Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #false

ஹயேஷிகா பெர்னாண்டோ தனது சிலைகளை உருவாக்கி விற்பனை செய்கிறார் என பகிரப்படும் போலிச்செய்தி

False
False

"ஹயேஷிகா பெர்னாண்டோ தனது சிலைகளை உருவாக்கி விற்பனை செய்கிறார்" எனக் கூறும் செய்திகள் பொய்யானவை என ஹயேஷிகாவின் தரப்பினர் FactSeeker-க்கு உறுதிப்படுத்தியுள்ளனர்.

by Anonymous |

மே 19, 2025

“டீச்சர் அம்மா” என அழைக்கப்படும் ஹயேஷிகா பெர்னாண்டோ ரூ.25,000க்கு தன்னுடைய சிலைகளை விற்பனை செய்கிறார் என்ற தலைப்புடன் பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தியை அடிப்படையாகக் கொண்டு, பதிவுகள் சில சமூகவலைதளங்களில் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.

“டீச்சர் அம்மா சிலை உருவாக்கினார் – ஒன்றை ரூ.25,000க்கு விற்றார்” என்ற தலைப்புடன் காணப்படும் அந்தச் செய்தி, லங்காதீப பத்திரிகையின் வடிவமைப்பில் காணப்பட்டிருந்ததால், லங்காதீப பத்திரிகையில் இச் செய்தி வெளியிடப்பட்டுள்ளதா என FactSeeker ஆராய்ந்தது. எனினும், அதன் முதன்மைப் பக்கம் மற்றும் உள்ளடக்கப் பக்கங்களில் இவ்வாறு எந்த செய்தியும் காணப்படவில்லை.

இதைத் தொடர்ந்து, லங்காதீப பத்திரிகையின் ஆசிரியர் குழுவிடம் வினவியபோது, இச்செய்தி 2025 மே 12 அன்று அவர்கள் பிராந்திய பதிப்பில் மட்டுமே வெளியிடப்பட்டதாகவும், அச் செய்தி மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவரை மூலமாகக் கொண்டு எழுதப்பட்டதாகவும் உறுதிப்படுத்தினர்.

இது குறித்து இலங்கை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி புத்திக மனதுங்கவிடம் FactSeeker வினவிய போது, இந்தச் செய்தியில் கூறப்படுகின்ற சிலை விற்பனை சம்பந்தமாக தங்களுக்கு எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை என தெரிவித்தார்.

மேலும், இது தொடர்பில் ஹயேஷிகா பெர்னாண்டோவின் ஊடகப் பேச்சாளர் அனில் பிரசங்கவிடம் FactSeeker வினவிய போது, இது பொய்யானதொரு தகவல் என தெரிவித்தார். இத்தகைய சிலையொன்றைப் பற்றிய தகவலை அவர்கள் சமூக ஊடகப் பதிவுகள் மூலமாக மட்டுமே அறிந்ததாகவும் மேலும் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, ஹயேஷிகா பெர்னாண்டோ கடந்த ஏப்ரல் 19 ஆம் திகதி தனது உத்தியோகப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிட்ட காணொளியில் (40:43), ரூ.25,000க்கு சிலைகளை விற்பனை செய்கிறார் என்ற தகவல் தவறானது எனவும், அந்த செய்தி பொய்யானது எனவும் தெளிவுபடுத்தியிருந்தார்.

  • https://www.facebook.com/share/v/1FtwmgrpQm/

இந்நிலையில், தங்களை Entertainment Website என வகைப்படுத்தும் “சமரகோன் பூஜை பொருள் உற்பத்தியாளர்கள்” எனும் முகநூல் பக்கத்தில் கடந்த ஏப்ரல் 18 ஆம் திகதி வெளியிட்ட லங்காதீப செய்தியின் படத்தை அடிப்படையாகக் கொண்டு “ஹயேஷிகா குருதேவி சிலை” எனும் தலைப்பில் ஒரு விளம்பர பதிவை வெளியிட்டுள்ளது. பின்னர், இதை அடிப்படையாக வைத்து மதங்களை இழிவுப்படுத்தும் நோக்கில் இன்னும் ஒரு பதிவு வெளியிடப்பட்டுள்ளது.

  • https://www.facebook.com/share/p/1BdintSMC4/
  • https://www.facebook.com/share/p/199iSgbWgW/

எனினும், “சமரகோன் பூஜைப் பொருள் உற்பத்தியாளர்கள்” என்ற பெயரில் இயங்கும் அந்த முகநூல் பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்த தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்ட போது, எந்த நம்பகமான தகவலையும் பெற முடியவில்லை.

ஆகவே, ஹயேஷிகா பெர்னாண்டோ தனது சிலைகளை உருவாக்கி விற்பனை செய்கிறார் என வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானது என்பதை FactSeeker உறுதிப்படுத்துகிறது.

Latest updates

#FAKE

அமெரிக்க தூதரகம் தொடர்பான ‘பொக்ஸ் நியூஸ்’ இன் லோகோவுடன் பகிரப்படும் போலியான செய்தி

மார்ச் 24, 2026

#Misleading

ஜனாதிபதியின் ஊடக சந்திப்பின் போது தேசியக் கொடியின் நிறம் மாற்றப்பட்டுள்ளதா?

மார்ச் 20, 2026

#FAKE

ஈரானிய கடற்படைக் கப்பல் தாக்கப்பட்டமை குறித்து இந்திய ராணுவத் தளபதி கூறியதாக பரவும் போலி வீடியோ

மார்ச் 11, 2026

#FAKE

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, மூன்றாம் சார்லஸ் மன்னரைச் சந்தித்ததாகப் பரவும் போலி புகைப்படம்

பிப்ரவரி 28, 2026

Related Content

இந்தோனேசிய வெள்ளம் எனப் பகிரப்படும் AI காணொளி

பிப்ரவரி 13, 2026

சனூஸ் எம்.பெரோஸ் அவர்கள் 2022 இல் காலமானார் : இன்றென பகிரப்படும் தவறான செய்திகள்

பிப்ரவரி 3, 2026

நடிகர் ரஜித ஹிரான் கெஸ்பேவ தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்படவில்லை

பிப்ரவரி 1, 2026

வைரளாக பகிரப்படும் ஜனாதிபதியின் AI புகைப்படம்

ஜனவரி 26, 2026

மௌபிமவின் பக்க வடிவமைப்பில் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தொடர்பில் போலிச்செய்தி

ஜனவரி 12, 2026

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2026 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection