நுகேகொடை பேரணியில் சாராயபோத்தல்கள் வழங்கப்பட்டதாக பகிரப்படுவது பழைய புகைப்படங்களாகும்

இந்தப் படங்கள் அண்மையில் இடம்பெற்ற நுகேகொடா பேரணியின் போது எடுக்கப்பட்டவை அல்ல என்பதை factseeker உறுதிப்படுத்துகின்றது.
by Anonymous |
நவம்பர் 24, 2025

எதிர்க்கட்சிகளின் சில கட்சிகள் இணைந்து கடந்த 21 ஆம் திகதி நுகேகொடையில் பேரணியொன்றை நடத்தியிருந்தனர். இந்த பேரணியின் போது மதுபானம் பகிரப்பட்டதாக தெரிவித்து மதுபான போத்தல்கள் அடங்கிய பெட்டிகளின் பல புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருவதை FactSeeker அவதானித்தது.

இருப்பினும், இது தொடர்பாக FactSeeker நடத்திய தரவு சரிபார்ப்பில், இந்த புகைப்படங்கள் 21 ஆம் திகதி நுகேகொடை பேரணியின் போது எடுக்கப்பட்டவை அல்ல என்பது கண்டறிய முடிந்தது.
இதே புகைப்படங்கள், கடந்த 2022 ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட அரசியல் புரட்சி வேளையில் பொதுமக்களால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் வீடுகள் மற்றும் சொத்துக்கள் சேதமாக்கப்பட்டன. அந்த சந்தர்ப்பத்தில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்குச் சொந்தமான பிராடோ கார் ஒன்றும் சேதப்படுத்தப்பட்டது. அந்த நேரத்தில் வாகனத்தில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் பல புகைப்படங்களில் இந்த புகைப்படமும் பதிவாகியிருந்தது.
இந்த புகைப்படத்தை கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் 09ஆம் திகதி டெய்லிமிரர் ஆங்கில இணையதளம் மற்றும் லங்காதீப சிங்கள இணையதளம் ஆகியன செய்திகளுடன் பிரசுரித்துள்ளன.

இணைப்புகள்
https://x.com/Dailymirror_SL/status/1523632768608919553
ஆகவே , கடந்த 21 ஆம் திகதி நுகேகொடை பேரணிக்கு கொண்டு வரப்பட்ட மதுபானம் என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படங்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட அரசியல் புரட்சி வேளையில் எடுக்கப்பட்டவை என்பதை factseeker உறுதிப்படுத்துகின்றது.