இலங்கையில் வைத்தியசாலையொன்றில் ஆபாச காணொளி காண்பிக்கப்பட்டதாக போலிச்செய்தி
இலங்கையில் வைத்தியசாலையொன்றில் ஆபாச காணொளி காண்பிக்கப்பட்டதாகக் கூறி எக்ஸ் தளத்தில் காணொளியொன்று பகிரப்படுகின்ற போதிலும் அது இலங்கையில் இடம்பெற்ற சம்பவம் அல்ல.
by Anonymous |
மார்ச் 30, 2024
இலங்கையில் வைத்தியசாலையொன்றில் ஆபாச காணொளி காண்பிக்கப்பட்டதாகக் கூறி எக்ஸ் தளத்தில் காணொளியொன்று பகிரப்படுவதை factseekerஇனால் அவதானிக்க முடிந்தது.
ஆனால் இவ்வாறு பகிரப்படும் காணொளி இலங்கையில் இடம்பெற்ற சம்பவம் அல்ல, இது நீண்ட நாட்களுக்கு முன்னர் ஆபிரிக்க நாடொன்றில் பதிவாகியருந்த சம்பவமாகும்.
கடந்த 2021ஆம் ஆண்டு ஜூன் 6 ஆம் திகதி, jeison cardona என்ற நபர் தனது முகநூல் பக்கத்தில் இந்த காணொளியை பதிவேற்றியுள்ளார். அதேபோல், இது அன்டிகுவா நாட்டில் பதிவாகிய சம்பவம் என்பதையும் பலர் தெரிவித்துள்ளனர்.
இந்த காணொளியை, இலங்கையில் இடம்பெற்ற சம்பவம் எனjக்கூறி நபர் ஒருவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவேற்றியுள்ளதுடன், பின்னர் தான் பிழையான காணொளி ஒன்றை பதிவேற்றியமைக்காக மன்னிப்பும் கோரியுள்ளார்.
ஆனால், இந்த காணொளியை தவறாக பதிவேற்றிய குறித்த நபர் இன்னமும் அந்தக் காணொளியை தனது எக்ஸ் தளத்தில் இருந்து நீக்காதுள்ள நிலையில், அவரை பின்தொடரும் பலரும் இந்தக் காணொளியை மீண்டும் மீண்டும் பகிர்ந்து வருவதுடன், இலங்கையில் இடம்பெற்ற சம்பவம் என்றே பதிவு செய்தும் வருகின்றனர்.
ஆகவே இவ்வாறு ஒரு காணொளி இலங்கையில் வைத்தியசாலை ஒன்றில் பதிவாகியதாக பகிரும் காணொளிகள் அனைத்துமே தவறானவை என்பதை factseeker உறுதிப்படுத்துகின்றது.