Mr. bean சுகவீனமுற்றுள்ளதாக பகிரப்படும் பொலி புகைப்படம்

1990 இல் Mr bean நடித்த தொலைக்காட்சி தொடரின் புகைப்படம் ஒன்றையும் 2024 இல் அவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதை போல் உள்ள புகைப்படத்தையும் ஒப்பிட்டு பல பதிவுகள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்படுகின்றன.
by Anonymous |
ஜூலை 23, 2024

உலகம் முழுவதும் இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் மத்தியில் Mr bean என்று அழைக்கப்படும் பிரபலமான நகைச்சுவை நடிகரான ரோவன் செபஸ்டியன் அட்கின்சன், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதாக சித்தரிக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.
1990 இல் Mr bean நடித்த தொலைக்காட்சி தொடரின் புகைப்படம் ஒன்றையும் 2024 இல் அவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதை போல் உள்ள புகைப்படத்தையும் ஒப்பிட்டு பல பதிவுகள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்படுகின்றன.
இது குறித்து ஆராய்ந்து பார்த்ததில், இது போலியான செய்தி என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.
அத்துடன், Mr. Bean என தெரிவிக்கும் புகைப்படமானது, வேறு ஒருவரது புகைப்படத்தை பயன்படுத்து AI தொழிநுட்பம் மூலமாக போலியாக உருவாக்கப்பட்டது என்பதையும் கண்டறிய முடிந்தது.
Mr. Bean இன் தற்போதைய நிலை என கூறப்படும் புகைப்படத்தின் உண்மையான புகைப்படமானது, 2020 இல் இறந்த Barry Balderston என்ற நபரின் புகைப்படமாகும்.
ஆகவே, Mr. Bean சுகவீனமுற்று படுக்கையில் இருப்பதை போன்று காட்டும் புகைப்படமும் அதனுடன் பரவும் செய்தியும் போலியானது என்பதை factseeker உறுதிப்படுத்துகின்றது.