ஏமன் படைகள் அமெரிக்க விமானம் தாங்கி கப்பலை தாக்கியதாக தவறான தகவல் பரவுகின்றது
ஏமன் நாட்டுப் படைகள் செங்கடலில் அமெரிக்க விமானம் தாங்கி கப்பலை ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்கியுள்ளதாக பகிரப்படும் காணொளி தவறானது.
by Anonymous |
ஜூன் 4, 2024
தங்கள் நாட்டின் மீது நடத்தப்பட்ட குண்டுவீச்சுக்கு பதிலளிக்கும் வகையில், ஏமன் நாட்டுப் படைகள் செங்கடலில் அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பலை ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்கியுள்ளதாக காணொளியொன்று X மற்றும் youtube தளங்களில் பகிரப்படுவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.
சமூக வலைதள பாவனையாளர்கள் பலர் இந்த காணொளியை அதிகளவில் பகிர்ந்துகொண்டுள்ள நிலையில் அது குறித்து factseeker ஆராய்ந்து பார்த்ததில், இந்தக் காணொளியானது தவறாக பகிரப்படும் ஒன்றென்பதை கண்டறிய முடிந்தது.
குறித்த காணொளியை reverse-searching முறைமை மூலம் ஆராய்ந்து பார்த்ததில் இந்த சம்பவம் கடந்த 2018ஆம் ஆண்டில் பதிவாகியிருப்பதை கண்டறிய முடித்தது. அதில், ஜேர்மனியின் வான் பாதுகாப்பு போர்க்கப்பல் ஒன்று ஏவுகணை தாக்குதல் முயற்சியின் போது சேதமடைந்த காணொளியொன்றே இவ்வாறு பதிவாகியுள்ளதென்பதை கண்டறிய முடிந்தது.
முடிவு
ஏமன் நாட்டுப் படைகள் செங்கடலில் அமெரிக்க விமானம் தாங்கி கப்பலை ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்கியுள்ளதாக பகிரப்படும் காணொளி தவறாக பகிரப்படும் ஒன்றென்பதையும், இந்த சம்பவம் கடந்த 2018ஆம் ஆண்டில் பதிவாகியதென்பதையும் factseeker இன் உண்மைச் சரிபார்ப்பிலிருந்து உறுதிப்படுத்த முடிந்தது.