மின் கட்டணம் 22.5 சதவீதத்தால் குறைவடையும் என போலியான காணொளி பகிரப்படுகின்றது.
இந்தக் காணொளியில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பதவியேற்பு நிகழ்வின் சில புகைப்படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
by Anonymous |
செப்டம்பர் 30, 2024
நாளை முதல் மின் கட்டணம் 22.5 சதவீதத்தால் குறைவடையும் என சமூக வலைதளங்களில் பகிரப்படும் காணொளி ஒன்றை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.
சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட காணொளி : https://vt.tiktok.com/ZS2b1Tjy5/
இதன் உண்மைத்தன்மை குறித்து ஆராயுமாறு factseekerக்கு கோரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து factseeker இது குறித்து ஆராய்ந்தது.
இவ்வாறு பகிரப்படும் காணொளியில், தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பதவியேற்பு நிகழ்வின் சில புகைப்படங்கள் பயன்படுத்தப்பட்டதுடன் இக் காணொளியில் பயன்படுத்தப்பட்ட ஒலி வடிவமானது (Audio) ஜூலை 15, 2024 அன்று Hiru TV யில் ஒளிபரப்பப்பட்ட செய்தியின் Audio என்பதையும் அறிய முடிந்தது.
Hiru TV யில் ஒளிபரப்பப்பட்ட செய்தி : https://www.youtube.com/live/gk_iI_HRyBw?si=bwVzefpl0ca1VPXr
ஆகவே, நாளை முதல் மின் கட்டணம் 22.5 சதவீதம் குறைக்கபடும் என சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் காணொளி திரிபுப்படுத்தப்பட்ட காணொளி என்பதையோ Factseeker உறுதிப்படுத்துகிறது.