Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #Misleading

சிவனொளிபாதமலையில் மண்சரிவு அனர்த்தம் இடம்பெற்றமை உண்மையே

False
False

மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் சமூக வலைதளங்களில் இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது என்பதை factseeker வெளிப்படுத்துகின்றது

by Anonymous |

டிசம்பர் 2, 2025

தற்போதைய பேரிடர் சூழ்நிலை காரணமாக, நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள அனர்த்தங்கள் தொடர்பில் சமூக வலைதளங்களில் ஏராளமான காணொளிகளும், புகைப்படங்களும், தகவல்களும் பகிரப்பட்டு வருகின்றன.

இதற்கிடையில், சிவனொளிபாதமலை அமைந்துள்ள சமனல கந்த பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருவதையும், எனினும் அவ்வாறான மண்சரிவு எதுவும் ஏற்படவில்லை என்ற செய்திகள் பிரதான பத்திரிகையான ‘தினமின’ பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டிருப்பதையும், அதேபோல் சமூக வலைதள பக்கங்களிலும் பகிரப்படுவதையும் FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.

https://www.facebook.com/share/r/1Cd5runBQ1/

https://www.facebook.com/share/r/1ZgvpofCMR/

https://www.facebook.com/share/p/1QqhKNne68/

தற்போதைய பேரிடர் காலத்தில் பல்வேறு போலியான செய்திகள் சமூக வலைதளங்களில் பகிரப்படுவதை அடுத்து இந்த செய்தியின் உண்மைத்தன்மை குறித்து factseeker ஆராயத் தீர்மானித்தது.

அதன்படி, 12/01/2025 அன்று வெளியான ‘தினமின’ பத்திரிகை வெளியிட்ட செய்தியில் , சிவனொளிபாதமலை தளத்தின் அருகே மண்சரிவு எதுவும் ஏற்படவில்லை எனவும், சிவனொளிபாதமலை தள நிர்வாகம் சிவனொளிபாதமலை தளத்தின் அருகிலோ அல்லது இரத்தினபுரி-ஹட்டன் பாதையிலோ மண்சரிவு அனர்த்தங்கள் எதுவும் இடம்பெறவில்லை என உறுதிப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த 11/30/2025 அன்று, இதுபோன்ற போலிச் செய்திகள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டதாகவும், சிவனொளிபாதமலை தளத் தலைவர் வணக்கத்திற்குரிய பெங்கமுவே தம்மதின்ன தேரர் அந்தச் செய்தி தவறானது எனக் கூறியதாகவும் குறித்த பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.

சிவனொளிபாதமலை தளத்தின் உட மலுவே பஸ்நாயக்க நிலமே சுனில் சாந்த வீரசேகரவும், சம்பந்தப்பட்ட பகுதியில் மண்சரிவு அனர்த்தங்கள் எதுவும் இடம்பெறவில்லை, ஆனால் சில சந்தர்ப்பங்களில் சிறிய நிலச்சரிவுகள் மற்றும் பாறை சரிவுகள் ஏற்படுகின்றன என்றும் தினமின பத்திரிகைக்கு தனது கருத்தைத் தெரிவித்திருந்தார்.

மேலும், தூய்மை இலங்கை திட்டத்துடன் இணைந்து சிவனொளிபாதமலை தளத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்புரவு நடவடிக்கைகளின் போது சேகரிக்கப்பட்ட குப்பைகள் மழையால் அடித்துச் செல்லப்பட்டதால் இந்த நிலைமை ஏற்பட்டதாகவும் தம்மதின்ன தேரர் தெரிவித்திருந்தார்.

https://www.newswire.lk/2025/11/26/clean-sri-lanka-national-drive-launched-to-protect-adams-peak-ecosystem/

https://pmd.gov.lk/news/special-clean-up-operation-launched-at-adams-peak/#:~:text=A%20national%20programme%20launched%20jointly,the%20Sri%20Pada%20pilgrimage%20season.

எனினும், 12/01/2025 அன்று தெரண தொலைக்காட்சியில் இது குறித்து வெளியிடப்பட்ட செய்தித்தொகுப்பில் குறித்த அனர்த்தம் தொடர்பில் அறிக்கையிடப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

https://www.youtube.com/live/uM14nVWCd0w?si=PS_HfQ4N2fDeeH_f&t=644

அதிகளவில் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் பகுதியாகவும், இலங்கை வாழ் மக்கள் தொடர்ச்சியாக செல்லும் ஒரு பகுதியாகவும் இருக்கும் சிவனொளிபாதமலையில் மிகப்பெரிய மண்சரிவு அனர்த்தம் ஒன்று இடம்பெற்றுள்ள நிலையில், மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது என்பதை factseeker  வெளிப்படுத்துவதுடன், தற்போதைய அனர்த்த நிலைமைகளில் , சிவனொளிபாதமலை பகுதிகளுக்கு பொதுமக்கள் விஜயம் செய்வதை தவிர்ப்பதுடன் தத்தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதத்தில் அவதானமாக செயற்பட வேண்டும் என்பதை factseeker வலியுறுத்துகின்றது.

Latest updates

#AI generated

வெனிசுலா நிலநடுக்கத்தின் உண்மைத் தன்மையைச் சிதைக்கும் AI மற்றும் பழைய வீடியோக்களின் பின்னணி

ஜூன் 30, 2026

#AI generated

இந்தியா A – இலங்கை A அணிகளுக்கு இடையே மோதல் எனப் பரவும் வீடியோ போலியானது

ஜூன் 17, 2026

#AI generated

18 கொண்டை ஊசி வளைவுகள் பகுதியில் பேருந்து மீது பாறை விழுந்து 8 பேர் பலி என பரவும் தகவல் முற்றிலும் பொய்யானது

ஜூன் 15, 2026

#AI generated

‘ராட்சத ஆலங்கட்டி மழை’ பகிரப்படும் வீடியோ போலியானது: AI மூலம் உருவாக்கப்பட்ட கற்பனை

மே 28, 2026

Related Content

வெனிசுலா நிலநடுக்கத்தின் உண்மைத் தன்மையைச் சிதைக்கும் AI மற்றும் பழைய வீடியோக்களின் பின்னணி

ஜூன் 30, 2026

ஜனாதிபதியின் ஊடக சந்திப்பின் போது தேசியக் கொடியின் நிறம் மாற்றப்பட்டுள்ளதா?

மார்ச் 20, 2026

உயிரிழந்த அயூப்ராஜ் அருள் பயாஸின் வயது 17 : பொலிசாரின் அறிக்கையிலேயே தவறு ஏற்பட்டுள்ளது

பிப்ரவரி 16, 2026

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட சிறுவனின் மனவேதனை என பகிரப்படும் காணொளி ஒரு பாடசாலை நாடகமாகும்

டிசம்பர் 18, 2025

நிபந்தனையின் பெயரிலேயே  அஜித் நிவார்ட் கப்ரால் விடுதலை செய்யப்பட்டார்.

டிசம்பர் 12, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2026 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection