Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #Misleading

இலங்கை பத்திரிகை பேரவை பணிப்பாளர் சபை உறுப்பினராகவே செந்தில்வேலவர் நியமிக்கப்பட்டுள்ளார்

Misleading
Misleading

இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் என்ற பெயரில் வெளியிடப்பட்ட செய்திகள் தவறானவையாகும்.

by Anonymous |

ஏப்ரல் 3, 2025

“இலங்கை பத்திரிகை ஸ்தாபன பணிப்பாளர் சபை உறுப்பினராக செந்தில்வேலவர் நியமனம்” என்ற தலைப்பில் செய்திகள் பிரதான ஊடகங்களிலும் அதேபோல் இணையதளங்களிலும் பிரசுரமாகியுள்ளதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.

  • https://shorturl.at/lRlyS
  • https://shorturl.at/xyh6n
  • https://shorturl.at/6et5Z

தினகரன்,வீரகேசரி, தமிழ் மிரர் போன்ற பிரதான செய்தித்தாள்களிலும், அதேபோல் புதிய குரல் மற்றும் UTV ஆகிய செய்தித்தளங்களிலும் இந்த செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளன. எனினும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தால் எந்தவொரு சபை உறுப்பினர் நியமனமும் மேற்கொள்ளப்படவில்லை என்பதால், FactSeeker இது குறித்து ஆராய்ந்தது.

எனினும் இந்த செய்தி குறித்து உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் ஆங்கிலத்தில் sri lanka press council எனக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் அதற்கான தமிழாக்கமானது இலங்கை பத்திரிகை பேரவை என்றே அர்த்தப்படும். எனினும் இலங்கை பத்திரிகை பேரவை என்பதற்கு பதிலாக “இலங்கை பத்திரிகை ஸ்தாபனம்” என தவறாக குறிப்பிடப்பிடப்பட்டுள்ளது. இலங்கை பத்திரிகை ஸ்தாபனமானது எந்தவித அரச தலையீடுகளும் இல்லாது பணியாற்றும் சுயாதீன நிறுவனமாகும்.

இலங்கை பத்திரிகை பேரவையின் பணிப்பாளர் சபை உறுப்பினராக தினகரன் மற்றும் தினகரன் – வாரமஞ்சரி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் தே. செந்தில்வேலவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதத்தை ஊடகத்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கடந்த மார்ச் 26 ஆம் திகதி வெகுசன ஊடக அமைச்சில் வழங்கியுள்ளார்.

ஆகவே, இலங்கை பத்திரிகை பேரவையின் பணிப்பாளர் சபை உறுப்பினராகவே செந்தில்வேலவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதையும், இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் என்ற பெயரில் வெளியிடப்பட்ட செய்திகள் தவறானவை என்பதையும் FactSeeker உறுதிப்படுத்துகிறது.

Latest updates

#FAKE

அமெரிக்க தூதரகம் தொடர்பான ‘பொக்ஸ் நியூஸ்’ இன் லோகோவுடன் பகிரப்படும் போலியான செய்தி

மார்ச் 24, 2026

#Misleading

ஜனாதிபதியின் ஊடக சந்திப்பின் போது தேசியக் கொடியின் நிறம் மாற்றப்பட்டுள்ளதா?

மார்ச் 20, 2026

#FAKE

ஈரானிய கடற்படைக் கப்பல் தாக்கப்பட்டமை குறித்து இந்திய ராணுவத் தளபதி கூறியதாக பரவும் போலி வீடியோ

மார்ச் 11, 2026

#FAKE

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, மூன்றாம் சார்லஸ் மன்னரைச் சந்தித்ததாகப் பரவும் போலி புகைப்படம்

பிப்ரவரி 28, 2026

Related Content

ஜனாதிபதியின் ஊடக சந்திப்பின் போது தேசியக் கொடியின் நிறம் மாற்றப்பட்டுள்ளதா?

மார்ச் 20, 2026

உயிரிழந்த அயூப்ராஜ் அருள் பயாஸின் வயது 17 : பொலிசாரின் அறிக்கையிலேயே தவறு ஏற்பட்டுள்ளது

பிப்ரவரி 16, 2026

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட சிறுவனின் மனவேதனை என பகிரப்படும் காணொளி ஒரு பாடசாலை நாடகமாகும்

டிசம்பர் 18, 2025

நிபந்தனையின் பெயரிலேயே  அஜித் நிவார்ட் கப்ரால் விடுதலை செய்யப்பட்டார்.

டிசம்பர் 12, 2025

சிவனொளிபாதமலையில் மண்சரிவு அனர்த்தம் இடம்பெற்றமை உண்மையே

டிசம்பர் 2, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2026 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection