Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #Misleading

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் இருந்து மகா கும்பமேளாவின் புகைப்படங்களை எடுத்ததாக பகிரப்படும் தவறான தகவல்

Misleading
Misleading

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தினால் (ISRO) வெளியிடப்பட்ட புகைப்படமே இவ்வாறு பகிரப்படுகின்றது.

by Anonymous |

மார்ச் 19, 2025

“சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் இருந்து மகா கும்பமேளாவின் புகைப்படங்களை எடுத்தார்” என புகைப்படத்தினுடனான பதிவொன்று சமூக வலைதளங்களில் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.

நாசாவின் விண்வளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி மையத்தில் 9 மாதங்களாக தங்கியிருந்த நிலையில் இன்று (19) ‘ஸ்பேஸ்எக்ஸ்’ நிறுவனத்தின் ‘டிராகன்’ விண்கலத்தின் மூலமாக பூமியை வந்தடைந்தார். இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக இந்தியாவில் இடம்பெற்ற மஹா கும்பமேளா நிகழ்வின் புகைப்படத்தை சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் இருந்து எடுத்தார் என புகைப்படத்தினுடனான பதிவுகள் சில பகிரப்பட்டு வருகின்றன.

அவை சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுவதால் FactSeeker இது குறித்து ஆராய்ந்தது.

இது தொடர்பான செய்திகள் இந்தியா மற்றும் சர்வதேச செய்தி தளங்களில் வெளியாகியுள்ளனவா என ஆராய்ந்ததில் இது குறித்த எந்தவொரு உத்தியோகபூர்வ செய்திகளும் வெளியாகவில்லை என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.

மேலும், சுனிதா வில்லியம்ஸினால் விண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் என இப் பதிவில் பயப்படுத்தப்பட்டுள்ள அப் புகைப்படத்தை Goolge Lens மூலம் ஆராய்ந்ததில், இது இஸ்ரோ (ISRO) என அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட புகைப்படம் என்பதை அறிய முடிந்தது.

  • https://x.com/ISROSight/status/1882030314123653481/photo/3

இது குறித்த உத்தியோகப்பூர்வ செய்திகளும் வெளியாகியுள்ளன.

  • https://timesofindia.indiatimes.com/etimes/trending/isro-shares-breathtaking-images-of-maha-kumbh-2025-from-space/articleshow/117555721.cms
  • https://news.abplive.com/cities/isro-shares-before-and-after-satellite-images-of-massive-maha-kumbh-mela-as-seen-from-space-pics-1745923

ஆகவே, “சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் இருந்து மகா கும்பமேளாவின் புகைப்படங்களை எடுத்தார்” என சமூகவலைதளங்களில் பகிரப்படுகின்ற பதிவுகள் உண்மைக்கு புறம்பானவை என்பதையும் அப் புகைப்படம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட புகைப்படம் என்பதையும் FactSeeker உறுதிப்படுத்துகிறது.

Latest updates

#FAKE

அமெரிக்க தூதரகம் தொடர்பான ‘பொக்ஸ் நியூஸ்’ இன் லோகோவுடன் பகிரப்படும் போலியான செய்தி

மார்ச் 24, 2026

#Misleading

ஜனாதிபதியின் ஊடக சந்திப்பின் போது தேசியக் கொடியின் நிறம் மாற்றப்பட்டுள்ளதா?

மார்ச் 20, 2026

#FAKE

ஈரானிய கடற்படைக் கப்பல் தாக்கப்பட்டமை குறித்து இந்திய ராணுவத் தளபதி கூறியதாக பரவும் போலி வீடியோ

மார்ச் 11, 2026

#FAKE

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, மூன்றாம் சார்லஸ் மன்னரைச் சந்தித்ததாகப் பரவும் போலி புகைப்படம்

பிப்ரவரி 28, 2026

Related Content

ஜனாதிபதியின் ஊடக சந்திப்பின் போது தேசியக் கொடியின் நிறம் மாற்றப்பட்டுள்ளதா?

மார்ச் 20, 2026

உயிரிழந்த அயூப்ராஜ் அருள் பயாஸின் வயது 17 : பொலிசாரின் அறிக்கையிலேயே தவறு ஏற்பட்டுள்ளது

பிப்ரவரி 16, 2026

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட சிறுவனின் மனவேதனை என பகிரப்படும் காணொளி ஒரு பாடசாலை நாடகமாகும்

டிசம்பர் 18, 2025

நிபந்தனையின் பெயரிலேயே  அஜித் நிவார்ட் கப்ரால் விடுதலை செய்யப்பட்டார்.

டிசம்பர் 12, 2025

சிவனொளிபாதமலையில் மண்சரிவு அனர்த்தம் இடம்பெற்றமை உண்மையே

டிசம்பர் 2, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2026 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection