திலித்துடனான உரையாடலுக்கு அனுரா மறுப்பு தெரிவிக்கவில்லை

அனுரகுமார திஸாநாயக்க, திலித் ஜயவீரவுடன் பேச மறுத்ததாக வெளியான செய்தி பொய்யானது
by Anonymous |
ஜனவரி 10, 2024
மௌபிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவை தன்னுடன் நேரடி தொலைக்காட்சி விவாதத்திற்கு வருமாறு விடுத்த கோரிக்கையை அனுரகுமார திஸாநாயக்க நிராகரித்ததாக இணையத்தளங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது தொடர்பில் ‘சதிய’ இணையத்தளத்தில் வெளியான செய்தியின் தலைப்புச் செய்தியானது, “திலித்துடன் உரையாடுவதற்கு அநுர மறுப்பு” என பிரசுரிக்கப்பட்டுள்ளதுடன், திலித் ஜயவீர விடுத்த சவாலை அனுரகுமார திஸாநாயக்க நிராகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, ‘லங்கா சீ நியூஸ்’ இணையத்தளமும் இந்த விடயம் தொடர்பில் செய்தி வெளியிட்டிருந்தது. இந்த சவாலை அனுரகுமார திஸாநாயக்க நிராகரித்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த 8ஆம் திகதி “சியத” தொலைக்காட்சி அலைவரிசையில் ஒளிபரப்பான “திருப்புமுனை” நேரடி அரசியல் உரையாடலின் போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அனுரகுமார திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் ஊடகப் பிரிவினரிடம் இது தொடர்பில் factseeker வினவியபோது, அந்த உரையாடலில் பங்குபற்ற வேண்டுமாயின் மாநகர சபை அல்லது உள்ளூராட்சி சபையில் உறுப்பினர் பதவியை கொண்டு வாருங்கள் என அனுரகுமார திஸாநாயக்க கூறியதாக தெரிவித்தனர்.
அதன்படி, அனுரகுமார திஸாநாயக்க, திலித் ஜயவீரவுடன் பேச மறுத்ததாக வெளியான செய்தி பொய்யானது என FactSeeker உறுதிப்படுத்துகிறது.