Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #Misleading

அகமதாபாத் விமான விபத்து என தவறாக பகிரப்படும் பழைய காணொளிகள்

Misleading
Misleading

அகமதாபாத் விபத்து நடைபெறுவதற்கு முன் அவ்விமானத்தில் பயணித்தவர்கள் எடுத்ததாக பகிரப்படும் காணொளிகள், தற்போதைய அகமதாபாத் விமான விபத்துடன் சம்பந்தப்பட்டவை அல்ல.

by Anonymous |

ஜூன் 13, 2025

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் எயார் இந்தியா (Air India) விமான நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் ஒன்று நேற்று (12) விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290 ஐ கடந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இந்த விபத்து நடைபெறுவதற்கு முன் அவ்விமானத்தில் பயணித்தவர்கள் எடுத்ததாக கூறப்படும் சில காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுவரும் நிலையில், அவற்றை FactSeeker அவதானித்தது.

“குஜராத்தில் விழுந்து நொறுங்கிய விமானம்… பயணிகள் எடுத்த வீடியோ – மனதை உலுக்கும் காட்சி” என்ற தலைப்புடன் ஒரு காணொளியும், “பயணிகளின் இறுதி நொடிகள்” என்ற தலைப்புடன் மற்றொரு காணொளியும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

இக்காணொளிகள் அதிகமாக பகிரப்பட்டு வருவதால், அவற்றின் உண்மைத் தன்மையை FactSeeker ஆராய்ந்தது.

“குஜராத்தில் விழுந்து நொறுங்கிய விமானம்… பயணிகள் எடுத்த வீடியோ – மனதை உலுக்கும் காட்சி” என்ற தலைப்புடன் பகிரப்படும் காணொளியை Google Lens மூலம் ஆராய்ந்த போது, அது 2023 ஆம் ஆண்டு இடம்பெற்ற மற்றொரு விமான விபத்துடன் தொடர்புடையது என்பது தெரியவந்தது. குறிப்பாக, 2023 ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் திகதி நேபாளத்தின் போக்ரா நகரில் ஏற்பட்ட விமான விபத்துக்கு முன் அந்த விமானத்தில் பயணித்த ஒருவர் வெளியிட்ட Facebook நேரலையின் காணொளி என்பதை உறுதிபடுத்த முடிந்தது. இது குறித்து வெளியாகிய சமூக வலைத்தள பதிவுகள் மற்றும் செய்திகளையும் அவதானிக்க முடிந்தது.

  • https://tinyurl.com/tjjusx5d
  • https://www.aljazeera.com/news/2023/1/18/long-wait-for-family-of-indian-whose-nepal-crash-video-went-viral

மேலும், “பயணிகளின் இறுதி நொடிகள்” என்ற தலைப்புடன் பகிரப்பட்ட காணொளியை ஆராய்ந்தபோது, அது பாகிஸ்தானில் இடம்பெற்ற ஒரு சம்பவத்துடன் தொடர்புடையது என்பதும் தெரியவந்தது.

குறிப்பாக, இது கடந்த மே 24 ஆம் திகதி கராச்சியிலிருந்து லாகூர் நோக்கிப் புறப்பட்ட விமானம் கடுமையான புயலால் பாதிக்கப்பட்டபோது, அதில் பயணித்த ஒருவர் பதிவு செய்த காணொளி ஆகும். அந்த விமானம் கடுமையான கொந்தளிப்பை எதிர்கொண்டபோதும், எந்தவொரு பாதிப்பும் இல்லாமல் பாதுகாப்பாக தரையிறங்கியதாக இது குறித்து வெளியாகிய செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • https://tinyurl.com/cum5w8xy
  • https://timesofindia.indiatimes.com/world/pakistan/watch-panic-on-board-as-pakistani-plane-aborts-landing-amid-violent-sandstorm/articleshow/121405389.cms

கிடைத்த ஆதாரங்களின் படி, முதல் காணொளி 2023 ஆம் ஆண்டு நேபாளத்தின் போக்ரா நகரில் நிகழ்ந்த விமான விபத்தின்போது பதிவு செய்யப்பட்டது என்பதையும் இரண்டாவது காணொளி 2025 மே மாதம் பாகிஸ்தானில் கராச்சியிலிருந்து லாகூர் நோக்கி புறப்பட்ட விமானம் கடுமையான புயலால் பாதிக்கப்பட்ட நேரத்தில் ஒரு பயணியால் எடுக்கப்பட்ட காணொளி என்பதையும் உறுதிப்படுத்த முடிகிறது.

ஆகவே, அகமதாபாத்தில் நேற்று இடம்பெற்ற விபத்திற்கு முன்னர் விமானத்தில் பயணித்தவர்கள் எடுத்ததாக கூறப்படும் இக்காணொளிகள், தற்போதைய அகமதாபாத் விமான விபத்துடன் சம்பந்தப்பட்டவை அல்ல என்பதை FactSeeker உறுதிப்படுத்துகிறது.

Latest updates

#FAKE

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, மூன்றாம் சார்லஸ் மன்னரைச் சந்தித்ததாகப் பரவும் போலி புகைப்படம்

பிப்ரவரி 28, 2026

#TRUE

இந்தியப் பயணிகளுக்கு இப்போது விசா மற்றும் ETA இன்றி இலங்கைக்கு வரலாம்

பிப்ரவரி 17, 2026

#Misleading

உயிரிழந்த அயூப்ராஜ் அருள் பயாஸின் வயது 17 : பொலிசாரின் அறிக்கையிலேயே தவறு ஏற்பட்டுள்ளது

பிப்ரவரி 16, 2026

#false

இந்தோனேசிய வெள்ளம் எனப் பகிரப்படும் AI காணொளி

பிப்ரவரி 13, 2026

Related Content

உயிரிழந்த அயூப்ராஜ் அருள் பயாஸின் வயது 17 : பொலிசாரின் அறிக்கையிலேயே தவறு ஏற்பட்டுள்ளது

பிப்ரவரி 16, 2026

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட சிறுவனின் மனவேதனை என பகிரப்படும் காணொளி ஒரு பாடசாலை நாடகமாகும்

டிசம்பர் 18, 2025

நிபந்தனையின் பெயரிலேயே  அஜித் நிவார்ட் கப்ரால் விடுதலை செய்யப்பட்டார்.

டிசம்பர் 12, 2025

சிவனொளிபாதமலையில் மண்சரிவு அனர்த்தம் இடம்பெற்றமை உண்மையே

டிசம்பர் 2, 2025

நுகேகொடை பேரணியில் சாராயபோத்தல்கள் வழங்கப்பட்டதாக பகிரப்படுவது பழைய புகைப்படங்களாகும்

நவம்பர் 24, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2026 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection