பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்கவிடம் மதுபானசாலை அனுமதிப்பத்திரம் உள்ளதா?

பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்கவிற்கு மதுபானசாலை அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக பரப்பப்படும் பதிவுகளில் எந்த உண்மையும் இல்லை.
by Anonymous |
டிசம்பர் 10, 2024

கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்கவிடம் 2024 ஆம் ஆண்டுக்கான மதுபானசாலை அனுமதிப்பத்திரம் உள்ளதாக கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பதிவுகள் பகிரப்படுகின்றன. ஒருசில பெயர் பட்டியலுடன் ஒப்பிட்டு இவ்வாறான பதிவுகள் பகிரப்படுகின்ற காரணத்தினால் இது குறித்து factseeker ஆராய்ந்து பார்த்தது.
2024 ஆம் ஆண்டிற்கான மதுபானசாலை அனுமதிப்பத்திரம் தொடர்பான அனைத்து விபரங்களையும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கடந்த டிசம்பர் 4 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்பித்தார். இது முந்தைய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட மதுபானசாலை அனுமதிப்பத்திரம் என்பதுடன் அது குறித்த முழுமையான பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
https://newswire.lk/ads/Surapath.pdf
இப்பட்டியலின் ஒரு பகுதியை மேற்கோள்காட்டி குறித்த பதிவு பகிரப்படுவதுடன், அதில் குறிப்பிடப்பட்டுள்ள காரணிக்கு அமைய, சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி மாவட்டத்தில் அபேசிங்க டொன் ருவன் சதுரங்க அபேசிங்கவிற்கு மதுபானசாலை அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவுகளில், பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்கவின் புகைப்படத்துடன் “இதனாலேயே மதுபானசாலை அனுமதிப்பத்திர பட்டியல் தாமதமானது” என தலைப்பிடப்பட்டுள்ளது.
அமைச்சர் பிமல் ரத்னாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட மதுபானசாலை அனுமதிப்பத்திர பட்டியலை முழுமையாக Factseeker சரிபார்த்ததில், சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி மாவட்டத்தின் கீழ் பிரதி அமைச்சரின் பெயருடன் ஒத்ததான பெயர் இருப்பதை அவதானிக்க முடிந்தது. இது பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்கவின் பெயரா அல்லது வேறு யாருடையதாவது பெயரா என்பதை உறுதிப்படுத்தும் வகையில் factseeker ஆராய்ந்தது.
தற்போது பிரதியமைச்சராக பதவி வகிக்கும் சதுரங்க அபேசிங்க, கடந்த பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் கொழும்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்டதாக இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் பதிவாகியுள்ளதுடன், வர்த்தமானி அறிவித்தலை ஆராயும் போது அவரது பெயர் சதுரங்க அபேசிங்க என்றே குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர அபேசிங்க டொன் ருவன் சதுரங்க அபேசிங்க என அதில் குறிப்பிடப்படவில்லை. சத்துரங்க அபேசிங்கவின் தந்தை களுத்துறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி தேர்தலில் போட்டியிட்டதுடன், வர்த்தமானி அறிவிப்பில் அவரது பெயர் நிஹால் அபேசிங்க என குறிப்பிடப்பட்டுள்ளது.
வர்த்தமானி அறிவித்தல் இங்கே,
http://documents.gov.lk/files/egz/2024/11/2410-07_S.pdf
நிஹால் அபேசிங்க, தேசிய மக்கள் சக்தியின் செயலாளராகவும் பதவி வகித்து வருவதுடன், ஜனாதிபதித் தேர்தலில் கட்டுப்பணம் செலுத்தியவர்கள் பட்டியலிலும்,கட்சியின் உத்தியோகபூர்வ பட்டியலிலும் முதியன்சலாகே ராஜா நிஹால் அபேசிங்க என அவரது பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
https://elections.gov.lk/web/wp-content/uploads/media-release/MR_18_E.pdf
https://elections.gov.lk/web/wp
அத்துடன் கடந்த மாகாணசபைத் தேர்தலில் கோட்டை மாநகர சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் அவரது முகநூல் கணக்கில் பகிர்ந்துள்ளதுடன், அதிலும் முதியசெலாவின் சதுரங்க அபேசிங்க என குறிப்பிடப்பட்டிருந்தது.
இது தொடர்பில், பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்கவிடம் factseeker வினவியபோது, குறித்த பட்டியலில் சத்துரங்க அபேசிங்க என்ற நபர் இருப்பதாகவும் அது தான் இல்லை எனவும் தெரிவித்ததுடன், பகிரப்படும் பட்டியலில் இருப்பவர் வேறு நபர் எனவும், நானே மதுபானசாலை அனுமதிப்பத்திரம் வைத்துள்ளேன் என பரப்பப்படும் செய்தி பொய்யான செய்தி எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த விடயங்கள் அனைத்தையும் ஆராய்ந்த போது, பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்கவிற்கு மதுபானசாலை அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக பரப்பப்படும் பதிவுகளில் எந்த உண்மையும் இல்லை என்பது உறுதியாகின்றது.
அத்துடன், குறித்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள டொன் ருவன் சதுரங்க அபேசிங்கவின் அடையாளத்தை ஆராய்ந்த போது, அவர் இரத்தினபுரி பிரதேசத்தில் மதுபானசாலையொன்றை நடத்தும் வர்த்தகர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, மதுபானசாலை அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொண்டவர் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க என பகிரப்படும் பதிவுகள் பொய்யானவை என factseeker உறுதிப்படுத்துகின்றது.