Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு

இலங்கையின் பாடகி லதா வல்பொல அவசர சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டாரா?

False
False

லதா வல்பொல அவசர சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட காணொளி போலியானது

by Anonymous |

ஜனவரி 6, 2024

இலங்கையின் பாடகி லதா வல்பொலவுக்கு அவசர சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக யூடியூப் காணொளி ஒன்று வெளியாகியுள்ளதை அடுத்து, இந்த காணொளி முகப்புத்தக பக்கத்திலும் பகிரப்பட்டதையடுத்து, இதன் உண்மைத்தன்மை குறித்து factseeker ஆராய்ந்து பார்த்தது.

இலங்கையின் பாடகி லதா வல்பொல மிகவும் சிக்கலான சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு சுகயீனமடைந்துள்ளதாகவும் அவரது மகளிடம் வாக்குமூலம் வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்த காணொளியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த காணொளியில் திரிபுபடுத்தப்பட்ட புகைப்படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், திருமதி லதா வல்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அல்லது சத்திரசிகிச்சைக்கு உள்ளான புகைப்படங்கள் உள்ளடக்கப்படவில்லை. மேலும், சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் ஒரு நாளிதழுக்கு அளித்த பேட்டியின் அடிப்படையில் இந்த வீடியோ தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

மேலும், திருமதி லதவல்பொலவின் உடல்நிலை குறித்து அவரது குடும்ப உறவினர்களில் ஒருவரான (பேரன்) திசர பண்டாரவிடம் வினவியபோது, ​​“பாட்டி வீட்டில் மிகவும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறார். அவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், தீவிர அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் வெளியான வதந்தி முற்றிலும் பொய்யானது. பொய்ப் பிரச்சாரத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள்” எனத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தனது முகநூல் கணக்கிலும் பதிவிட்டுள்ளார்.

அதன்படி, லதா வல்பொல அவசர சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட காணொளி போலியானது என factseeker உறுதிப்படுத்துகின்றது.

Latest updates

#AI generated

வெனிசுலா நிலநடுக்கத்தின் உண்மைத் தன்மையைச் சிதைக்கும் AI மற்றும் பழைய வீடியோக்களின் பின்னணி

ஜூன் 30, 2026

#AI generated

இந்தியா A – இலங்கை A அணிகளுக்கு இடையே மோதல் எனப் பரவும் வீடியோ போலியானது

ஜூன் 17, 2026

#AI generated

18 கொண்டை ஊசி வளைவுகள் பகுதியில் பேருந்து மீது பாறை விழுந்து 8 பேர் பலி என பரவும் தகவல் முற்றிலும் பொய்யானது

ஜூன் 15, 2026

#AI generated

‘ராட்சத ஆலங்கட்டி மழை’ பகிரப்படும் வீடியோ போலியானது: AI மூலம் உருவாக்கப்பட்ட கற்பனை

மே 28, 2026

Related Content

வெனிசுலா நிலநடுக்கத்தின் உண்மைத் தன்மையைச் சிதைக்கும் AI மற்றும் பழைய வீடியோக்களின் பின்னணி

ஜூன் 30, 2026

இந்தியா A – இலங்கை A அணிகளுக்கு இடையே மோதல் எனப் பரவும் வீடியோ போலியானது

ஜூன் 17, 2026

18 கொண்டை ஊசி வளைவுகள் பகுதியில் பேருந்து மீது பாறை விழுந்து 8 பேர் பலி என பரவும் தகவல் முற்றிலும் பொய்யானது

ஜூன் 15, 2026

‘ராட்சத ஆலங்கட்டி மழை’ பகிரப்படும் வீடியோ போலியானது: AI மூலம் உருவாக்கப்பட்ட கற்பனை

மே 28, 2026

வடமாகாணத்தில் வெசாக் கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதாக பகிரப்படும் போலிச்செய்தி

மே 27, 2026

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2026 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection