Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #false

கடன் ஒப்பந்த அடிப்படையிலேயே உலக வங்கி 200 மில்லியன் டொலரை இலங்கை அரசாங்கம் பெற்றுக்கொண்டது

False
False

இக் கடன் ஒப்பந்தத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நிதியமைச்சின் செயலாளர் K.M. மகிந்த சிறிவர்தன மற்றும் உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் டேவிட் சிஸ்லேன் ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.

by Anonymous |

நவம்பர் 13, 2024

உலக வங்கியிடமிருந்து இலங்கை அரசாங்கம் 200 மில்லியன் டொலர் கடனைப் பெற்றுக்கொள்ளவில்லை என்றும் அரசாங்கத்திற்கு சர்வதேச அமைப்புகளின் அதிகபட்ச ஆதரவு கிடைத்துள்ளதால் உலக வங்கியால் இந்த நிதி வழங்கப்பட்டதாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்திருந்த நிலையில், இது குறித்து சமூக வலைதளங்களில் அதிகளவில் விவாதிக்கப்படுவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.

https://lankacnews.com/%e0%b6%bd%e0%b7%9d%e0%b6%9a-%e0%b6%b6%e0%b7%90%e0%b6%82%e0%b6%9a%e0%b7%94%e0%b7%80-%e0%b6%85%e0%b6%b4%e0%b7%92-%e0%b6%89%e0%b6%bd%e0%b7%8a%e0%b6%bd%e0%b7%94%e0%b7%80%e0%b7%99%e0%b6%ad%e0%b7%8a/

மேலும், உலக வங்கியிடமிருந்து நாங்கள் கடன்களை பெற்றுக்கொள்ளவில்லை என்றும் இது உதவித்தொகையாக கிடைத்தது என்றும் தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆராய்ந்த போது, இலங்கையின் பொருளாதார நிலை மற்றும் மறுசீரமைப்புக் கொள்கைகளுக்கு ஆதரவாக உலக வங்கி குழுமத்தின் சர்வதேச வளர்ச்சி சங்கம் (IDA) மூலம் மேலும் 200 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்பட்டதாக அறிய முடிந்தது. இக் கடன் ஒப்பந்தத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நிதியமைச்சின் செயலாளர் K.M. மகிந்த சிறிவர்தன மற்றும் உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் டேவிட் சிஸ்லேன் ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர். இவ் வேலைத்திட்டமானது 2023-2024 ஆகிய இரண்டு வருடங்களில் அமுல்படுத்தப்படும் மற்றும் 2023 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட கடன் ஏற்கனவே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில் வழக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, உலக வங்கியும் தனது இணையதளத்தில் முழுமையான விளக்கத்தை வெளியிட்டுள்ளது.

https://www.worldbank.org/en/news/press-release/2024/10/07/world-bank-signs-additional-200-million-to-support-sri-lanka-s-economic-reforms#:~:text=World%20Bank%20Signs%20Additional%20%24200%20Million%20to%20Support%20Sri%20Lanka’s%20Economic%20Reforms,-Share%20more&text=COLOMBO%2C%20October%207%2C%202024%20%E2%80%93,(DPO)%20for%20%24200%20million

இலங்கையின் மறுசீரமைப்பு, நிலைப்படுத்தல் மற்றும் பொருளாதாரத்தை சுமூக நிலைக்கு கொண்டு வருவதற்கான (RESET) அபிவிருத்தி கொள்கைகளுக்கு நிதியளிக்கும் (DPF) வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் இந்த நிதி உதவி இலங்கைக்கு கிடைத்துள்ளது. இவ் வேலைத்திட்டத்தின் முதல் கட்டம் 2023 ஆண்டில் செயற்படுத்தப்பட்டதுடன், பிரதான மூன்று துறைகளின் கீழ் ஏழு வேலைத்திட்டங்கள் முழுமைப்படுத்தப்பட்ட பின்னர், 500 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை இலங்கை பெற்றுக்கொள்ள முடியும். அவ்வொப்பந்தப் பணிகளை நிறைவேற்றியதன் அடிப்படையில், இரண்டாம் கட்டமாக 200 மில்லியன் டொலர் கடனாக வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதில் இத் தொகை கடனாகவே வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டப்பட்டுள்ளது.

https://pmd.gov.lk/ta/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA/

பொருளாதார செய்திகளை தெரிவிக்கும் EconomyNext இணையத்திலும், உலக வங்கியால் வழங்கப்பட்ட 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் திட்டம் பற்றிய விபரங்கள் தொகுக்கப்பட்டுள்ளது.

Sri Lanka inks US$200mn World Bank loan for budget support

ஆகவே, இத் தொகையானது கடனாகவே கிடைக்கபெற்றுள்ளது என்பதையும் இது புதிய அரசாங்கத்தின் கீழ் முதல் தடவையாக கிடைத்த கடன் இல்லை என்பதையும் FactSeeker உறுதிப்படுத்துகிறது.

Latest updates

#false

இந்தோனேசிய வெள்ளம் எனப் பகிரப்படும் AI காணொளி

பிப்ரவரி 13, 2026

#FAKE

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேயிலை கொழுந்து பறிக்கும் கூடையைச் சுமந்து செல்வது போன்ற புகைப்படம் போலியானது

பிப்ரவரி 12, 2026

#AI generated

பாலம் இடிந்து விழுந்ததாக பகிரப்படும் AI காணொளி : Grok AI-இன் பதில்களிலும் தவறு

பிப்ரவரி 9, 2026

#false

சனூஸ் எம்.பெரோஸ் அவர்கள் 2022 இல் காலமானார் : இன்றென பகிரப்படும் தவறான செய்திகள்

பிப்ரவரி 3, 2026

Related Content

இந்தோனேசிய வெள்ளம் எனப் பகிரப்படும் AI காணொளி

பிப்ரவரி 13, 2026

சனூஸ் எம்.பெரோஸ் அவர்கள் 2022 இல் காலமானார் : இன்றென பகிரப்படும் தவறான செய்திகள்

பிப்ரவரி 3, 2026

நடிகர் ரஜித ஹிரான் கெஸ்பேவ தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்படவில்லை

பிப்ரவரி 1, 2026

வைரளாக பகிரப்படும் ஜனாதிபதியின் AI புகைப்படம்

ஜனவரி 26, 2026

மௌபிமவின் பக்க வடிவமைப்பில் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தொடர்பில் போலிச்செய்தி

ஜனவரி 12, 2026

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2026 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection