Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #false

இந்தோனேசிய வெள்ளம் எனப் பகிரப்படும் AI காணொளி

False
False

"இந்தோனேசிய மலையில் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக X தளத்தில் வைரலாகும் காணொளி, 'Grok' செயற்கை நுண்ணறிவின் தவறான உறுதிப்படுத்தலையும் மீறி, AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட ஒரு போலித் தகவலாகும்."

by Anonymous |

பிப்ரவரி 13, 2026

இந்தோனேசியா தற்போது கடுமையான மழைப்பொழிவு மற்றும் எரிமலைச் சீற்றங்களினால் பல்வேறு இயற்கை அனர்த்தங்களை எதிர்கொண்டு வருகிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையைப் பயன்படுத்தி, சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.

பரப்பப்படும் செய்தி: இந்தோனேசியாவில் மலையுச்சியில் இருந்து பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்படுவதாகக் காட்டும் காணொளி ஒன்று எக்ஸ் (X) தளத்தில் தற்போது வைரலாகப் பகிரப்பட்டு வருகின்றது. இதனை ஏராளமான பயனர்கள் பார்வையிட்டும் பகிர்ந்துமுள்ளனர். குறிப்பாக, எக்ஸ் தளத்தின் தரவுகளை உறுதிப்படுத்தும் ‘Grok’ என்ற செயற்கை நுண்ணறிவு (AI) கருவியும் இக்காணொளி உண்மையானது எனப் பதிலளித்துள்ளது பேசுபொருளாகியுள்ளது.

FactSeeker நடத்திய ஆய்வில் பின்வரும் உண்மைகள் கண்டறியப்பட்டுள்ளன

  1. AI தொழில்நுட்பம்:  வைரலாகும் அந்த காணொளியை ஆழ்ந்து பரிசோதித்ததில், அது செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஒரு போலி காணொளி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

  2. உத்தியோகபூர்வ தரவுகள்: இந்தோனேசியாவின் அதிகாரப்பூர்வ செய்திகளிலோ அல்லது அந்த நாட்டு அரசாங்கத்தின் அறிவிப்புகளிலோ மலையுச்சியில் இருந்து இத்தகைய பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக எந்தவொரு ஆதாரமும் இல்லை.

  3. Grok கருவியின் தவறு: எக்ஸ் தள பயனர்களுக்கு ‘Grok’ வழங்கிய தரவுகள் முற்றிலும் தவறானவை. செயற்கை நுண்ணறிவு கருவிகள் சில நேரங்களில் போலி காணொளிகளை உண்மை எனத் தவறாக அடையாளம் காணும் (Hallucination) என்பதற்கு இது ஒரு சான்றாக அமைந்துள்ளது.

முடிவு: இந்தோனேசியாவில் மலையுச்சியில் இருந்து பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாகப் பகிரப்படும் காணொளியானது முற்றிலும் போலியானது என்றும், அது AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்றும் FactSeeker உறுதிப்படுத்துகின்றது. பொதுமக்கள் இவ்வாறான போலி காணொளிகளைப் பகிர வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Latest updates

#FAKE

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேயிலை கொழுந்து பறிக்கும் கூடையைச் சுமந்து செல்வது போன்ற புகைப்படம் போலியானது

பிப்ரவரி 12, 2026

#AI generated

பாலம் இடிந்து விழுந்ததாக பகிரப்படும் AI காணொளி : Grok AI-இன் பதில்களிலும் தவறு

பிப்ரவரி 9, 2026

#false

சனூஸ் எம்.பெரோஸ் அவர்கள் 2022 இல் காலமானார் : இன்றென பகிரப்படும் தவறான செய்திகள்

பிப்ரவரி 3, 2026

#false

நடிகர் ரஜித ஹிரான் கெஸ்பேவ தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்படவில்லை

பிப்ரவரி 1, 2026

Related Content

சனூஸ் எம்.பெரோஸ் அவர்கள் 2022 இல் காலமானார் : இன்றென பகிரப்படும் தவறான செய்திகள்

பிப்ரவரி 3, 2026

நடிகர் ரஜித ஹிரான் கெஸ்பேவ தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்படவில்லை

பிப்ரவரி 1, 2026

வைரளாக பகிரப்படும் ஜனாதிபதியின் AI புகைப்படம்

ஜனவரி 26, 2026

மௌபிமவின் பக்க வடிவமைப்பில் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தொடர்பில் போலிச்செய்தி

ஜனவரி 12, 2026

ஒரே ஓவரில் 6 விக்கெட்டுக்களை வீழ்த்தி உலகசாதனை என பகிரப்படும் தவறான காணொளி

ஜனவரி 7, 2026

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2026 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection