இஸ்ரேல் – ஈரான் போர் சூழலில் பகிரப்படும் தவறான காணொளிகள்

போர் சூழலில் பழைய காணொளிகள் மீண்டும் மீண்டும் பகிரப்படுகின்றன.
by Anonymous |
அக்டோபர் 2, 2024

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டதை அடுத்து சமூக வலைதளங்களில் பல காணொளிகள் மற்றும் செய்திகள் பகிரப்படுவதை factseekerஇனால் அவதானிக்க முடிந்தது.
இவ்வாறு பகிரப்படும் காணொளிகள் மற்றும் அதனுடன் கூடிய செய்திகளில் பல போலியான செய்திகள் என்பதையும் factseekerஇனால் அவதானிக்க முடிந்தது.
‘போர் சூழலில் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு தப்பித்த தருணம்’ என ஒரு காணொளி பகிரப்படுகின்றது. எனினும் இந்தக் காணொளியானது
கடந்த 2021 ஆண்டு டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி நெதன்யாகு நெஸ்செட்டில் வாக்களிக்க விரைந்தபோது எடுக்கப்பட்ட காணொளியாகும். அப்போது அவர் எதிர்க்கட்சி தலைவராக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அது குறித்த link இங்கே இணைக்கப்பட்டுள்ளது : https://www.hidabroot.org/article/1162572
அதேபோல், இஸ்ரேல் தலைநகரான டெல் அவிவ்வில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக சித்தரிக்கும் காணொளியொன்றும் அதிகளவில் பகிரப்படுவதையும் அவதானிக்க முடிந்தது.
எனினும் இந்த காணொளியானது மொஸ்கோவில் ஆளில்லா விமானம் வெடித்து சிதறியதில் ஏற்பட்ட விபத்து என்பதை கடந்த 2023ஆம் ஆண்டு சர்வதேச ஊடகங்கள் பதிவு செய்துள்ளன.
அது குறித்த link இங்கே இணைக்கப்பட்டுள்ளது : https://www.bbc.com/news/av/world-europe-66353931
இவ்வாறு பல போலியான காணொளிகள் தற்போது எக்ஸ், முகநூல் பக்கங்களில் அதிகளவில் பகிரப்படுகின்றன. ஆனால் இவை அனைத்துமே பழைய காணொளிகள் என்பதுடன் மக்களை தவறாக வழிநடத்தும் விதத்தில் இந்த காணொளிகள் பகிரப்படுகின்ற என்பதை factseeker உறுதிப்படுத்துகின்றது.