நடிகர் சைஃப் அலிக்கான் தொடர்பில் பரவும் போலிச் செய்தி

சைஃப் அலி கான் மிகவும் ஆபத்தான நிலைமையில் இருப்பதாக வெளியாகிய புகைப்படங்கள் அனைத்தும் திரிபுப்படுத்தப்பட்ட புகைப்படங்கள் ஆகும்.
by Anonymous |
ஜனவரி 23, 2025

பிரபல போலிவுட் நடிகர் சைஃப் அலிக்கானின் வீட்டில் ஜனவரி 16 ஆம் திகதி தாக்குதல் நடத்தப்பட்டு, அதில் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.
இச் செய்தி இந்தியா மற்றும் சர்வதேச பாலிவுட் ரசிகர்களின் பெரிய கவனத்தை பெற்றதோடு, இது தொடர்பில் பல்வேறு பதிவுகள் சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் “வைத்தியசாலையில் மிகவும் ஆபத்தான நிலைமையில் உள்ள சைஃப் அலி கானை பார்ப்பதற்காக சென்ற சாரா அலி கான் மற்றும் இப்ராஹிம் கான் கண்ணீரில் மூழ்கினர்!” என்ற பதிவுகளுடன், சைஃப் அலி கான் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சையில் இருப்பது போன்ற புகைப்படங்கள் சில சமூசாகவலைதளங்களில் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.
இவை சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்படுவதால் FactSeeker இது குறித்து ஆராய்ந்தது.
சைஃப் அலிக்கான் மிகவும் ஆபத்தான நிலைமையில் இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளனவா என ஆராய்ந்ததில், அவர் ஆபத்தான நிலைமையில் இருப்பதாக அதிகாரப்பூர்வமான செய்திகள் எதுவும் வெளியாகவில்லை என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.
இது குறித்து மேலும் ஆராய்ந்ததில், இந்தியாவின் பிரபல ஊடகமனா NDTV இனால் இது தொடர்பில் தரவு சரிப்பார்த்து (Fact Check) வெளியிடப்பட்ட கட்டுரை ஒன்றை அவதானிக்க முடிந்தது.
https://www.ndtv.com/video/fact-check-old-edited-images-falsely-claim-to-show-saif-ali-khan-after-the-attack-891940
அக் கட்டுரையில் சைஃப் அலி கான் மிகவும் ஆபத்தான நிலைமையில் இருப்பதாக வெளியாகிய புகைப்படங்கள் அனைத்தும் திரிபுப்படுத்தப்பட்ட புகைப்படங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளதையும் உறுதிப்படுத்த முடிந்தது.
மேலும், இன்று (22) இந்திய ஊடகமான E-Times உட்பட பல செய்தி தளங்களில் சைஃப் அலி கான் உடல்நலம் மேம்பட்டு வைத்தியசாலியிலிருந்து வெளியேறியுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளமையையும் அவதனிக்க முடிந்தது.
ஆகவே, பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலிக்கான் வைத்தியசாலையில் மிகவும் ஆபத்தான நிலைமையில் இருப்பதாக சமூகவலைதளங்களில் பகிரப்படும் செய்திகள் போலியானவை என்பதையும் இவ்வாறு பகிரப்படும் புகைப்படங்கள் திரிபுப்படுத்தப்பட்ட புகைப்படங்கள் என்பதையும் FactSeeker உறுதிப்படுத்துகிறது.