூன் 17, 2026

#AI generated

18 கொண்டை ஊசி வளைவுகள் பகுதியில் பேருந்து மீது பாறை விழுந்து 8 பேர் பலி என பரவும் தகவல் முற்றிலும் பொய்யானது

ஜூன் 15, 2026

#AI generated

‘ராட்சத ஆலங்கட்டி மழை’ பகிரப்படும் வீடியோ போலியானது: AI மூலம் உருவாக்கப்பட்ட கற்பனை

மே 28, 2026

Related Content

வெனிசுலா நிலநடுக்கத்தின் உண்மைத் தன்மையைச் சிதைக்கும் AI மற்றும் பழைய வீடியோக்களின் பின்னணி

ஜூன் 30, 2026

இந்தியா A – இலங்கை A அணிகளுக்கு இடையே மோதல் எனப் பரவும் வீடியோ போலியானது

ஜூன் 17, 2026

18 கொண்டை ஊசி வளைவுகள் பகுதியில் பேருந்து மீது பாறை விழுந்து 8 பேர் பலி என பரவும் தகவல் முற்றிலும் பொய்யானது

ஜூன் 15, 2026

‘ராட்சத ஆலங்கட்டி மழை’ பகிரப்படும் வீடியோ போலியானது: AI மூலம் உருவாக்கப்பட்ட கற்பனை

மே 28, 2026

வடமாகாணத்தில் வெசாக் கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதாக பகிரப்படும் போலிச்செய்தி

மே 27, 2026

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2026 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection