வரி விதிப்பு குறித்து மனுஷ நாணயக்கார கூறிய கருத்து முற்றிலும் உண்மையல்ல

சீனி மற்றும் பருப்பு ஆகிய பொருட்களின் வரிகள் ஒரு வருடத்திற்கு பின் மீண்டும் புதுப்பிக்கப்பட்டவை
by Anonymous |
நவம்பர் 8, 2024

தேர்தல் பிரசாரத்தின் போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார, அரசாங்கம் விதித்த வரிகள் குறித்து கருத்து தெரிவித்த காணொளியொன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்ற நிலையில் அது குறித்து FactSeeker அவதானம் செலுத்தியது.
அக் காணொளியில் மனுஷ நாணயக்கார பின்வருமாறு கருத்து தெரிவித்தார்,
“இந்த அரசாங்கம் வந்தவுடன் வரிகளை குறைப்பதாக தெரிவித்தார்கள் அல்லவா? ஆனால் என்ன செய்தார்கள்? வந்த உடனேயே வெங்காயத்துக்கு வரி விதித்தார்கள். உருளைக்கிழங்கு, பருப்பு, இறால் மற்றும் மாசி ஆகியவற்றுக்கு வரி விதித்தார்கள். இப்போது சீனிக்கும் 50 ருபாய் வரி விதித்துள்ளார்கள். வரிகளை குறைப்பதாக கூறியவர்கள் தான் இன்று அதிக வரிகளை விதித்துள்ளார்கள். என்று அவர் தெரிவித்தார்.
காணொளி : Manusha Nanayakkaara
இது போன்றே மாசி மற்றும் பருப்பு போன்ற பொருட்களின் வரிகள் தொடர்பில் சமூகவலைதளங்களில் பல கருத்துக்கள் பகிரப்பட்டு வந்ததால் FactSeeker இது குறித்து ஆராய்ந்தது.
இது குறித்து ஆராய்ந்த போது, நிதி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் வரிகள் தொடர்பில் வெளியிட்டிருந்த அறிக்கைகளை அவதானிக்க முடிந்தது.
புதிய அறிக்கை –https://www.treasury.gov.lk/api/file/4e7e4248-8e29-4ee0-8254-84e45380d3b6
பழைய அறிக்கை – https://www.treasury.gov.lk/api/file/4a7629af-034a-4938-b07a-cfdbfd5f2d3a
புதிய அறிக்கை – https://www.treasury.gov.lk/api/file/0bad9fc3-fc71-4f9b-becb-d1a157275054
பழைய அறிக்கை – https://www.treasury.gov.lk/api/file/47a167ad-f3e8-4dd4-83fa-8017dae63242
இவ்வறிக்கையின் படி சீனி மற்றும் பருப்பு ஆகிய பொருட்களின் வரிகள் ஒரு வருடத்திற்கு பின் மீண்டும் புதுப்பிக்கப்பட்டவை என்பதையும் அவை புதிதாக விதிக்கப்பட்ட வரிகள் இல்லை என்பதையும் உறுதிப்படுத்த முடிந்தது.
மேலும், உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் ஆகியவற்றுக்கு புதிய வரிகள் விதிக்கப்பட்டுள்ளன என்பதையும் அறிய முடிந்தது.
இது குறித்த தெளிவை கீழே உள்ள பட்டியலை அவதானிப்பதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
ஆகவே, மனுஷ நாணயக்கார கூறிய அனைத்து பொருள்களுக்கும் புதிய வரிகள் விதிக்கப்படவில்லை என்பதையும் சில பொருட்களுக்கு புதிய வரிகள் விதிக்கப்பட்டுள்ளன என்பதையும் FactSeeker உறுதிப்படுத்துகிறது.