Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #Misleading

மக்கள் விரும்பினால், ஒரு இடைக்கால அரசாங்கத்தை அமைக்க ரணில் தயார் என பகிரப்படுவது பழைய செய்தியாகும்

Misleading
Misleading

ஸ்வர்ணவாஹினி நியூஸ் facebook பக்கத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட செய்தியே மீண்டும் பகிரப்படுகின்றது.

by Anonymous |

ஏப்ரல் 24, 2025

“மக்கள் விரும்பினால், ஒரு இடைக்கால அரசாங்கத்தை அமைக்க ரணில் தயாராக உள்ளார்” என ஸ்வர்ணவாஹினி (swarnavahini) தொலைக்காட்சியின் Live at 8 செய்தியில் கூறப்பட்டுள்ளதாக பகிரப்படும் பதிவொன்று சமூக வலைதளங்களில் பகிரப்படுவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.

எனினும் சுவர்ணவாஹினி தொலைக்காட்சி அதன் செய்தித்தளத்தில் தற்போது Live at 8 என்பதற்குப் பதிலாக Live at srilanka என்றே பயன்படுத்துவதால், இந்தப் பதிவின் நம்பகத்தன்மையைச் சரிபார்க்க FactSeeker இந்த செய்தியின் உண்மைத்தன்மையை ஆராய்ந்தது.

அந்தவகையில், Google Reverse Image Search மூலமாக இதனை ஆராய்ந்து பார்த்ததில், ​​இந்தப் பதிவு முதன்முதலில் ஸ்வர்ணவாஹினி நியூஸ் facebook பக்கத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் திகதி அன்று வெளியிடப்பட்டதை அவதானிக்க முடிந்தது. இந்தப் பதிவு, போராட்டத்தின் போது போக்குவரத்து தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் ரணில் விக்கிரமசிங்க நடத்திய கலந்துரையாடலின் போது தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் செய்தியாக பிரசுரிக்கப்படிருந்தது.

எனவே,”மக்கள் விரும்பினால், ஒரு இடைக்கால அரசாங்கத்தை வழிநடத்த ரணில் தயாராக உள்ளார்” என , சுவர்ணவாஹினி Live at 8 செய்தி வெளியிட்டுள்ளதாக பகிரப்பட்ட இந்த பதிவுகள் சமீபத்திய செய்தியல்ல என்பதையும் எவ்வாறான சமூக ஊடகப் பதிவுகள் மக்களை தவறாக வழிநடத்துகின்றன என்பதையும் FactSeeker உறுதிப்படுத்துகிறது.

Latest updates

#FAKE

அமெரிக்க தூதரகம் தொடர்பான ‘பொக்ஸ் நியூஸ்’ இன் லோகோவுடன் பகிரப்படும் போலியான செய்தி

மார்ச் 24, 2026

#Misleading

ஜனாதிபதியின் ஊடக சந்திப்பின் போது தேசியக் கொடியின் நிறம் மாற்றப்பட்டுள்ளதா?

மார்ச் 20, 2026

#FAKE

ஈரானிய கடற்படைக் கப்பல் தாக்கப்பட்டமை குறித்து இந்திய ராணுவத் தளபதி கூறியதாக பரவும் போலி வீடியோ

மார்ச் 11, 2026

#FAKE

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, மூன்றாம் சார்லஸ் மன்னரைச் சந்தித்ததாகப் பரவும் போலி புகைப்படம்

பிப்ரவரி 28, 2026

Related Content

ஜனாதிபதியின் ஊடக சந்திப்பின் போது தேசியக் கொடியின் நிறம் மாற்றப்பட்டுள்ளதா?

மார்ச் 20, 2026

உயிரிழந்த அயூப்ராஜ் அருள் பயாஸின் வயது 17 : பொலிசாரின் அறிக்கையிலேயே தவறு ஏற்பட்டுள்ளது

பிப்ரவரி 16, 2026

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட சிறுவனின் மனவேதனை என பகிரப்படும் காணொளி ஒரு பாடசாலை நாடகமாகும்

டிசம்பர் 18, 2025

நிபந்தனையின் பெயரிலேயே  அஜித் நிவார்ட் கப்ரால் விடுதலை செய்யப்பட்டார்.

டிசம்பர் 12, 2025

சிவனொளிபாதமலையில் மண்சரிவு அனர்த்தம் இடம்பெற்றமை உண்மையே

டிசம்பர் 2, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2026 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection