Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #Misleading

இஸ்ரேலுக்கு ஆதரவாக இலங்கையில் இடம்பெற்ற பேரணியானது கடந்த 2015 இடம்பெற்றதாகும்.

Misleading
Misleading

இலங்கையில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மட்டக்களப்பில் இஸ்ரேலுக்கு ஆதரவாக நடைபெற்றதாகக் கூறப்படும் பேரணியைக் காணொளியொன்று தற்போது சமூகவலைதளங்களில் தவறான கூற்றுகளுடன் பகிரப்படுகின்றது.

by Anonymous |

ஏப்ரல் 18, 2025

” முஸ்லிம்களை இந்த உலகத்தில் இருந்தே துடைத்தழிக்கின்ற நோக்கத்தை இலக்காகக் கொண்டு தனது நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற இஸ்ரேல் நாட்டுக்கு ஆதரவாக, இலங்கையில் முஸ்லிம்களும் பெரும்பான்மையாக வாழும் மட்டக்களப்பு நகரில் இப்படி ஒரு பாரிய ஊர்வலமா? இந்த ஊர்வலத்துக்கு அனுமதி அளித்தது மட்டுமல்லாமல், போலீஸ் பாதுகாப்பும் வழங்கியதன் மூலம் AKD அரசு, இலங்கையில் வாழ்கின்ற முஸ்லிம் மக்களுக்கு சொல்கின்ற மறைமுகமான செய்தி என்ன? முஸ்லிம் மக்கள் இப்போதாவது விளங்கிக் கொள்வார்களா? விழித்தெழுவார்களா? ” என்ற கருத்துக்களை உள்ளடக்கிய  காணொளியொன்றுடனான பதிவொன்று facebook பக்கத்தில் பகிரப்படுவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.

Link :-  https://web.facebook.com/watch/?mibextid=wwXIfr&v=1253131142673116

இஸ்ரேல் நாட்டுக் கொடியுடன் ஆதரவு பேரணியொன்று இலங்கையில் இடம்பெற்றிருப்பதை தெளிவாக அவதானிக்க முடிந்த போதிலும் அது அண்மையில் (ஜனாதிபதி அநுரகுமார திசாநாயவின் அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்துக்குள்) இடம்பெற்றதாக பிரதான ஊடகங்களிலோ அல்லது இது சார்ந்த செய்திகளை வெளியிடும் உத்தியோகபூர்வ தளங்களிலோ சமூக ஊடகக் கணக்குகளிலோ அவதானிக்க முடியவில்லை.

ஆகவே இது குறித்து உண்மைகளை உறுதிப்படுத்திக்கொள்ள, காணொளியின் ஒரு புகைப்படத்தை google reverse image search மூலமாக ஆராய்ந்து பார்த்ததில், இப்பேரணியானது கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் அப்போதைய ரணில்- மைத்திரி அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற பேரணி என்பதை கண்டறிய முடிந்தது.

Link :- https://www.youtube.com/watch?v=n26JX4PKoSA

முடிவு :-   சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற இந்த பேரணியின் காணொளியொன்றையே தற்போது, ஜனாதிபதி அநுரகுமார அரசாங்கத்தினால் பாதுகாப்பு வழங்கி நடத்தப்பட்ட பேரணி என முஸ்லிம் சமூகத்தை தவறாக வழிநடத்தும் விதமாக சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்றது என்பதை factseeker உறுதிப்படுத்துகின்றது.

Latest updates

#FAKE

அமெரிக்க தூதரகம் தொடர்பான ‘பொக்ஸ் நியூஸ்’ இன் லோகோவுடன் பகிரப்படும் போலியான செய்தி

மார்ச் 24, 2026

#Misleading

ஜனாதிபதியின் ஊடக சந்திப்பின் போது தேசியக் கொடியின் நிறம் மாற்றப்பட்டுள்ளதா?

மார்ச் 20, 2026

#FAKE

ஈரானிய கடற்படைக் கப்பல் தாக்கப்பட்டமை குறித்து இந்திய ராணுவத் தளபதி கூறியதாக பரவும் போலி வீடியோ

மார்ச் 11, 2026

#FAKE

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, மூன்றாம் சார்லஸ் மன்னரைச் சந்தித்ததாகப் பரவும் போலி புகைப்படம்

பிப்ரவரி 28, 2026

Related Content

ஜனாதிபதியின் ஊடக சந்திப்பின் போது தேசியக் கொடியின் நிறம் மாற்றப்பட்டுள்ளதா?

மார்ச் 20, 2026

உயிரிழந்த அயூப்ராஜ் அருள் பயாஸின் வயது 17 : பொலிசாரின் அறிக்கையிலேயே தவறு ஏற்பட்டுள்ளது

பிப்ரவரி 16, 2026

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட சிறுவனின் மனவேதனை என பகிரப்படும் காணொளி ஒரு பாடசாலை நாடகமாகும்

டிசம்பர் 18, 2025

நிபந்தனையின் பெயரிலேயே  அஜித் நிவார்ட் கப்ரால் விடுதலை செய்யப்பட்டார்.

டிசம்பர் 12, 2025

சிவனொளிபாதமலையில் மண்சரிவு அனர்த்தம் இடம்பெற்றமை உண்மையே

டிசம்பர் 2, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2026 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection