Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #Misleading

வீடமைப்பு பிரதி அமைச்சர் டி.பி.சரத் ​​ கழிப்பறையொன்றை திறந்துவைத்தாரென பகிரப்படும் போலிச்செய்தி

Misleading
Misleading

கடந்த 2019 மார்ச் 4ஆம் திகதி அன்று, பொலன்னறுவை பகுதியில் இடம்பெற்ற சமூகசேவை நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படமே இவ்வாறு பகிரப்படுகின்றது.

by Anonymous |

மார்ச் 26, 2025

வீடமைப்பு பிரதி அமைச்சர் டி.பி.சரத் கழிவறை ஒன்றை திறந்து வைத்துள்ளதாக விமர்சிக்கப்படும் புகைப்படத்துடனான செய்திகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.  இது குறித்து பிரதி அமைச்சர் டி.பி.சரத் மறுப்பு தெரிவித்து ஊடக அறிக்கை ஒன்றை விடுத்துள்ள நிலையில் இதன் உண்மைத்தன்மை என்ன என்பது குறித்து factseeker ஆராய்ந்து பார்த்தது.

சமூக வலைதளங்களில் பகிரப்படும் இந்த செய்தி தொடர்பில் பிரதான ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளனவா என ஆராய்ந்து பார்த்ததில், இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர கருத்து தெரிவித்திருந்த காணொளியொன்று நேற்று (25) ஹிரு தொலைக்காட்சியின் பிரதான செய்தியில் ஒளிபரப்பப்பட்டிருந்தது.

LINK :- https://www.facebook.com/share/v/1BDjQEzytZ/

இதே செய்தியை நேற்று (25) அருண செய்தித்தாளும் செய்தியாக வெளியிட்டுள்ளது. அதில்,”பிரதி அமைச்சர் புதிய கழிப்பறையொன்றை திறந்துவைத்துள்ளதுடன் அந்த புகைப்படத்தை  பேஸ்புக்கில் பதிவிட்டார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும், இந்த செய்திகளில் உண்மையில்லை என பிரதி அமைச்சர் ஊடக அறிக்கை ஒன்றின் மூலமாக அறிவித்துள்ள நிலையில் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதானது,

சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுவரும் புகைப்படங்களும் தகவல்களும் சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு பொலன்னறுவை பகுதியில் இளைஞர்கள் குழுவுடனான சமூக சேவை நடவடிக்கையின் போது எடுக்கப்பட்டவை என்று அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், அந்தப் பகுதியில் ஒரு ஏழைக் குடும்பத்திற்கு கழிப்பறை கட்டப்பட்டதே தவிர அதற்காக எந்த விழாவும் எடுக்கவில்லை, இது சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஒரு சமூக நலச்செயல் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் ஆராயும் நோக்கில், பிரதி அமைச்சரின் முகநூல் பக்கத்தை ஆராய்ந்ததில், இது கடந்த 2019 மார்ச் 4ஆம் திகதி அன்று, அந்த நிகழ்வை விவரிக்கும் ஒரு பதிவு அவரது முகநூல் கணக்கில் வெளியிடப்பட்டிருப்பதை அவதானிக்க முடிந்தது.

ஆகவே, ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் முன்னெடுக்கப்பட்ட சமூக நலத்திட்டம் ஒன்றின் போதும் எடுக்கப்பட்ட புகைப்படத்தை அடிப்படையாக வைத்தே பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர தவறான கருத்தொன்றை முன்வைத்துள்ளார் என்பதையும் அவரது கருத்தை ஆதாரமாகக் கொண்டே பிரதான செய்தி தளங்கள் தவறான செய்தியை பதிவிட்டுள்ளனர் என்பதையும் factseeker உறுதிப்படுத்துகின்றது.

Latest updates

#AI generated

வெனிசுலா நிலநடுக்கத்தின் உண்மைத் தன்மையைச் சிதைக்கும் AI மற்றும் பழைய வீடியோக்களின் பின்னணி

ஜூன் 30, 2026

#AI generated

இந்தியா A – இலங்கை A அணிகளுக்கு இடையே மோதல் எனப் பரவும் வீடியோ போலியானது

ஜூன் 17, 2026

#AI generated

18 கொண்டை ஊசி வளைவுகள் பகுதியில் பேருந்து மீது பாறை விழுந்து 8 பேர் பலி என பரவும் தகவல் முற்றிலும் பொய்யானது

ஜூன் 15, 2026

#AI generated

‘ராட்சத ஆலங்கட்டி மழை’ பகிரப்படும் வீடியோ போலியானது: AI மூலம் உருவாக்கப்பட்ட கற்பனை

மே 28, 2026

Related Content

வெனிசுலா நிலநடுக்கத்தின் உண்மைத் தன்மையைச் சிதைக்கும் AI மற்றும் பழைய வீடியோக்களின் பின்னணி

ஜூன் 30, 2026

ஜனாதிபதியின் ஊடக சந்திப்பின் போது தேசியக் கொடியின் நிறம் மாற்றப்பட்டுள்ளதா?

மார்ச் 20, 2026

உயிரிழந்த அயூப்ராஜ் அருள் பயாஸின் வயது 17 : பொலிசாரின் அறிக்கையிலேயே தவறு ஏற்பட்டுள்ளது

பிப்ரவரி 16, 2026

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட சிறுவனின் மனவேதனை என பகிரப்படும் காணொளி ஒரு பாடசாலை நாடகமாகும்

டிசம்பர் 18, 2025

நிபந்தனையின் பெயரிலேயே  அஜித் நிவார்ட் கப்ரால் விடுதலை செய்யப்பட்டார்.

டிசம்பர் 12, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2026 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection