யாழ்ப்பாணத்தின் வானில் ஒளிக்கற்றைகள் தோன்றியதா?

புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து தெளிவான கருத்து இல்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
by Anonymous |
நவம்பர் 29, 2024

கடந்த சில நாட்களாக இலங்கையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக பல்வேறு பதிவுகள் சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வானத்தில் ஒளிக்கற்றைகள் தோன்றியதாக புகைப்படங்கள் சில சமூகவலைதளங்களில் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.
அவை யாழ்ப்பாணத்தில் தோன்றியதாக பகிரப்படுவதால் FactSeeker இது குறித்து ஆராய்ந்தது.
இப் புகைப்படங்களை Google Lens மூலம் ஆராய்ந்ததில், இது அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் என பகிரப்பட்டிருந்த பல பதிவுகளை அவதானிக்க முடிந்தது.
அரிசோனாவில் இது போன்ற ஒளிக்கற்றைகள் தோன்றியதா என ஆராய்ந்ததில், இது குறித்து இவ்வாண்டு மார்ச் 25 ஆம் திகதி ‘Irishstar’ மற்றும் ‘Dailystar’ ஆகிய தளங்கள் வெளியிட்டுள்ள கட்டுரைகளை அவதானிக்க முடிந்தது.
https://www.irishstar.com/news/us-news/bizarre-ring-shaped-ufos-sky-32435777
https://www.dailystar.co.uk/news/us-news/ring-shaped-ufos-caught-bizarre-32434194
அக் கட்டுரையில் “இப் புகைப்படம் உண்மையானது என அனைவரும் நம்பவில்லை. சிலர் அதை Photoshop மென்பொருளின் மூலம் உருவாக்கப்பட்டதாகவும், கண்ணாடி மூலம் எடுக்கப்பட்டு வெளிச்சத்தின் பிரதிபலனாக நிகழ்ந்ததாகவும் நம்புகின்றனர். இதன் பெயரில், வெளிநாட்டு ஊடகத் தகவல்களின் படி, புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து தெளிவான கருத்து இல்லை.” என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆகவே, இப் புகைப்படங்கள் யாழ்ப்பாணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் இல்லை என்பதையும் இது குறித்து பகிரப்படுகின்ற பதிவுகள் மக்களை தவறாக வழிநடத்தும் பதிவுகள் என்பதையும் FactSeeker உறுதிப்படுத்துகிறது.