சென்னை கடற்கரையில் கடலலைகள் நீல நிறமாக உருவாகியதாக பகிரப்படும் ஒருசில புகைப்படங்கள் தவறானவை

சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்ட புகைப்படங்கள் மாலைத்தீவில் நீல நிற Bioluminescent அலைகள் தோன்றிய போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்
by Anonymous |
நவம்பர் 1, 2024

சென்னை கடற்கரையில், கடலலைகள் நீல நிறமாக ஒளிர்தது என்ற பதிவுகளுடன் புகைப்படகங்கள் சில சமூக வலைதளங்களில் பகிரப்படுவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.
அப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுவதால் FactSeeker இது குறித்து ஆராய்ந்தது.
அப் புகைப்படங்களை Google Lens மூலம் ஆராய்ந்ததில் அவை மாலைத்தீவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.
அப் புகைப்படங்களானது மாலைத்தீவின் soneva jani கடற்கரையிலும் Huraa Island கடற்கரையிலும் ‘Bioluminescent’ அலை தோன்றிய பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்களாகும். மேலும், அதில் ஒரு புகைப்படம் ‘Petr Horalek’ என்பவரால் எடுக்கப்பட்ட புகைப்படம் என்பதை அறிய முடிந்தது.
https://www.facebook.com/photo.php?fbid=929556015442244&set=pb.100051635619362.-2207520000&type=3
மேலும், சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது போல் சென்னை கடற்கரையில் நீல நிற கடலலை தோன்றியதா என ஆராய்ததில் கடந்த ஒக்டோபர் 19 ஆம் திகதி சென்னை கிழக்கு கடற்கரையோரத்தில் நீல நிற ‘Bioluminescent’ அலை தோன்றியதாக செய்திகள் வெளியாகியுள்ளமையை அறிய முடிந்தது. அதில் சென்னை கடற்கரையில் Bioluminescent அலை தோன்றிய போது எடுக்கப்பட்ட உண்மையான புகைப்படங்களையும் காணக்கூடியதாக இருந்தது.
இது குறித்த செய்திகள்:
* https://indianexpress.com/article/trending/trending-in-india/chennai-beach-lights-up-with-bioluminescent-waves-at-night-video-goes-viral-9630807/lite/
* https://www.polimernews.com/dnews/220455?utm=thiral
ஆகவே, சென்னை கடற்கரையில், கடலலைகள் நீல நிறமாக ஒளிர்தது என்ற பதிவுகளுடன் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்ட புகைப்படங்கள் மாலைத்தீவில் நீல நிற Bioluminescent அலைகள் தோன்றிய போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என்றும் அப் புகைப்படங்கள் சென்னை கடற்கரையின் புகைப்படங்கள் அல்ல என்பதையும் factseeker உறுதிப்படுத்துகிறது.