Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #Misleading

சமூக வலைதளங்களில் பகிரப்படும் புத்தரின் புனித தந்த தாது உண்மையல்ல

Misleading
Misleading

ஸ்ரீ தலதா மாளிகையில் உள்ள புனித தந்த தாது என்ற தலைப்பில் சமூகவலைதளங்களில் பகிரப்படுகின்ற காணொளிகள் தலதா மாளிகையில் எடுக்கப்பட்ட காணொளிகள் அல்ல என கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் ஊடகப்பிரிவின் தலைமை அதிகாரி சுபாஷ லியனகே தெரிவித்தார்.

by Anonymous |

ஏப்ரல் 25, 2025

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் உள்ள புத்த பகவானின் புனித தந்த தாதுவை நேரடியாக தரிசிக்கும் ஸ்ரீ தலதா வழிபாடு நிகழ்வு நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் ஸ்ரீ தலதா மாளிகையில் உள்ள புனித தந்த தாது என பல காணொளிகள் சமூகவலைதளங்களில் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.

ஸ்ரீ தலதா மாளிகையில் புகைப்படம் மற்றும் காணொளிகள் பதிவுசெய்யப்படுவது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான காணொளிகள் பகிரப்படுவதால் FactSeeker இது குறித்து ஆராய்ந்தது.

“Replica tooth relics of Shakyamuni Buddha from Kandy ” என்ற தலைப்பில் Facebook தளத்தில் பதிவிடப்பட்டிருந்த காணொளியை ஆராய்ந்ததில், இத்தகைய நகல் தந்த தாதூக்கள் பல உலக நாடுகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன என்பதை அறியமுடிந்தது. மேலும், இக் காணொளியை Google Lens மூலம் ஆராய்ந்ததில், இது கடந்தாண்டு ஏப்ரல் 30 ஆம் திகதி ‘Waki Relic Museum’ என்ற முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்ட காணொளி என்பதையும் இக் காணொளி மலேசியாவின் கோலாலம்பூரில் அமைந்துள்ள Waki Relic அருங்காட்சியகத்தில் எடுக்கப்பட்ட காணொளி என்பதையும் உறுதிப்படுத்த முடிந்தது.

இதன் மூலம், இக் காணொளியில் இருப்பது ஸ்ரீ தலதா மாளிகையில் உள்ள புனித தந்த தாது அல்ல என்பதை FactSeeker உறுதிப்படுத்துகிறது.

இதேபோல் தங்க நிற கம்பிகளால் சூழப்பட்ட தாமரை மலர் வடிவில் வடிவமைக்கப்பட்ட பாத்திரத்தில் வைக்கப்பட்டிருந்த தந்த தாது போன்ற பொருளொன்றின் காணொளியும் “ஸ்ரீ தலதா மாளிகையில் உள்ள புனித தந்த தாது” என்ற தலைப்பில் பகிரப்படுவதை அவதானிக்க முடிந்தது. அக் காணொளியை ஆராய்ந்ததில், இது புனித தந்த தாதுவின் நகல் உருவாக்கம் (replica relic) என்பதை அறிய முடிந்தது.

மேலும், இக் காணொளிகள் குறித்து கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் ஊடகப்பிரிவின் தலைமை அதிகாரி சுபாஷ லியனகேவிடம் FactSeeker வினவிய போது, இவை ஸ்ரீ தலதா மாளிகையில் எடுக்கப்பட்ட காணொளிகள் அல்ல என்றும் புனித தந்த தாது சிறப்பு வழிப்பாடின் போது புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் எடுக்க அனுமதி வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

ஆகவே, ஸ்ரீ தலதா மாளிகையில் உள்ள புனித தந்த தாது என்ற தலைப்பில் சமூகவலைதளங்களில் பகிரப்படுகின்ற காணொளிகள் கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் புனித தந்த தாது சிறப்பு வழிப்பாடின் போது எடுக்கப்பட்ட காணொளிகள் அல்ல என்பதை FactSeeker உறுதிப்படுத்திக்கிறது.

Latest updates

#FAKE

அமெரிக்க தூதரகம் தொடர்பான ‘பொக்ஸ் நியூஸ்’ இன் லோகோவுடன் பகிரப்படும் போலியான செய்தி

மார்ச் 24, 2026

#Misleading

ஜனாதிபதியின் ஊடக சந்திப்பின் போது தேசியக் கொடியின் நிறம் மாற்றப்பட்டுள்ளதா?

மார்ச் 20, 2026

#FAKE

ஈரானிய கடற்படைக் கப்பல் தாக்கப்பட்டமை குறித்து இந்திய ராணுவத் தளபதி கூறியதாக பரவும் போலி வீடியோ

மார்ச் 11, 2026

#FAKE

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, மூன்றாம் சார்லஸ் மன்னரைச் சந்தித்ததாகப் பரவும் போலி புகைப்படம்

பிப்ரவரி 28, 2026

Related Content

ஜனாதிபதியின் ஊடக சந்திப்பின் போது தேசியக் கொடியின் நிறம் மாற்றப்பட்டுள்ளதா?

மார்ச் 20, 2026

உயிரிழந்த அயூப்ராஜ் அருள் பயாஸின் வயது 17 : பொலிசாரின் அறிக்கையிலேயே தவறு ஏற்பட்டுள்ளது

பிப்ரவரி 16, 2026

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட சிறுவனின் மனவேதனை என பகிரப்படும் காணொளி ஒரு பாடசாலை நாடகமாகும்

டிசம்பர் 18, 2025

நிபந்தனையின் பெயரிலேயே  அஜித் நிவார்ட் கப்ரால் விடுதலை செய்யப்பட்டார்.

டிசம்பர் 12, 2025

சிவனொளிபாதமலையில் மண்சரிவு அனர்த்தம் இடம்பெற்றமை உண்மையே

டிசம்பர் 2, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2026 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection