Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #false

16 எம்.பிக்கள் மாத்திரமா தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான பிரகடனங்களை சமர்ப்பித்துள்ளனர்?

False
False

மக்கள் விடுதலை முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் அவர்களில் இல்லை என பகிரப்படும் செய்தி போலியானது

by Anonymous |

ஆகஸ்ட் 15, 2024

சொத்துப் பிரகடனங்களை வழங்காத பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறித்து கடந்த சில நாட்களாக செய்திகள் வெளிவருகின்றன. இதேவேளை, ‘பாராளுமன்ற உறுப்பினர்கள் 16 பேர் மாத்திரமே தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான பிரகடனங்களை சமர்ப்பித்துள்ளதாகவும், மக்கள் விடுதலை முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் அவர்களில் இல்லை’ எனவும் சமூக வலைதளங்களில் பகிரப்படும் பதிவுகளை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.

இதில், Transparency International Sri Lanka வின் உத்தியோகபூர்வ இணையத்தளமான  http://www.tisrilanka.org/mpassets/ என்ற இணையதளத்தையும் மேற்கோள்காட்டி சில பதிவுகள் பகிரப்படுகின்றன. இப்பதிவுகளில், முன்னாள் மற்றும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்களில் 17 பேரின் சொத்துக்கள் மற்றும் பொறுப்பு அறிக்கைகள் மாத்திரமே அங்கு பதிவிடப்பட்டுள்ளன. மேலும் அதில் வெளியிடப்பட்டுள்ள சொத்து அறிக்கைகளில், “2023/2024 ஆண்டு” சொத்துக்கள் மற்றும் பொறுப்பு அறிக்கைகளில் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரனின் தரவுகள் மட்டுமே தரவேற்றப்பட்டுள்ளது.

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பிரகடனங்களை வழங்கிய பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் கண்டறிய இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரிப்பதற்கான ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையதளத்தை ஆராய்ந்த போது, ஆணைக்குழுவிற்கு கடந்த 30.06.2024 வரை வழங்கப்பட்ட தரவுகளின் படி 2024.06.30 ஆம் திகதிக்குள் சொத்துப் பிரகடனங்களை சமர்ப்பிக்க வேண்டிய 169 பாராளுமன்ற உறுப்பினர்களில் 116 பேர் தமது சொத்துப் பிரகடனங்களைச் சமர்ப்பித்துள்ளதாகவும் 53 பேர் இதுவரை சொத்துப் பிரகடனங்களை சமர்ப்பிக்கவில்லை என்பதையும் அறிய முடிந்தது.

2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் தடுப்பு சட்ட விதியின் படி “2023/2024” ஆண்டுகளின் தங்கள் சொத்துக்கள் மற்றும் பொறுப்புப் பிரகடனங்களை அறிவிக்க வேண்டிய அதிகாரிகள் உட்பட தனிநபர்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய விபரங்கள் http://ciaboc.lk என்ற இணையதளத்தில் பார்வையிட முடியும்.

இதில், இலங்கை பாராளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனுரகுமார திஸாநாயக்க, ஹரிணி அமரசூரிய மற்றும் விஜித ஹேரத் ஆகிய மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளார்கள் என்பதை அறிந்துகொள்ள முடிகின்றது.

ஆகவே, ‘பாராளுமன்ற உறுப்பினர்கள் 16 பேர் மாத்திரமே தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான பிரகடனங்களை சமர்ப்பித்துள்ளதாகவும், மக்கள் விடுதலை முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் அவர்களில் இல்லை’ எனவும் பகிரப்படும் செய்தியில் உண்மையல்ல என்பதை factseeker உறுதிப்படுத்துகிறது.

Latest updates

#FAKE

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, மூன்றாம் சார்லஸ் மன்னரைச் சந்தித்ததாகப் பரவும் போலி புகைப்படம்

பிப்ரவரி 28, 2026

#TRUE

இந்தியப் பயணிகளுக்கு இப்போது விசா மற்றும் ETA இன்றி இலங்கைக்கு வரலாம்

பிப்ரவரி 17, 2026

#Misleading

உயிரிழந்த அயூப்ராஜ் அருள் பயாஸின் வயது 17 : பொலிசாரின் அறிக்கையிலேயே தவறு ஏற்பட்டுள்ளது

பிப்ரவரி 16, 2026

#false

இந்தோனேசிய வெள்ளம் எனப் பகிரப்படும் AI காணொளி

பிப்ரவரி 13, 2026

Related Content

இந்தோனேசிய வெள்ளம் எனப் பகிரப்படும் AI காணொளி

பிப்ரவரி 13, 2026

சனூஸ் எம்.பெரோஸ் அவர்கள் 2022 இல் காலமானார் : இன்றென பகிரப்படும் தவறான செய்திகள்

பிப்ரவரி 3, 2026

நடிகர் ரஜித ஹிரான் கெஸ்பேவ தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்படவில்லை

பிப்ரவரி 1, 2026

வைரளாக பகிரப்படும் ஜனாதிபதியின் AI புகைப்படம்

ஜனவரி 26, 2026

மௌபிமவின் பக்க வடிவமைப்பில் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தொடர்பில் போலிச்செய்தி

ஜனவரி 12, 2026

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2026 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection