Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு

‘ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்’ புத்தகத்துடன் மைத்திரி எடுத்துக்கொண்ட புகைப்படம் உண்மையே

Factual
Factual

சுனந்த தேசப்பிரியவின் x தள பக்கத்தி்லும் இப் புகைப்படம் பதிவேற்றப்பட்டிருப்பதையும் காணக்கூடியதாக இருந்தது .

by Anonymous |

அக்டோபர் 9, 2024

சிரேஷ்ட ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய எழுதிய  ‘ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்’ என்ற புத்தகத்தை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையில் வைத்திருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்படுவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.

அவ்வாறு பகிரப்பட்டுள்ள பதிவுகளில், இது போலியான புகைப்படம் என்றும் திரிபுபடுத்தப்பட்ட (Edit) புகைப்படம் என்றும் பலர் கருத்துக்களை பதிவிட்டு வந்ததால் factseeker இது குறித்து ஆராய்ந்தது.

எனவே இப்புகைப்படத்தை சுனந்த தேசப்பிரிய அல்லது இப் புத்தகத்தின் வெளியீட்டு நிறுவனமான சயுர வெளியீடு அவர்களது சமூக ஊடக பக்கங்களில் வெளியிட்டுளார்களா என ஆராய்ந்ததில் சயுர வெளியீட்டாளர்கள் தமது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் இப் புகைப்படத்தை வெளியிட்டிருப்பதை அவதானிக்க முடிந்தது. மேலும், சுனந்த தேசப்பிரியவின் x தள பக்கத்தி்லும் இப் புகைப்படம் பதிவேற்றப்பட்டிருப்பதையும் காணக்கூடியதாக இருந்தது .

இப் புகைப்படம் குறித்து சயுர வெளியீட்டின் நிறைவேற்றுப் பணிப்பாளர் நிலந்த கமகேவிடம் factseeker வினவிய போது, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியில் உள்ள சயுர வெளியீட்டு சாவடிக்குச் சென்று குறித்த புத்தகத்தை கொள்வனவு செய்ததாகவும், அங்கு பலரும் அதனை புகைப்படங்கள் எடுத்ததாகவும் அதில் ஒரு புகைப்படமே சமூக வலைதளங்களில் பரிமாறப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், இது தொடர்பில்  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அலுவலகத்திடம் factseeker வினவிய போது, வாசகர் ஒருவரின் வேண்டுகோளுக்கு இணங்க ‘ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்’ என்ற புத்தகத்துடன் புகைப்படம் எடுத்து கொண்டார் எனவும் இது உண்மையான புகைப்படம் எனவும் தெரிவித்தனர்.

அத்துடன் முன்னாள் ஜனாதிபதி கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியில் சயுர புத்தகச் சாவடிக்குச் சென்று ‘ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்’ புத்தகத்தை வாங்கியதைக் காட்டும் மேலும் சில புகைப்படங்களையும் அவதானிக்க முடிந்தது.

ஆகவே, கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியில் ‘ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்’ புத்தகத்தை வைத்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த புகைப்படம் உண்மையான புகைப்படம் என்பதை FactSeeker உறுதிப்படுத்துகிறது.

Latest updates

#Misleading

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் ரூ. 60,000 ஆல் உயர்த்தப்பட்டதா?

ஆகஸ்ட் 10, 2026

#Misleading

மெட்ரோ பேருந்துகளை யாழ்ப்பாணத்திற்கு வழங்காது அரசாங்கம் பாகுபாடு பார்ப்பதாக பகிரப்படும் போலிச்செய்தி:

ஆகஸ்ட் 4, 2026

#false

நீர்கொழும்பு சிறைச்சாலை பெண் கைதி குறித்து பரவும் உருக்கமான கதை முற்றிலும் கற்பனையானது

ஜூலை 14, 2026

#AI generated

வெனிசுலா நிலநடுக்கத்தின் உண்மைத் தன்மையைச் சிதைக்கும் AI மற்றும் பழைய வீடியோக்களின் பின்னணி

ஜூன் 30, 2026

Related Content

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் ரூ. 60,000 ஆல் உயர்த்தப்பட்டதா?

ஆகஸ்ட் 10, 2026

மெட்ரோ பேருந்துகளை யாழ்ப்பாணத்திற்கு வழங்காது அரசாங்கம் பாகுபாடு பார்ப்பதாக பகிரப்படும் போலிச்செய்தி:

ஆகஸ்ட் 4, 2026

நீர்கொழும்பு சிறைச்சாலை பெண் கைதி குறித்து பரவும் உருக்கமான கதை முற்றிலும் கற்பனையானது

ஜூலை 14, 2026

வெனிசுலா நிலநடுக்கத்தின் உண்மைத் தன்மையைச் சிதைக்கும் AI மற்றும் பழைய வீடியோக்களின் பின்னணி

ஜூன் 30, 2026

இந்தியா A – இலங்கை A அணிகளுக்கு இடையே மோதல் எனப் பரவும் வீடியோ போலியானது

ஜூன் 17, 2026

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2026 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection