Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #FAKE

சமூகவலைதளங்களில் பகிரப்படும் “கனேமுல்ல சஞ்சீவ கொலை” சந்தேக நபரின் AI காணொளி

False
False

அக்காணொளியை 'deepware' இணையத்தளத்தின் மூலம் ஆராய்ந்ததில் இது 'AI காணொளி' என்பது தெரியவந்தது.

by Anonymous |

பிப்ரவரி 20, 2025

கனேமுல்ல சஞ்சீவ கொலையின் முக்கிய சந்தேக நபர் நேற்று (19) பிற்பகல் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் (STF) கைது செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர் விசேட அதிரடிப் படையினருடன் சிரித்து பேசுவது போன்ற காணொளி ஒன்று சமூகவலைதளங்களில் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.

https://www.facebook.com/share/1ACmXTSXCJ/?mibextid=WC7FNe
https://www.facebook.com/share/v/184Fu7eSgy/?mibextid=wwXIfr

சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்ட அக் காணொளியை உன்னித்து அவதானித்ததில் சில தெளிவற்ற அம்சங்களை அவதானிக்க முடிந்தது. உதாரணமாக இக் காணொளியில் உள்ள வாகனத்தின் கதவு திறந்திருக்கின்ற நேரத்தில் வாகனம் நகர்வது போன்ற காட்சிகளும் இக் காணொளியில் உள்ள நபர்களின் கைகள் மற்றும் முகங்கள் தெளிவற்றதாக இருப்பதையும் அவதானிக்க முடிந்தது. இதனால் இக் காணொளி செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்டவை என்பதை யூகிக்க முடிந்தது.

மேலும், இக்காணொளி செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்டவையா என deepware இணையத்தளத்தின் மூலம் ஆராய்ந்ததில் இது ‘AI காணொளி‘ என்பது தெரியவந்தது. ஆகவே இக் காணொளி செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட காணொளி என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.

ஊடகங்களால் நேற்று வெளியிடப்பட்ட புகைப்படங்களை பயன்படுத்தியே இந்த AI காணொளி தயாரிக்கப்பட்டுள்ளது. ஊடகங்களில் வெளியிடப்பட்ட புகைப்படங்கள் கீழே.

ஆகவே, சமூகவலைதளங்களில் பகிரப்படுகின்ற “கனேமுல்ல சஞ்சீவ கொலையின் முக்கிய சந்தேக நபர் பொலிஸ் அதிரடி படையினருடன் சிரித்து பேசுவது போன்ற காணொளி” செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட காணொளி என்பதை FactSeeker உறுதிப்படுத்துகின்றது.

සිංහල

|

English

|

Latest updates

#Misleading

அகமதாபாத் விமான விபத்து என தவறாக பகிரப்படும் பழைய காணொளிகள்

ஜூன் 13, 2025

#Misleading

கொத்மலை -பூண்டுலோயா வீதியில் ஏற்பட்ட மண்சரிவு என பகிரப்படும் தவறான புகைப்படம்

ஜூன் 11, 2025

#FAKE

சந்திரிக்கா நடனமாடுவதாக பகிரப்படும் AI காணொளி

ஜூன் 9, 2025

#FAKE

இலங்கை குறித்து இப்ராஹிம் ட்ரொரே கருத்து தெரிவித்தாக பகிரப்படும் AI காணொளி

ஜூன் 9, 2025

Related Content

சந்திரிக்கா நடனமாடுவதாக பகிரப்படும் AI காணொளி

ஜூன் 9, 2025

இலங்கை குறித்து இப்ராஹிம் ட்ரொரே கருத்து தெரிவித்தாக பகிரப்படும் AI காணொளி

ஜூன் 9, 2025

259வது பிறந்த நாளைக் கொண்டாடும் முதியவர் என பகிரப்படும் AI புகைப்படம்

மே 23, 2025

ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தனவின் பெயரில் பகிரப்படும் போலிக்கடிதம்

மே 22, 2025

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கின் பெயரில் இயங்கும் போலி facebook பக்கம்

மே 20, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2025 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection