இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தமென பகிரப்படும் தவறான காணொளிகள்
இலங்கையில் ஏற்பட்டுள்ள அனர்த்தங்கள் என சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட காணொளிகள் வெளிநாடுகளில் ஏற்பட்ட அனர்த்தங்களின் போது எடுக்கப்பட்ட காணொளிகள் ஆகும்.
by Anonymous |
டிசம்பர் 3, 2024
இலங்கையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக பல பகுதிகள் அனர்தத்திற்குள்ளாகியுள்ளன. இந்நிலையில் இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்றன.அவ்வாறு பகிரப்படுகின்ற சில பதிவுகளில் வெளிநாட்டில் உள்ள காணொளிகள் இலங்கையில் அனர்த்தத்தின் போது எடுக்கப்பத்காக பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.
https://www.facebook.com/share/v/ydCPsaVUtetHJfYK/
https://vt.tiktok.com/ZSjb89AUM/
https://vt.tiktok.com/ZSjbLNthP/
அவை மக்களை தவறாக வழிநடத்துவதால் FactSeeker இது குறித்து ஆராய்ந்தது.
இக் காணொளிகளை Google Reverce Image மூலம் ஆராய்ந்ததில், இக் காணொளிகள் இத்தாலி, பாகிஸ்தான் போன்ற பிற நாடுகளுடன் தொடர்புடையவை என்பதைக் குறிக்கும் வகையிலான சமூக வலைதள பதிவுகளை அவதானிக்க முடிந்தது.
இவற்றை மேலும் ஆராய்ந்த போது, தங்க முலாம் பூசப்பட்ட பெரிய புத்தர் சிலை வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக பகிரப்படும் காணொளியானது நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது எடுக்கப்பட்ட காணொளி என்பதை உறுதிப்படுத்த முடிந்தது. இது குறித்த செய்தி இவ்வாண்டு செப்டம்பர் 28 அன்று ‘Republica’ செய்தித் தளத்தில் வெளியாகியுள்ளது.
https://myrepublica.nagariknetwork.com/news/water-level-of-narayani-river-crosses-danger-mark
மேலும், பெரும் குடியிருப்பு ஒன்றின் மீது வெள்ளம் பாய்வது போல பகிரப்படுகின்ற காணொளி ஜப்பானில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது எடுக்கப்பட்ட காணொளி என்பதையும் உறுதிப்படுத்த முடிந்தது. இது குறித்து ‘CNN’ செய்தி தளமானது செய்தி வெளியிட்டுள்ளது.
https://edition.cnn.com/videos/world/2021/07/03/japan-landslide-wang-ndwknd-vpx.cnn
ஆகவே, இலங்கையில் ஏற்பட்டுள்ள அனர்த்தங்கள் என சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட இக் காணொளிகள் வெளிநாடுகளில் ஏற்பட்ட அனர்த்தங்களின் போது எடுக்கப்பட்ட காணொளிகள் என்பதை FactSeeker உறுதிப்படுத்துகிறது.