பணப்பரிசு தருவதாக ரஞ்சன் கூறியது பழைய காணொளியாகும்.

பணப்பரிசு வழங்கப்போவதாக கூறும் காணொளி ரஞ்சன் ராமநாயக்கவின் அண்மைய நேரலை காணொளி அல்ல
by Anonymous |
அக்டோபர் 2, 2024

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பணப்பரிசு வழங்கப்போவதாக கூறும் காணொளியொன்று சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.
இவ்வாறு பகிரப்பட்ட காணொளியுடன் பின்வருமாறு பதிவுகளும் பரிமாறப்பட்டன.
• முதலில் வணக்கம் சொல்லும் 240 பேருக்கு 100,000 ரூபாய் தருகிறேன், இனிமேல் நான் உண்மையாக இருப்பேன்.
• படத்தில் உள்ள எண்ணை சரியாக யூகிக்கும் முதல் 300 பேருக்கு RS 100,000 தருகிறேன்
இப்பதிவுகளுக்கு அதிகமானோர் பதிலளித்து வருவதால் factseeker இது குறித்து ஆராய்ந்தது.
இக்காணொளி குறித்து ஆராய்ந்ததில் இது ரஞ்சன் ராமநாயக்க சிறையிலிருந்து வெளிவந்த பிறகு வெளியிடப்பட்ட காணொளி என்றும் அக்காணொளியே மீண்டும் சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்றது என்பதையும் அறிய முடிந்தது. மேலும், இக்காணொளி செப்டெம்பர் மாதம் 21, 2022 அன்று ரஞ்சன் ராமநாயக்கவின் உத்தியோகபூர்வ instagram பக்கத்தில் வெளியிட்ட நேரலை என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.
ஆகவே, ரஞ்சன் ராமநாயக்க பணப்பரிசு வழங்கப்போவதாக கூறும் காணொளி ரஞ்சன் ராமநாயக்கவின் அண்மைய நேரலை காணொளி அல்ல என்பதை Factseeker உறுதிப்படுத்துகிறது.