Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #false

சுனில் ஹதுன்நெத்தி தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் கொள்கையை மேற்கோள் காட்டுகிறாரா?

False
False

ஹதுன்நெத்தியின் கருத்து திரிபுபடுத்தப்பட்டு பிரதான ஊடகங்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளது என்பதை factseeker உறுதிப்படுத்துகின்றது.

by Anonymous |

ஜூன் 24, 2024

தேர்தல் காலங்களில் அரசியல்வாதிகளின் கருத்துக்களை திரித்து செய்திகளை வெளியிடுவது வாடிக்கையான நிகழ்வாகும். ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், அந்த நிலை மேலும் மேலும் அதிகரித்து வருகிறது.

இதேவேளை, கடந்த (20) தேசிய செயற்குழு உறுப்பினர் சுனில் ஹதுன்நெத்தி தெரிவித்த கருத்து தொடர்பில் தினமின பத்திரிகையின் முதற்பக்கத்தில் வெளியான செய்தியை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.

தினமின நாளிதழின் முதற்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், “பொருளாதார நெருக்கடிக்கு மூன்றே தீர்வுகள் உள்ளன. பொது நிறுவனங்களை விற்பது, புதிதாக பணம் அச்சிடுவது மற்றும் பொது மக்களின் வங்கி வைப்புத்தொகையை எடுப்பது “. என்று அவர் கூறியதாக வெளியாகியிருந்தது.

அதேபோல், தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செய்தியை மேற்கோள்காட்டி தினமின பத்திரிகை இதனைத் தெரிவித்திருந்தது.

கடந்த 18ம் தேதி தேசிய தொலைக்காட்சி செய்தியில் இப்படித்தான் ஒளிபரப்பானது. https://www.youtube.com/live/nJkYeW21K2I?si=K-a8GswfCvLtfG0v

ஆகவே இது குறித்து Factseeker ஆராய்ந்து பார்த்தது.

இது தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் ஊடகப் பிரிவினரிடம் Factseeker வினவியபோது, ​​சுனில் ஹதுன்நெத்தி வெளியிட்ட திரிபுபடுத்தப்பட்ட கருத்து அடங்கிய காணொளி ‘தினமின’ பத்திரிகையில் வெளியாகியுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். அத்துடன், கடந்த வருடம் “neth fm” வானொலி நிலையத்திற்கு வழங்கிய நேர்காணலில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு பகுதியையே இவ்வாறு திரிபுபடுத்தியுள்ளதாக ஊடகப் பிரிவு தெரிவித்தது.

இதேவேளை, சுனில் ஹதுன்நெத்தி தனது முகநூலில் (Facebook ) பகிர்ந்துள்ள காணொளி ஒன்றையும் Factseekerஇனால் அவதானிக்க முடிந்தது, அது அவரது அறிக்கையின் ஒரு பகுதியை மேற்கோள் காட்டி தவறான முறையில் பதிவிடப்பட்டுள்ளது. https://www.facebook.com/share/v/kvcKCL2eL9Ccwb2R

அதன்படி, Neth Fm யூடியூப் செய்திச் சேவயில் தேடியபோது, ​​இது 2023 டிசம்பர் 21 அன்று சுனில் ஹதுன்நெத்தி பங்கேற்ற “Net Fm Unlimited” அரசியல் உரையாடலில் இருந்து எடுக்கப்பட்டது என்பது தெரியவந்தது.

அந்த அரசியல் உரையாடல் https://youtu.be/9LVu4n2B3-0?si=HpkC1dS2kUTgAjiz

நேர்காணலின் போது, ​​”வட்(VAT) வரியை அதிகரிக்க அரசாங்கம் தயாராகி வந்தது. இத்தகைய பொருளாதார நெருக்கடியில் வட் வரியை அதிகரிப்பதைத் தவிர வேறு வழிகள் அரசுக்கு உள்ளதா?” என்று அறிவிப்பாளர் அங்கு ஒரு கேள்வியை எழுப்பினார்.

“செலவுகளை நிர்வகிப்பதே அரசாங்கத்திடம் உள்ள தீர்வு” என சுனில்ஹு ஹதுன்நெத்தி சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் கருத்து தெரிவிக்கும் சுனில் ஹதுன்நெத்தி தெரிவிக்கையில்,

“நாட்டின் வருமானம் 4164 பில்லியன் ரூபாவாக இருக்கும் போது செலவு 11000 பில்லியன் ரூபாவாகும். அடுத்த ஆண்டு (2024) உலக வங்கி, IMF, ஆசிய வளர்ச்சி வங்கி அனைத்தும் 1.5 பில்லியன் டொலர் கடனை செலுத்த வேண்டும். இவற்றை செலுத்த முடியாமல் போனால், தற்போதுள்ள அரசு வணிக நிறுவனங்கள், விற்பனைக்கு வந்தவற்றை ஏலம் விடுவது போல் விற்பனை செய்வது தவிர்க்க முடியாது. பதில் ஒன்றுதான், இல்லையேல் பணம் புதிதாக அச்சிடப்பட வேண்டும். வங்கிகளில் வைப்பு (deposit) செய்பவர்களின் பணத்தை அரசு எடுத்து செலவழிக்க வேண்டும் என்பது மற்றொரு பதில். அந்த மூன்று பதில்களும் நான் கற்றுக்கொண்டவை.”

அதன்படி, டிசம்பர் 21, 2023 அன்று “Neth Fm Unlimited” அரசியல் உரையாடலில் சுனில் ஹதுன்நெத்தி தெரிவித்த கருத்துக்களில் ஒரு பகுதியை மட்டும் மேற்கோள் காட்டி சுனில் ஹதுன்நெத்தி தவறாகப் கூறியதாக தினமின பத்திரிகையும் தேசிய தொலைக்காட்சியும் செய்தி வெளியிட்டிருந்தன. ஆகவே இது திரிபுபடுத்தப்பட்ட செய்தி என்பதை Factseeker  உறுதிப்படுத்தப்படுகிறது.

Latest updates

#false

இந்தோனேசிய வெள்ளம் எனப் பகிரப்படும் AI காணொளி

பிப்ரவரி 13, 2026

#FAKE

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேயிலை கொழுந்து பறிக்கும் கூடையைச் சுமந்து செல்வது போன்ற புகைப்படம் போலியானது

பிப்ரவரி 12, 2026

#AI generated

பாலம் இடிந்து விழுந்ததாக பகிரப்படும் AI காணொளி : Grok AI-இன் பதில்களிலும் தவறு

பிப்ரவரி 9, 2026

#false

சனூஸ் எம்.பெரோஸ் அவர்கள் 2022 இல் காலமானார் : இன்றென பகிரப்படும் தவறான செய்திகள்

பிப்ரவரி 3, 2026

Related Content

இந்தோனேசிய வெள்ளம் எனப் பகிரப்படும் AI காணொளி

பிப்ரவரி 13, 2026

சனூஸ் எம்.பெரோஸ் அவர்கள் 2022 இல் காலமானார் : இன்றென பகிரப்படும் தவறான செய்திகள்

பிப்ரவரி 3, 2026

நடிகர் ரஜித ஹிரான் கெஸ்பேவ தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்படவில்லை

பிப்ரவரி 1, 2026

வைரளாக பகிரப்படும் ஜனாதிபதியின் AI புகைப்படம்

ஜனவரி 26, 2026

மௌபிமவின் பக்க வடிவமைப்பில் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தொடர்பில் போலிச்செய்தி

ஜனவரி 12, 2026

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2026 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection