அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான வைத்தியர் என பகிரப்படும் போலிப் புகைப்படம்

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான வைத்தியர் என பகிரப்படும் புகைப்படத்தில் இருப்பவர் வைத்தியர் பிரியா என்பதை factseeker இனால் கண்டறிய முடிந்தது.
by Anonymous |
மார்ச் 12, 2025

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியசாலை விடுதியில் கடந்த திங்கட்கிழமை (10) இரவு பெண் வைத்தியரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் பல்வேறு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.
இந்த மனிதாபிமானமற்ற சம்பவத்தை எதிர்கொண்ட மருத்துவரின் எந்தவொரு தனிப்பட்ட தகவல்களையும் அல்லது புகைப்படங்களையும் வெளியிட வேண்டாம் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் மருத்துவ சங்கங்கள் அனைத்து அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களையும் வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், ஹிரு கொஷிப் முகநூல் பக்கத்திற்கான பக்க வடிவமைப்பில் ஒரு பெண் மருத்துவரின் புகைப்படத்துடன் இந்த செய்தி சமூக வலைதளங்களில் பரப்பப்படுவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது. இது குறித்து ஆராய்ந்து பார்த்ததில் இவ்வாறு பகிரப்படும் புகைப்படத்தை பிரகாஷி ஜெயசேகர என்ற கணக்கு மூலம் பகிரப்பட்டுள்ளது.
இந்தப் பதிவை ஆராய்ந்ததில், இவ்வாறு பகிரப்படும் புகைப்படத்தில் இருப்பவர் வைத்தியர் பிரியா என்பதை கண்டறிய முடிந்தது. மேலும் வைத்தியர் பிரியா இது குறித்து தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்திலும் ஒரு பதிவை இட்டுள்ளார்.அத்துடன் இது குறித்து மேலும் பலரும் முகநூல் பக்கத்தில் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
https://www.facebook.com/share/p/1Hf8or2BbL/
மேலும், ஹிரு கொஷிப் பின் உத்தியோகபூர்வ பக்கத்தில் வெளியாகியுள்ளதைப் போன்று பகிரப்படும் குறித்த செய்தி தொடர்பில் ஹிரு கொஷிப் முகநூல் பக்கத்தில் ஆராய்ந்த போதும் அவ்வாறான பதிவுகள் எதுவும் கிடைக்கவில்லை.இருப்பினும்,வேறொரு கணக்கு மூலம் பகிரப்பட்ட ஒரு பதிவைக் கண்டுபிடிக்க முடிந்தது.
ஆகவே, ஹிரு கொஷிப் முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட செய்தியுடன் வைத்தியர் பிரியாவின் புகைப்படத்தை இணைத்து போலியாக தயாரிக்கப்பட்ட செய்தியோன்றே சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்றது என்பதை factseeker உறுதிப்படுத்துகின்றது.