மௌமிதா டெப்நாத்தின் இறுதிக் காணொளியென பகிரப்படும் போலிக்காணொளி

மௌமிதா டெப்நாத் இறப்பதற்கு முன், தனது தாயாருக்கு அனுப்பிய காணொளி எனக் கூறப்படும் தகவல் தவறாக செய்தியாகும்.
by Anonymous |
ஆகஸ்ட் 20, 2024

இந்தியாவில், கொல்கத்தா RG KAR மருத்துவக் கல்லூரியின் மருத்துவர் மௌமிதா டெப்நாத் இறப்பதற்கு முன், தனது தாயாருக்கு அவர் இறுதி நேரத்தில் அனுப்பிய காணொளி எனக் கூறப்படும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுவருவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.
இதன் உண்மைத்தன்மை குறித்து factseeker ஆராய்ந்து பார்த்ததில், அவ்வாறு பகிரப்படும் காணொளியில் உள்ள நபர் படுகொலை செய்யப்பட்ட மௌமிதா டெப்நாத் அல்ல என்பதை factseeker இனால் உறுதிப்படுத்த முடிந்தது.
இது குறித்து இந்தியாவின் பிரபல தரவுகள் சரிப்பார்க்கும் இணையத்தளமான Fact Crescendo இணையதளம் குறித்த வெளியிட்டுள்ள செய்தியை அவதானிக்க முடிந்தது. அதில், “இக் காணொளியின் அசல் பதிவை கண்டறிய முயற்சித்தோம், அதைப் பற்றிய எந்தத் தகவலையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் இது ஆகஸ்ட் 15 முதல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது என்றும் இது தவறாக வழிநடத்தும் தகவல் என்றும் உறுதிப்படுத்தியிருந்தது.
ஆகவே மௌமிதா டெப்நாத் இறப்பதற்கு முன், தனது தாயாருக்கு அவரது கடைசி நேரத்தில் அனுப்பிய காணொளி எனக் கூறப்படும் தகவல் தவறாக வழிநடத்தும் செய்தி என factseeker உறுதிப்படுத்துகிறது.