கலிபோர்னியா மாநிலத்தின் தீப்பரவல் என பகிரப்படும் AI காணொளி

Is it AI தளத்தின் மூலம் ஆராய்ந்ததில் இக் காணொளி செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தி உருவாக்கப்பட்ட காணொளி என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.
by Anonymous |
ஜனவரி 16, 2025

தற்போது அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் பரவியுள்ள காட்டுத்தீ உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் பல சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இதற்கிடையில் கலிபோர்னியா மாநிலத்தில் ஏற்பட்ட தீப்பற்றல் எனக் கூறும் காணொளி ஒன்று X மற்றும் Facebook ஆகிய சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.
https://x.com/jenniifer_off/status/1877679817413525734?s=46&t=7p4CLXtAH44oQQ-dqagsCg

இக் காணொளியில் உள்ள சில அம்சங்கள் முரணாக இருப்பதால் FactSeeker இது குறித்து ஆராய்ந்து.
இக் காணொளியை Google Reverse Image மூலம் ஆராய்ந்ததில் அதே பின்னணியுடன் கூடிய சரியான காணொளி இணையத்தில் பதிவிடப்பட்டிருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.
மேலும், இக் காணொளியில் உள்ள சில அம்சங்கள் இயல்புக்கு முரணாகவும் பின்னணி ஒலி செயற்க்கை தன்மையாக இருப்பதையும் அவதானிக்க முடிந்தது. இதனால் இது செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தி உருவாக்கப்பட்டதா என Is it AI தளத்தின் மூலம் ஆராய்ந்ததில் இக் காணொளி செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தி உருவாக்கப்பட்ட காணொளி என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.

ஆகவே, சமூகவலைதளங்களில் பகிரப்படுகின்ற கலிபோர்னியா மாநிலத்தில் ஏற்பட்ட தீப்பற்றல் எனக் கூறும் காணொளி, செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தி உருவாக்கப்பட்ட காணொளி என்பதை FactSeeker உறுதிப்படுத்துகிறது.
 
                                                                                                                                     
                                                                                                                                     
                                                                                                                                     
                                                                                                                                     
                                                                                                                             
                                                                                                                             
                                                                                                                             
                                                                                                                            