பொதுத்தேர்தல் குறித்து ரணில்-சஜித் கலந்துரையாடியதாக பகிரப்படும் தவறான செய்தி
இப் புகைப்படம், ரணில் விக்கிரமசிங்க தலைமையில் 2019 செப்டெம்பர் மாதம் நடைபெற்ற கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
by Anonymous |
செப்டம்பர் 30, 2024
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையில் எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதாக கூறும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்படுவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.
பாராளுமன்ற தேர்தல் திகதி வெளியாகியுள்ள நிலையில் இப் புகைப்படம் பகிரப்படுவதால் factseeker இது குறித்து ஆராய்ந்தது.
இப் புகைப்படம் குறித்து ஆராய்ந்ததில், இந்த புகைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 26ஆம் திகதி அன்று முன்னாள் அமைச்சர் நவீன் திசாநாயக்கவின் முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட புகைப்படம் என்பதை அறியமுடிந்தது.
https://www.facebook.com/share/Pg6h8rKz68X1WEEg/?mibextid=xfxF2i
மேலும், இப் புகைப்படம், ரணில் விக்கிரமசிங்க தலைமையில் 2019 செப்டெம்பர் மாதம் நடைபெற்ற கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்பதையும் அறிய முடிந்தது.
இது குறித்து Hiru இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளதையும் காணக்கூடியதாக இருந்தது : https://shorturl.at/zoyAq
ஆகவே, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையில் எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றதாக கூறும் புகைப்படம், 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்பதை factseeker உறுதிப்படுத்துகிறது.