Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு

திலித்துடனான உரையாடலுக்கு அனுரா மறுப்பு தெரிவிக்கவில்லை

Misleading
Misleading

அனுரகுமார திஸாநாயக்க, திலித் ஜயவீரவுடன் பேச மறுத்ததாக வெளியான செய்தி பொய்யானது

by Anonymous |

ஜனவரி 10, 2024

மௌபிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவை தன்னுடன் நேரடி தொலைக்காட்சி விவாதத்திற்கு வருமாறு விடுத்த கோரிக்கையை அனுரகுமார திஸாநாயக்க நிராகரித்ததாக இணையத்தளங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது தொடர்பில் ‘சதிய’ இணையத்தளத்தில் வெளியான செய்தியின் தலைப்புச்  செய்தியானது, “திலித்துடன் உரையாடுவதற்கு அநுர மறுப்பு” என பிரசுரிக்கப்பட்டுள்ளதுடன், திலித் ஜயவீர விடுத்த சவாலை அனுரகுமார திஸாநாயக்க நிராகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இதேவேளை, ‘லங்கா சீ நியூஸ்’ இணையத்தளமும் இந்த விடயம் தொடர்பில் செய்தி வெளியிட்டிருந்தது. இந்த சவாலை அனுரகுமார திஸாநாயக்க நிராகரித்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த 8ஆம் திகதி “சியத” தொலைக்காட்சி அலைவரிசையில் ஒளிபரப்பான “திருப்புமுனை” நேரடி அரசியல் உரையாடலின் போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அனுரகுமார திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் ஊடகப் பிரிவினரிடம் இது தொடர்பில் factseeker வினவியபோது, ​​அந்த உரையாடலில் பங்குபற்ற வேண்டுமாயின் மாநகர சபை அல்லது உள்ளூராட்சி சபையில் உறுப்பினர் பதவியை கொண்டு வாருங்கள் என  அனுரகுமார திஸாநாயக்க கூறியதாக தெரிவித்தனர்.

அதன்படி, அனுரகுமார திஸாநாயக்க, திலித் ஜயவீரவுடன் பேச மறுத்ததாக வெளியான செய்தி பொய்யானது என FactSeeker உறுதிப்படுத்துகிறது.

Latest updates

#Misleading

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் ரூ. 60,000 ஆல் உயர்த்தப்பட்டதா?

ஆகஸ்ட் 10, 2026

#Misleading

மெட்ரோ பேருந்துகளை யாழ்ப்பாணத்திற்கு வழங்காது அரசாங்கம் பாகுபாடு பார்ப்பதாக பகிரப்படும் போலிச்செய்தி:

ஆகஸ்ட் 4, 2026

#false

நீர்கொழும்பு சிறைச்சாலை பெண் கைதி குறித்து பரவும் உருக்கமான கதை முற்றிலும் கற்பனையானது

ஜூலை 14, 2026

#AI generated

வெனிசுலா நிலநடுக்கத்தின் உண்மைத் தன்மையைச் சிதைக்கும் AI மற்றும் பழைய வீடியோக்களின் பின்னணி

ஜூன் 30, 2026

Related Content

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் ரூ. 60,000 ஆல் உயர்த்தப்பட்டதா?

ஆகஸ்ட் 10, 2026

மெட்ரோ பேருந்துகளை யாழ்ப்பாணத்திற்கு வழங்காது அரசாங்கம் பாகுபாடு பார்ப்பதாக பகிரப்படும் போலிச்செய்தி:

ஆகஸ்ட் 4, 2026

நீர்கொழும்பு சிறைச்சாலை பெண் கைதி குறித்து பரவும் உருக்கமான கதை முற்றிலும் கற்பனையானது

ஜூலை 14, 2026

வெனிசுலா நிலநடுக்கத்தின் உண்மைத் தன்மையைச் சிதைக்கும் AI மற்றும் பழைய வீடியோக்களின் பின்னணி

ஜூன் 30, 2026

இந்தியா A – இலங்கை A அணிகளுக்கு இடையே மோதல் எனப் பரவும் வீடியோ போலியானது

ஜூன் 17, 2026

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2026 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection