நடிகையான மாலினி பொன்சேகா இறந்துவிட்டதாக பகிரப்படும் போலிச்செய்தி

மாலினி பொன்சேகா நலமாக இருப்பதாக சமணாலி பொன்சேகா, தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.
by Anonymous |
மார்ச் 14, 2025

இலங்கை சினிமாவின் முன்னனி நடிகையான மாலினி பொன்சேகா இறந்துவிட்டதாக பதிவொன்று சமூக வலைதளங்களில் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.
நடிகை மாலினி பொன்சேகா சமீபத்தில் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையிலேயே இப்பதிவு சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்படுவதால் FactSeeker இது குறித்து ஆராய்ந்தது.
இது தொடர்பில் ஆராய்ந்த போது மாலினி பொன்சேகாவின் உறவினரான சமணாலி பொன்சேகா, தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவொன்றை அவதானிக்க முடிந்தது.
அப் பதிவில், அத்தை நலமாக இருக்கிறார் என்றும் அத்தை குணமடைய உதவிய மற்றும் வாழ்த்திய அனைத்து அன்பர்களுக்கும் நன்றி எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆகவே, இலங்கை சினிமாவின் முன்னனி நடிகையான மாலினி பொன்சேகா இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்ற செய்தி உண்மைக்கு புறம்பானது என்பதை FactSeeker உறுதிப்படுத்துகிறது.