இது இலங்கையில் ஏற்பட்ட அனர்தமல்ல : மெக்சிகோ சூறாவளிக் காணொளியாகும்

இது செப்டம்பர் மாதம் மெக்சிகோவில் ஏற்பட்ட ஜான் சூறாவளியின்போது பதிவாகியுள்ள காணொளியாகும்.
by Anonymous |
நவம்பர் 28, 2024

இலங்கையில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள அனர்த்தத்தினால் நாட்டில் பல்வேறு பிரதேசங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இது தொடர்பான பல காணொளிகளும், புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.இந்நிலையில்,வீடொன்று சரிவது போன்ற காணொளியொன்று சமூக வலைதளங்களில் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.
இந்த காணொளியை பலரும், இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தம் என்ற வகையில் தமது கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.எனினும், இக்காணொளியில் காணப்படும் சில இடங்கள் இலங்கையை ஒத்ததாக இல்லாத காரணத்தினால் FactSeeker இது குறித்து ஆராய்ந்தது.
இக் காணொளியில், நிறுவனம் ஒன்றின் பதாகையில் ‘Soriana’ என்ற பெயரை அவதானிக்க முடிந்தது. இது தொடர்பில் ஆராய்ந்த போது,’Soriana’ மெக்சிகோவில் உள்ள ஒரு மளிகை மற்றும் பல்பொருள் அங்காடி நிறுவனம் என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.
மேலும், Google Lens மூலம் இக்காணொளியை ஆராய்ந்ததில், இது மெக்சிகோவில் ஏற்பட்ட அனர்த்தமொன்றின் காணொளி என்பதை உறுதிப்படுத்த முடிந்தது. இக்காணொளி இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மெக்சிகோவில் ஏற்பட்ட ஜான் சூறாவளியின்போது பதிவாகியுள்ள காணொளியாகும்.
மேலும், இக்காணொளியை The Guardian செய்தித்தளம் தனது YouTube பக்கத்தில் வெளியிட்டிருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது.
ஆகவே, சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்ற இந்தக் காணொளியானது தற்போது இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தத்தின் போது பதிவுசெய்யப்பட்ட ஒன்றல்ல என்பதை FactSekker உறுதிப்படுத்துகின்றது.