Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு

மருந்துகளுக்கான வட் வரி இன்றும் நடைமுறையில் உள்ளதா ?

Partially factual
Partially factual

2023 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க, சேர்பெறுமதி வரி (திருத்தச்) சட்டம் மற்றும் 2025ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வரவு செலவுத்திட்ட உரைகளை அவதானித்ததில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் மருந்துகள் வட் வரியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.

by Anonymous |

பிப்ரவரி 27, 2025

இலங்கையில் மருந்துகளுக்கான வட் வரியானது இன்றும் நடைமுறையில் உள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ள நிலையில், அவ்வாறான வரி எதுவும் அறவிடப்படுவதில்லை என எதிர்கட்சியின் கூற்றை அரசாங்கம் முழுமையாக நிராகரித்து வாத விவாதங்களில் ஈடுபடுவதை பாராளுமன்றத்தில் அவதானிக்க முடிந்துள்ளது.

பாராளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்ற வரவு செலவு திட்ட விவாதத்தில் பல தவறான தகவல்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாலே தெரிவிக்கப்படுவதால், இலங்கையில் மருந்துப் பொருட்களுக்கான வட் வரி அறவீடு உள்ளதா என்பது குறித்து factseeker ஆராய்ந்தது.

அதற்கமைய, ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார, கடந்த 26 ஆம் திகதி இடம்பெற்ற வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் போது, “இலங்கையில் மருந்துகளுக்கான வட் வரியானது இன்றும் நடைமுறையில் உள்ளது” என்ற கூற்றின் உண்மைத்தன்மை குறித்து ஆராயப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார :- சுகாதாரத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டாலும்,நோயாளிகள் இன்னும் 18 சதவீத வரி செலுத்த வேண்டிய சூழ்நிலையில் உள்ளதாக குற்றம் சுமத்தினார்.

இதற்கு பதிலளித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய :- மருந்துகளுக்கு விதிக்கப்பட்டுள்ள வட்-வரி குறித்து பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் குற்றச்சாட்டு தவறானது என்றும், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகளுக்கான மூலப்பொருட்களின் வட் வரி நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இக் கூற்றுகளின் உண்மை தன்மைகள் குறித்து ஆராய்ந்த போது, 2023 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க, சேர்பெறுமதி வரி (திருத்தச்) சட்டம் மற்றும் 2025ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வரவு செலவுத்திட்ட உரைகளை அவதானிக்க முடிந்தது. இவற்றை ஆராய்ந்ததில், 2024 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் மருந்துகள் வட் வரியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.

இவ் வரி விலக்கு பட்டியலில் மருந்துகள்,மருத்துவ உற்பத்திப் பொருட்கள் மற்றும் மூலப்பொருட்கள் ஆகியவை வட் வரியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகவே, 2024 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி முதல் மருந்துகளுக்கு விதிக்கப்பட்ட 18% வட் வரி நீக்கப்பட்டுள்ளதுடன், “இலங்கையில் மருந்துக்களுக்கான வட் வரியானது இன்றும் நடைமுறையில் உள்ளது” என்று பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார கூறிய கூற்று தவறானது என்பதும் உறுதியாகின்றது.

எனினும், 2024 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகள் மற்றும் ஆயுர்வேத மருந்துகளின் பொதிகளுக்கு பயன்படுத்தப்படும் பொதியிடல் பொருட்கள் வட் வரிக்கு உற்படுத்தப்பட்டிருந்தன.

இது தொடர்பாக, 2025 ஆம் ஆண்டு வரவு-செலவு திட்டத்தின் IVவது இணைப்பில்,”2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, சேர்பெருமதி வரி சட்டத்தில் சில மாற்றங்கள்” முன்மொழியப்பட்டுள்ளன.

அந்த முன்மொழிவுகளில் ஒன்று, “இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகள் மற்றும் ஆயுர்வேத மருந்துகளின் பொதிகளுக்கு பயன்படுத்தப்படும் பொதியிடல் பொருட்களையும் வட் வரியிலிருந்து விடுவிப்பதாகும்”.

ஆகவே, மருந்துகளுக்கு விதிக்கப்பட்டிருந்த வட் வரி நீக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பாராளுமன்றத்தில் விளக்கமளித்த பிரதமர் ஹரிணி அமரசூரியவின் கூற்றுக்கள் உண்மையானது என்பதையும் “இலங்கையில் மருந்துக்களுக்கான வட் வரியானது இன்றும் நடைமுறையில் உள்ளது” என்று பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார கூறிய கூற்று தவறானது என்பதையும் FactSeeker உறுதிப்படுத்துகிறது.

සිංහල

|

ENGLISH

|

Latest updates

#false

இந்தோனேசிய வெள்ளம் எனப் பகிரப்படும் AI காணொளி

பிப்ரவரி 13, 2026

#FAKE

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேயிலை கொழுந்து பறிக்கும் கூடையைச் சுமந்து செல்வது போன்ற புகைப்படம் போலியானது

பிப்ரவரி 12, 2026

#AI generated

பாலம் இடிந்து விழுந்ததாக பகிரப்படும் AI காணொளி : Grok AI-இன் பதில்களிலும் தவறு

பிப்ரவரி 9, 2026

#false

சனூஸ் எம்.பெரோஸ் அவர்கள் 2022 இல் காலமானார் : இன்றென பகிரப்படும் தவறான செய்திகள்

பிப்ரவரி 3, 2026

Related Content

இந்தோனேசிய வெள்ளம் எனப் பகிரப்படும் AI காணொளி

பிப்ரவரி 13, 2026

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேயிலை கொழுந்து பறிக்கும் கூடையைச் சுமந்து செல்வது போன்ற புகைப்படம் போலியானது

பிப்ரவரி 12, 2026

பாலம் இடிந்து விழுந்ததாக பகிரப்படும் AI காணொளி : Grok AI-இன் பதில்களிலும் தவறு

பிப்ரவரி 9, 2026

சனூஸ் எம்.பெரோஸ் அவர்கள் 2022 இல் காலமானார் : இன்றென பகிரப்படும் தவறான செய்திகள்

பிப்ரவரி 3, 2026

நடிகர் ரஜித ஹிரான் கெஸ்பேவ தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்படவில்லை

பிப்ரவரி 1, 2026

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2026 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection