ஆனந்தா கல்லூரிக்கு பிரதமர் ஹரிணி சென்றதற்கான காரணம் என்ன?

396 தேசிய பாடசாலைகளின் அதிபர்களை சந்திப்பதற்கு கல்வி அமைச்சில் போதிய இடமில்லாத காரணத்தினால் ஆனந்தா கல்லூரியின் குலரத்ன மண்டபம் தெரிவு செய்யப்பட்டது.
by Anonymous |
அக்டோபர் 4, 2024

இலங்கையின் புதிய பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய கொழும்பு ஆனந்தா கல்லூரிக்கு விஜயம் மேற்கொண்டமை குறித்து விமர்சிக்கும் பதிவுகள் சில சமூக வலைதளங்களில் பகிரப்படுவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.
“பாடசாலை விழாக்களுக்கு அரசியல்வாதிகளை அழைத்து வருவதை தவிர்க்குமாறு” ஹரிணி அமரசூரிய தெரிவித்ததை மேற்கோள்காட்டி விமர்சனங்கள் எழுந்துள்ளதால் factseeker இது குறித்து ஆராய்ந்தது.
பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்த கருத்து தொடர்பில் ஆராய்ந்ததில் இவர் இருமுறை இவ்வாறானதொரு கருத்தை தெரிவித்துள்ளார் என்பதை அறிய முடிந்தது.
“அரசாங்கம், பாடசாலைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் கட்டப்படும் கட்டிடங்களையோ அல்லது எதனையும் மீளத் திறக்க அரசியல்வாதிகள் தேவையில்லை” என விளையாட்டுத்துறை அமைச்சில் நடைபெற்ற அதிகாரிகள் கூட்டத்திலும் “பாடசாலைகளுக்கு மக்கள் பிரதிநிதிகளை வரவழைக்க வேண்டிய அவசியமில்லை” என புலமைபரிசில் பரீட்சை வினாத்தாள் தொடர்பில் இடம்பெற்ற கூட்டத்திலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் வெளியிட்டுள்ள செய்திகள் மற்றும் அறிக்கைகள்:
• https://www.facebook.com/share/v/Q74NdFXu3SDa5ycX/
இதன்படி, ஆனந்தா கல்லூரிக்கு பிரதமர் வருகைதந்தமை குறித்து கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தரவிடம் factseeker வினவிய போது, 396 தேசிய பாடசாலைகளின் அதிபர்களை சந்திப்பதற்கு கல்வி அமைச்சில் போதிய இடமில்லாத காரணத்தினால் ஆனந்தா கல்லூரியின் குலரத்ன மண்டபம் தெரிவு செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
மேலும், இது குறித்து ஆனந்தா கல்லூரியின் அதிபர் லால் திஸாநாயக்கவிடம் factseeker வினவிய போது, இது 5 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் அதிபர் சந்திப்பு எனவும் இதில் சிறுவர்கள் பங்குபற்றுவதில்லை எனவும் தெரிவித்தார்.
ஆகவே, கொழும்பு ஆனந்தா கல்லூரியில் இடம்பெற்ற தேசிய பாடசாலைகளின் அதிபர்கள் பங்குபற்றிய விசேட செயலமர்விலேயே பிரதமர் ஹரினி அமரசூரிய பிரதம அதிதியாக கலந்து கொண்டார் என்பதையும், இது பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்ட நிகழ்வு அல்ல என்பதையும் FactSeeker உறுதிப்படுத்துகிறது.