எல்.டி.டி.ஈ தலைவர் பிரபாகரனின் பிறந்த தினத்தை யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கொண்டாடியதாக பகிரப்படும் பழைய புகைப்படங்கள்

இப் புகைப்படங்கள் 2018ஆம் ஆண்டு வேலுப்பிள்ளை பிரபாகரனின் 64வது பிறந்தநாள் கொண்டாட்டங்களின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.
by Anonymous |
டிசம்பர் 2, 2024

மாவீரர் வாரத்தை முன்னிட்டு கடந்த சில நாட்களாக விடுதலை புலிகள் அமைப்பு தொடர்பில் பதிவுகள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படு வருவதுடன், தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 70வது பிறந்த தினத்தை யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கொண்டாடியதாக ஒரு சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.
இது குறித்து சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட புகைப்படங்களில் பெரும்பாலானவை ‘Tamil Guardian’ செய்தி தளத்தின் X தள பக்கத்தில் வெளியாகிய செய்தியின் புகைப்படங்கள் என்பதை அறிய முடிந்தது.
இது தொடர்பான செய்தி Tamil Guardian செய்தி தளத்தில் வெளியாகியுள்ளதா என ஆராய்ந்தபோது, அச் செய்தி Tamil Guardian செய்தி தளத்தில் வெளியிடப்பட்டிருந்தமையும், அதன் பின்னர் Tamil Guardian இணையதளத்திலும் X தள பக்கத்திலும் இருந்து அச் செய்தி நீக்கப்பட்டுள்ளது என்பதையும் உறுதிப்படுத்த முடிந்தது.
மேலும், இப் புகைப்படங்களை Google Lens மூலம் ஆராய்ந்ததில், இப் புகைப்படங்கள் 2018ஆம் ஆண்டு வேலுப்பிள்ளை பிரபாகரனின் 64வது பிறந்தநாள் கொண்டாட்டங்களின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என்பதை உறுதிப்படுத்த முடிந்தது. இது தொடர்பில் பல்வேறு செய்தித்தளங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.
https://www.bbc.com/tamil/sri-lanka-46340668
https://sundaytimes.lk/online/news-online/jaffna-university-students-mark-prabhakarans-birthday/2-1056048
https://www.tamilarul.net/2018/11/jaffna-university.html
https://jaffnazone.com/news/6749
https://www.facebook.com/274286272733315/posts/1089849124510355/
ஆகவே, தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 70வது பிறந்த தினத்தை யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கொண்டாடியதாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட இந்தப் புகைப்படங்கள் 2018 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டவை என்பதை FactSeeker உறுதிப்படுத்துகிறது.