தேசிய மக்கள் சக்தியினர் உலர் உணவுகளை மீண்டும் விநியோகித்தனரா?
மக்கள் விடுதலை முன்னணியின் 'ரெட் ஸ்டார்' திட்டத்தின் மூலம் 2020 இல் உலர் உணவுகளை வழங்கியபோது எடுக்கப்பட்ட புகைப்படமே இதுவாகும்.
by Anonymous |
மார்ச் 13, 2024
தேசிய மக்கள் சக்தியினரால் அரிசி மற்றும் உலர் உணவுகள் விநியோகிக்கப்படுவதாக தெரிவித்து பல்வேறு புகைப்படங்களும் பதிவுகளும் சமீப நாட்களாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
இதன் உண்மைத்தன்மை குறித்து ஆராயுமாறு factseekerக்கு கிடைக்கப்பெற்ற கோரிக்கைக்கு அமைய இது குறித்து factseeker ஆராய்ந்து பார்த்தது.
மக்கள் விடுதலை முன்னணியின் ‘ரெட் ஸ்டார்’ திட்டத்தின் மூலம் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்குவதற்காக 2020 இல் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படமே தற்போது பகிரப்பட்டு வருகின்றமையை factseekerஇனால் கண்டறிய முடிந்தது. அத்துடன், இந்த புகைப்படம் நிகவெரட்டிய ரஸ்நாயக்கபுரவில் இடம்பெற்ற நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படமாகும்.
இது தொடர்பாக, கடந்த 2020 ஆம் ஆண்டில் மக்கள் விடுதலை முன்னணியின் உத்தியோகபூர்வ சமூக வலைதள பக்கங்களிலும் பதிவிடப்பட்டுள்ளன.
மக்கள் விடுதலை முன்னணி அல்லது தேசிய மக்கள் சக்தியினர் இந்த ஆண்டு (2024) மகளிர் தினத்தில், அரிசி மற்றும் உலர் உணவுகளை எங்காவது வழங்கியுள்ளனரா என தேசிய மக்கள் சக்தியின் ஊடகப்பிரிவிடம் வினவிய போது, அத்தகைய பொருட்கள் விநியோகிக்கப்படவில்லை என்று அவர்கள் உறுதிப்படுத்தினர்.
முடிவு
ஆகவே, அண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என பகிரப்படும் இந்த புகைப்படங்கள் கடந்த 2020 இல் எடுக்கப்பட்டவை என்பதை factseeker உறுதிப்படுத்துகின்றது.