சிவனொளிபாதமலையில் மண்சரிவு அனர்த்தம் இடம்பெற்றமை உண்மையே

மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் சமூக வலைதளங்களில் இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது என்பதை factseeker வெளிப்படுத்துகின்றது
by Anonymous |
டிசம்பர் 2, 2025
தற்போதைய பேரிடர் சூழ்நிலை காரணமாக, நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள அனர்த்தங்கள் தொடர்பில் சமூக வலைதளங்களில் ஏராளமான காணொளிகளும், புகைப்படங்களும், தகவல்களும் பகிரப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில், சிவனொளிபாதமலை அமைந்துள்ள சமனல கந்த பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருவதையும், எனினும் அவ்வாறான மண்சரிவு எதுவும் ஏற்படவில்லை என்ற செய்திகள் பிரதான பத்திரிகையான ‘தினமின’ பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டிருப்பதையும், அதேபோல் சமூக வலைதள பக்கங்களிலும் பகிரப்படுவதையும் FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.

https://www.facebook.com/share/r/1Cd5runBQ1/
https://www.facebook.com/share/r/1ZgvpofCMR/
https://www.facebook.com/share/p/1QqhKNne68/
தற்போதைய பேரிடர் காலத்தில் பல்வேறு போலியான செய்திகள் சமூக வலைதளங்களில் பகிரப்படுவதை அடுத்து இந்த செய்தியின் உண்மைத்தன்மை குறித்து factseeker ஆராயத் தீர்மானித்தது.
அதன்படி, 12/01/2025 அன்று வெளியான ‘தினமின’ பத்திரிகை வெளியிட்ட செய்தியில் , சிவனொளிபாதமலை தளத்தின் அருகே மண்சரிவு எதுவும் ஏற்படவில்லை எனவும், சிவனொளிபாதமலை தள நிர்வாகம் சிவனொளிபாதமலை தளத்தின் அருகிலோ அல்லது இரத்தினபுரி-ஹட்டன் பாதையிலோ மண்சரிவு அனர்த்தங்கள் எதுவும் இடம்பெறவில்லை என உறுதிப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த 11/30/2025 அன்று, இதுபோன்ற போலிச் செய்திகள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டதாகவும், சிவனொளிபாதமலை தளத் தலைவர் வணக்கத்திற்குரிய பெங்கமுவே தம்மதின்ன தேரர் அந்தச் செய்தி தவறானது எனக் கூறியதாகவும் குறித்த பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.
சிவனொளிபாதமலை தளத்தின் உட மலுவே பஸ்நாயக்க நிலமே சுனில் சாந்த வீரசேகரவும், சம்பந்தப்பட்ட பகுதியில் மண்சரிவு அனர்த்தங்கள் எதுவும் இடம்பெறவில்லை, ஆனால் சில சந்தர்ப்பங்களில் சிறிய நிலச்சரிவுகள் மற்றும் பாறை சரிவுகள் ஏற்படுகின்றன என்றும் தினமின பத்திரிகைக்கு தனது கருத்தைத் தெரிவித்திருந்தார்.
மேலும், தூய்மை இலங்கை திட்டத்துடன் இணைந்து சிவனொளிபாதமலை தளத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்புரவு நடவடிக்கைகளின் போது சேகரிக்கப்பட்ட குப்பைகள் மழையால் அடித்துச் செல்லப்பட்டதால் இந்த நிலைமை ஏற்பட்டதாகவும் தம்மதின்ன தேரர் தெரிவித்திருந்தார்.
எனினும், 12/01/2025 அன்று தெரண தொலைக்காட்சியில் இது குறித்து வெளியிடப்பட்ட செய்தித்தொகுப்பில் குறித்த அனர்த்தம் தொடர்பில் அறிக்கையிடப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.
https://www.youtube.com/live/uM14nVWCd0w?si=PS_HfQ4N2fDeeH_f&t=644

அதிகளவில் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் பகுதியாகவும், இலங்கை வாழ் மக்கள் தொடர்ச்சியாக செல்லும் ஒரு பகுதியாகவும் இருக்கும் சிவனொளிபாதமலையில் மிகப்பெரிய மண்சரிவு அனர்த்தம் ஒன்று இடம்பெற்றுள்ள நிலையில், மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது என்பதை factseeker வெளிப்படுத்துவதுடன், தற்போதைய அனர்த்த நிலைமைகளில் , சிவனொளிபாதமலை பகுதிகளுக்கு பொதுமக்கள் விஜயம் செய்வதை தவிர்ப்பதுடன் தத்தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதத்தில் அவதானமாக செயற்பட வேண்டும் என்பதை factseeker வலியுறுத்துகின்றது.
