Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #Misleading

நிஹால் அபேசிங்க மது போதையில் தனது வாகனத்தை பாராளுமன்ற குளத்தில் கவிழ்த்தாரா?

Misleading
Misleading

மோசமான வானிலை காரணமாக இவ்விபத்து ஏற்பட்டதாகவும் இவ்விபத்து இடம்பெற்ற சமயத்தில் தான் இருக்கவில்லை எனவும் நிஹால் அபேசிங்க தெரிவித்தார்.

by Anonymous |

டிசம்பர் 2, 2024

“தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மது போதையில் தனது வாகனத்தை பாராளுமன்ற குளத்தில் கவிழ்த்தார்” என்ற பதிவுகளுடன் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.

இது தொடர்பான பதிவுகள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுவதால் FacSeeker இது குறித்து ஆராய்ந்தது.

இது தொடர்பில் பாராளுமன்ற ஊடகப்பிரிவினரிடம் FactSeeker வினவிய போது, கடந்த நவம்பர் 26 ஆம் திகதி ஏற்பட்ட மோசமான காலநிலை காரணமாக இவ்விபத்து ஏற்பட்டதாகவும் தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் நிஹால் அபேசிங்கவின் வாகனமே இவ்வாறு விபத்திற்குள்ளாகியதாகவும் தெரிவித்தனர். விபத்து இடம்பெற்ற நேரத்தில் பாராளுமன்ற உறுப்பினர் வாகனத்தில் இருக்கவில்லை எனவும் அவர் மது போதையில் இருந்ததாக தகவல்கள் எதுவும் எங்களுக்கு கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தனர்.

மேலும், இது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் நிஹால் அபேசிங்கவிடம் FactSeeker வினவிய போது, சம்பவம் இடம்பெற்ற சமயத்தில் தான் அங்கு இல்லை என்றும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட புகைமூட்டத்தால் இவ்விபத்து ஏற்பட்டதாகவும் தான் மது போதையில் இருந்ததாக பரவிவரும் செய்திகள் போலியானவை என்றும் தெரிவித்தார்.

இது குறித்து பிரதான ஊடகங்களும் செய்திகள் வெளியிட்டிருந்தன.

ஆகவே,”தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மது போதையில் தனது வாகனத்தை பாராளுமன்ற குளத்தில் கவிழ்த்தார்” என சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட பதிவுகள் போலியானவை என்பதை FactSeeker உறுதிப்படுத்துகிறது.

Latest updates

#FAKE

அமெரிக்க தூதரகம் தொடர்பான ‘பொக்ஸ் நியூஸ்’ இன் லோகோவுடன் பகிரப்படும் போலியான செய்தி

மார்ச் 24, 2026

#Misleading

ஜனாதிபதியின் ஊடக சந்திப்பின் போது தேசியக் கொடியின் நிறம் மாற்றப்பட்டுள்ளதா?

மார்ச் 20, 2026

#FAKE

ஈரானிய கடற்படைக் கப்பல் தாக்கப்பட்டமை குறித்து இந்திய ராணுவத் தளபதி கூறியதாக பரவும் போலி வீடியோ

மார்ச் 11, 2026

#FAKE

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, மூன்றாம் சார்லஸ் மன்னரைச் சந்தித்ததாகப் பரவும் போலி புகைப்படம்

பிப்ரவரி 28, 2026

Related Content

ஜனாதிபதியின் ஊடக சந்திப்பின் போது தேசியக் கொடியின் நிறம் மாற்றப்பட்டுள்ளதா?

மார்ச் 20, 2026

உயிரிழந்த அயூப்ராஜ் அருள் பயாஸின் வயது 17 : பொலிசாரின் அறிக்கையிலேயே தவறு ஏற்பட்டுள்ளது

பிப்ரவரி 16, 2026

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட சிறுவனின் மனவேதனை என பகிரப்படும் காணொளி ஒரு பாடசாலை நாடகமாகும்

டிசம்பர் 18, 2025

நிபந்தனையின் பெயரிலேயே  அஜித் நிவார்ட் கப்ரால் விடுதலை செய்யப்பட்டார்.

டிசம்பர் 12, 2025

சிவனொளிபாதமலையில் மண்சரிவு அனர்த்தம் இடம்பெற்றமை உண்மையே

டிசம்பர் 2, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2026 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection