Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு

அரசியல்வாதி ஒருவரின் தலையீட்டால் பொலிஸ் அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டதா?

Misleading
Misleading

தற்போதைய பதில் பொலிஸ் மா அதிபரின் பரிந்துரையின் பேரில் இந்த இடமாற்றங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் செய்திகளும் உண்மைக்கு புறம்பானவை

by Anonymous |

அக்டோபர் 18, 2024

‘‘அரசியல்வாதி ஒருவரின் தலையீட்டால் பொலிஸ் அதிகாரி கிராமத்திற்கு இடமாற்றம்’’ என்ற தலைப்பில் கடந்த 11 ஆம் திகதி “அருண” பத்திரிகையில் வெளியான செய்தி ஒன்றை மேற்கோள்காட்டி பிரதான ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் செய்திகள் சில பகிரப்படுவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.

இது சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளதால் factseeker இது குறித்து ஆராய்ந்தது.

11.10.2024 வெள்ளிக்கிழமை அன்று ‘அருண’ பத்திரிகையில் வெளியான செய்தி பின்வருமாறு,

“அநுராதபுரம் பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகரை மன்னாருக்கு இடமாற்றம் செய்த சம்பவத்தில்  உதவி பொலிஸ் அத்தியட்சகருக்கு தனது கிராமத்தில் நியமனம் வழங்கும் நோக்கில்  அரசியல்வாதி ஒருவரின் தலையீடு இருந்ததாக பொலிஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த இடமாற்றம், பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய அவர்களின் பரிந்துரையில் இடம்பெறுள்ளது. இதன்படி, பொலிஸ் அத்தியட்சகர் ஆர்.எஸ்.தர்மதாச அனுராதபுரம் பிரிவில் இருந்து மன்னாருக்கும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் பி.எல்.விதான அனுராதபுரத்திற்கும் மாற்றப்பட்டார். இது அரசியல்வாதி ஒருவரின் தலையீட்டால் இடம்பெற்றதாக பொலிஸ் வட்டாரங்கள் குறிப்பிட்டன.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான சட்டத்தரணி நிஹால் தல்துவவிடம் factseeker வினவிய போது, “இந்த இடமாற்றங்கள் சில மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற அங்கீகரிக்கப்பட்ட இடமாற்றங்கள் என்றும் தேர்தல் காலம் என்பதால் இந்த செய்திகளை அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், இவ் இடமாற்றம் குறித்த செய்திகளை அனுப்புவது தேர்தல் ஆணையத்தின் அனுமதியுடன் இடம்பெற வேண்டும் என்றும் குறிப்பிட்டார். தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே அதற்கான அனுமதி கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், இது குறித்து தேசிய போலீஸ் ஆணைக்குழுவிடம் FactSeeker வினவிய போது, தற்போதைய பதில் பொலிஸ் மா அதிபருக்கும் இந்த இடமாற்றங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும், அப்போதைய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க இது தொடர்பான பரிந்துரைகளை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தனர்.

26.07.2024 அன்று தேர்தல் ஆணையம் ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை அறிவித்தது முதல் ஜனாதிபதி தேர்தல் காலம் ஆரம்பமானது. தேர்தல் காலத்தில், அரச சேவையில் சில நியமனங்கள், பதவி உயர்வுகள் மற்றும் இடமாற்றங்கள் தொடர்பான அனுமதிக்கு தேர்தல் ஆணையத்திடம் பரிந்துரைப்பதே தற்போதைய நடைமுறையாகும்.

இது தொடர்பில் மேலும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிடம் வினவிய போது, பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்களின் இடமாற்றங்களுக்கான அங்கீகாரத்திற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கடிதம் அனுப்பியுதாக தெரிவித்தனர்.

கடந்த 15ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான விஜித ஹேரத், இது தொடர்பில் கருத்துத் தெரிவித்திருந்தார். அதில் “தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே இந்த இடமாற்றங்கள் இடம்பெற்றதாகத் தெரிவித்தார்”.

மேலும், அதே ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான சட்டத்தரணி நிஹால் தல்துவ, “இந்த இடமாற்றங்கள் பல மாதங்களுக்கு முன்னரே மேற்கொள்ளப்பட்டதாகவும், தேர்தல் காலம் என்பதால், அதற்கான அனுமதியுடன் அண்மையில் இது தொடர்பான அறிவிப்புகள் அனுப்பப்பட்டதாகவும்” தெரிவித்தார்.

ஆகவே, தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே இந்த இடமாற்றங்கள் இடம்பெற்றுள்ளது என்பதையும் இது “அரசாங்கத்தின் தலையீட்டால்” நடந்ததாக ஊடகங்களில் வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானது என்பதையும் FactSeeker உறுதிப்படுத்துகிறது.

மேலும், தற்போதைய பதில் பொலிஸ் மா அதிபரின் பரிந்துரையின் பேரில் இந்த இடமாற்றங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் செய்திகளும் உண்மைக்கு புறம்பானவை என்பதை FactSeeker உறுதிப்படுத்துகிறது.

Latest updates

#FAKE

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, மூன்றாம் சார்லஸ் மன்னரைச் சந்தித்ததாகப் பரவும் போலி புகைப்படம்

பிப்ரவரி 28, 2026

#TRUE

இந்தியப் பயணிகளுக்கு இப்போது விசா மற்றும் ETA இன்றி இலங்கைக்கு வரலாம்

பிப்ரவரி 17, 2026

#Misleading

உயிரிழந்த அயூப்ராஜ் அருள் பயாஸின் வயது 17 : பொலிசாரின் அறிக்கையிலேயே தவறு ஏற்பட்டுள்ளது

பிப்ரவரி 16, 2026

#false

இந்தோனேசிய வெள்ளம் எனப் பகிரப்படும் AI காணொளி

பிப்ரவரி 13, 2026

Related Content

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, மூன்றாம் சார்லஸ் மன்னரைச் சந்தித்ததாகப் பரவும் போலி புகைப்படம்

பிப்ரவரி 28, 2026

இந்தியப் பயணிகளுக்கு இப்போது விசா மற்றும் ETA இன்றி இலங்கைக்கு வரலாம்

பிப்ரவரி 17, 2026

உயிரிழந்த அயூப்ராஜ் அருள் பயாஸின் வயது 17 : பொலிசாரின் அறிக்கையிலேயே தவறு ஏற்பட்டுள்ளது

பிப்ரவரி 16, 2026

இந்தோனேசிய வெள்ளம் எனப் பகிரப்படும் AI காணொளி

பிப்ரவரி 13, 2026

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேயிலை கொழுந்து பறிக்கும் கூடையைச் சுமந்து செல்வது போன்ற புகைப்படம் போலியானது

பிப்ரவரி 12, 2026

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2026 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection