Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு

அங்கஜன் இராமநாதன், அரச ஊழியர் ஒருவரை அறைந்ததாக பகிரப்படும் போலிச்செய்தி

Misleading
Misleading

இக் காணொளி ஸ்வாபிமானி ஷேத்காரி சங்கதனா சங்கத்தின் இளைஞர் பிரிவுத் தலைவர் மயூர் போர்டே என்பவர் மஹாராஷ்டிரா வங்கியின் கிளை தலைவரை அறைந்த காணொளி

by Anonymous |

அக்டோபர் 16, 2024

ஜனநாயக தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற தேர்தல் வேட்பாளருமான அங்கஜன் இராமநாதன், அரச ஊழியர் ஒருவரை அறைந்ததாக கூறும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.

“பா. உ என்றால் அரச உத்தியோகத்தரை கன்னத்தில் அறையலாமா?”, “ஊழல் செய்த யாழ் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அரச ஊழியரை அறைந்துள்ளார்” போன்ற பதிவுகளுடனேயே இக் காணொளி பகிரப்பட்டு வருகின்றது.

இது குறித்து இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், இதன் உண்மைத்தன்மை குறித்து factseeker ஆராய்ந்து பார்த்தது.

பகிரப்படும் காணொளி :

https://www.facebook.com/MahulchandranChelvarajSpencer/videos/729419982711657

https://www.facebook.com/watch/?ref=search&v=940678707884913&external_log_id=5919a87a-f2a7-46bc-902f-d7329f2329fe&q=Corrupted%20Jaffna%20MP%20Angajan%20Ramanathan%20slapping%20a%20government%20servant

இக் காணொளியை google reverse image search மூலம் ஆராய்ந்ததில் இது இந்தியாவின் மஹாராஷ்டிரா மாநிலத்தின் வருட் நகரில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றின் காணொளி என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.

இக் காணொளி “ஸ்வாபிமானி ஷேத்காரி சங்கதனா” சங்கத்தின் இளைஞர் பிரிவுத் தலைவர் மயூர் போர்டே என்பவர் மஹாராஷ்டிரா வங்கியின் கிளை தலைவரை அறைந்த காணொளி என்பதை கண்டறிய முடிந்தது. இது குறித்த செய்தி இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ஆம் திகதி ” The Indian express” செய்தி தளத்தில் வெளியாகியுள்ளது.

அச் செய்தியின் இணைப்பு : https://shorturl.at/jLGwu

ஆகவே, ஜனநாயக தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற தேர்தல் வேட்பாளருமான அங்கஜன் இராமநாதன், அரச ஊழியர் ஒருவரை அறைந்ததாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் காணொளியில் இருப்பது அங்கஜன் இராமநாதன் அல்ல என்பதையும், இது உண்மையில் ஸ்வாபிமானி ஷேத்காரி சங்கதனா சங்கத்தின் இளைஞர் பிரிவுத் தலைவர் மயூர் போர்டே என்பவர் மஹாராஷ்டிரா வங்கியின் கிளை தலைவரை அறைந்த காணொளி என்பதையும் Factseeker உறுதிப்படுத்துகின்றது.

Latest updates

#AI generated

வெனிசுலா நிலநடுக்கத்தின் உண்மைத் தன்மையைச் சிதைக்கும் AI மற்றும் பழைய வீடியோக்களின் பின்னணி

ஜூன் 30, 2026

#AI generated

இந்தியா A – இலங்கை A அணிகளுக்கு இடையே மோதல் எனப் பரவும் வீடியோ போலியானது

ஜூன் 17, 2026

#AI generated

18 கொண்டை ஊசி வளைவுகள் பகுதியில் பேருந்து மீது பாறை விழுந்து 8 பேர் பலி என பரவும் தகவல் முற்றிலும் பொய்யானது

ஜூன் 15, 2026

#AI generated

‘ராட்சத ஆலங்கட்டி மழை’ பகிரப்படும் வீடியோ போலியானது: AI மூலம் உருவாக்கப்பட்ட கற்பனை

மே 28, 2026

Related Content

வெனிசுலா நிலநடுக்கத்தின் உண்மைத் தன்மையைச் சிதைக்கும் AI மற்றும் பழைய வீடியோக்களின் பின்னணி

ஜூன் 30, 2026

இந்தியா A – இலங்கை A அணிகளுக்கு இடையே மோதல் எனப் பரவும் வீடியோ போலியானது

ஜூன் 17, 2026

18 கொண்டை ஊசி வளைவுகள் பகுதியில் பேருந்து மீது பாறை விழுந்து 8 பேர் பலி என பரவும் தகவல் முற்றிலும் பொய்யானது

ஜூன் 15, 2026

‘ராட்சத ஆலங்கட்டி மழை’ பகிரப்படும் வீடியோ போலியானது: AI மூலம் உருவாக்கப்பட்ட கற்பனை

மே 28, 2026

வடமாகாணத்தில் வெசாக் கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதாக பகிரப்படும் போலிச்செய்தி

மே 27, 2026

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2026 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection