Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #false

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தொழுகை இடங்களை வேறு தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் என போலிச்செய்தி

False
False

முஸ்லிம் சமூகத்தினருக்கு தொழுகைக்காக அமைக்கப்பட்டுள்ள அறைகள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், அதற்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பொறுப்பதிகாரி  தெரிவித்தார்.

by Anonymous |

டிசம்பர் 5, 2024

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தொழுகைக்காக அமைக்கப்பட்டுள்ள இடங்களை முஸ்லிம் சகோதர சகோதரிகள் பயன்படுத்தாவிட்டால் இந்த இடங்கள் வேறு தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் என விமான நிலைய ஆணையம் முடிவு செய்துள்ளதாக பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.

https://www.facebook.com/story.php?story_fbid=1534806361247217&id=100041536027485&mibextid=WC7FNe&rdid=O7CVFD5OYIusXF66

அவ்வாறு பகிரப்பட்ட பதிவில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது :

“கட்டுநாயக்க விமான நிலையத்தில் தொழுகைக்காக அமைக்கப்பட்டுள்ள இடத்தில் சிறிது நேரம் செலவிடுமாறு அனைத்து முஸ்லிம் சகோதர, சகோதரிகளையும் விமான நிலைய ஆணையம் கேட்டுக்கொள்கிறது.விமான நிலையத்தில் உள்ள இடத்தில் யாரும் தொழுகை நடத்தாததால் இந்த இடங்கள் பயன்படுத்தப்படாமல் காலியாக உள்ளன. இந்த இடங்களை முஸ்லிம்கள் தொழுகைக்காக பயன்படுத்தாவிட்டால், இந்த இடங்கள் வேறு தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் என விமான நிலைய ஆணையம் முடிவு செய்துள்ளது. எனவே உங்கள் பயணம் வெற்றியடையவும், இந்த இடங்களும் தொலைந்து போகாமல் இருக்கவும் உங்கள் சகோதர, சகோதரிகள், உறவினர்கள் மற்றும் இஸ்லாமிய நண்பர்கள் விமான நிலையங்களில் 5 முதல் 10 நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.தயவுசெய்து இந்த செய்தியை மற்ற குழுக்களுக்கும் பரப்புங்கள், உங்கள் முயற்சிகளுக்கு அல்லாஹ் உங்களுக்கு வெகுமதி அளிப்பான்.”

இப்பதிவானது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுவதால் FactSeeker இது குறித்து ஆராய்ந்தது.

இது தொடர்பாக உத்தியோகபூர்வ அறிவிப்புகள் அல்லது செய்திகள் வெளியாகியுள்ளதா என ஆராய்ந்தபோது, அவ்வாறான அறிவிப்புகள் அல்லது செய்திகள் எதுவும் வெளியிடப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.

இது குறித்து மேலும் ஆராய்ந்ததில், 2021 ஆம் ஆண்டிலும் இதே வசனங்களுடன் கூடிய பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டிருப்பதை அவதானிக்க முடிந்தது.

மேலும், இது தொடர்பில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பொறுப்பதிகாரியிடம் FactSeeker வினவிய போது, முஸ்லிம் சமூகத்தினருக்கு தொழுகைக்காக அமைக்கப்பட்டுள்ள அறைகள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருவதாகவும்,அதற்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ரீதியில் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் இவ் அறைகள் அகற்றப்பட மாட்டாது எனவும் தெரிவித்தார்.

ஆகவே, கட்டுநாயக்க விமான நிலையத்தில் தொழுகைக்காக அமைக்கப்பட்டுள்ள இடங்களை முஸ்லிம் சமூகத்தினர் பயன்படுத்தாவிட்டால் இந்த இடங்கள் வேறு தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் என விமான நிலைய ஆணையம் முடிவு செய்துள்ளதாக சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்ற பதிவுகள் போலியானவை என்பதை FactSeeker உறுதிப்படுத்துகிறது.

Latest updates

#AI generated

18 கொண்டை ஊசி வளைவுகள் பகுதியில் பேருந்து மீது பாறை விழுந்து 8 பேர் பலி என பரவும் தகவல் முற்றிலும் பொய்யானது

ஜூன் 15, 2026

#AI generated

‘ராட்சத ஆலங்கட்டி மழை’ பகிரப்படும் வீடியோ போலியானது: AI மூலம் உருவாக்கப்பட்ட கற்பனை

மே 28, 2026

#FAKE

வடமாகாணத்தில் வெசாக் கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதாக பகிரப்படும் போலிச்செய்தி

மே 27, 2026

#explainer

” எல் நினோ” 2026: வதந்திகளும்- உண்மைப் பின்னணியும்

மே 24, 2026

Related Content

புதிதாக நியமிக்கப்பட்ட ரத்துகல ஆதிவாசித் தலைவர் பல்கலைக்கழக மாணவர் என்ற செய்தி முற்றிலும் தவறானது

மே 14, 2026

இந்தோனேசிய வெள்ளம் எனப் பகிரப்படும் AI காணொளி

பிப்ரவரி 13, 2026

சனூஸ் எம்.பெரோஸ் அவர்கள் 2022 இல் காலமானார் : இன்றென பகிரப்படும் தவறான செய்திகள்

பிப்ரவரி 3, 2026

நடிகர் ரஜித ஹிரான் கெஸ்பேவ தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்படவில்லை

பிப்ரவரி 1, 2026

வைரளாக பகிரப்படும் ஜனாதிபதியின் AI புகைப்படம்

ஜனவரி 26, 2026

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2026 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection